Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி?

பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி?

பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி?

பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி?

பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள கூடிய ஒரு நவீன அடையாளம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஒரு குறுநில மன்னராக இருந்த கெம்பே கவுடாவால் 1537- ஆண்டு, தற்சமயம் பெங்களூர் என்று அழைக்கப்படும் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொட்டிக்கல் நீர்வீழ்ச்சி

தொட்டிக்கல் நீர்வீழ்ச்சி

பெங்களூருவிலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சொர்ணமுகி நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திராத இந்த இடத்துக்கு வந்து நீங்கள் ஜாலியாக இருக்கலாம்.

ஏரியில் போட்டிங் செல்ல மறக்காதீர்கள்.

Manjukirans

தொட்டா ஆலத மரா

தொட்டா ஆலத மரா


இங்குள்ள ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையான ஆலமரமாகும்.

பெங்களூருலிருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆயிரம் விழுதுகள் வரை இந்த மரத்தில் இருக்கிறதாம்.


Krishansubudhi

மனவளக்கலை இடம்

மனவளக்கலை இடம்


பெங்களூரிலிருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பச்சை பசேல் அமைப்பில் கண்ணைக் கவரும் இது, இரவில் மின்னொளியில் ஜொலிக்கும்

பன்னார்கட்டா விலங்கியல் பூங்கா

பன்னார்கட்டா விலங்கியல் பூங்கா


பெங்களூரிலிருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

பட்டாம்பூச்சி பூங்கா, பாம்பு பூங்கா, குழந்தைகள் பூங்கா என்று பல்வேறு பூங்காக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

Kartikeya Pant

வொண்டர்லா கேளிக்கை பூங்கா

வொண்டர்லா கேளிக்கை பூங்கா

பெங்களூரிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த இடமாகும்,

Silver Blue

https://www.flickr.com/photos/cblue98/

ரித்யாகிராம்

ரித்யாகிராம்

பெங்களூரிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்திய கிளாசிக்கல் நடனம் பயிற்றுவிக்கும் இடமாகும்.


Pavithrah

ஹேசரகட்டா புல்வெளிகள்

ஹேசரகட்டா புல்வெளிகள்


பெங்களூரிலிருந்து 35 கிமீ தொலைவிலுள்ள இந்த இடம் சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் இடம் என்பதால் உங்களுக்கு அதிக தொந்தரவு இருக்காது.

kirankumar

இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி

இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி


பெங்களூருவிலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய படப்பிடிப்புத்தளமாகும்.

திரில் ரைடுகள், நீர் விளையாட்டுக்கள், டைனோ பூங்கா என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழும் வண்ணம் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

innovativefilmcity

பிரமிட் வேலி

பிரமிட் வேலி


39 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பிரமிட் வேலி 2005ம் ஆண்டு கட்டப்பட்டது.

தியானம் செய்ய சிறந்த இடமாக உள்ளது

pyramidvalley.org

 மஞ்சனபெல்லி நீர்த்தேக்கம்

மஞ்சனபெல்லி நீர்த்தேக்கம்

38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நீர்தேக்கத்திலிருக்கும் நீர் குடிநீராகவும், பயிர் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

Avoid simple2

ரஸ்தா கபே

ரஸ்தா கபே

பெங்களூரிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ரஸ்தா கபே.

3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அமைதியான அழகான பகுதியில் உள்ளது.

பியர்ள் வேலி

பியர்ள் வேலி


பெங்களூரிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பியர்ல் வேலி.

மிக அருமையான நீர்வீழ்ச்சி, சுற்றிலும் இயற்கை எழில் சூழ் தாவரங்கள், பசுமை நிறைந்தஇடம்.

en.wikipedia.org

வரடெனஹல்லி

வரடெனஹல்லி

பெங்களூரிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த வரடெனஹல்லி.

சவன்துர்க்கா மலைக்குன்றுகள்

சவன்துர்க்கா மலைக்குன்றுகள்


பெங்களூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

ஆசியாவில் மிகப்பெரிய ஒற்றை மலை என்னும் சிறப்புடையது.


arunganesh

மகாபோதி சொசைட்டி

மகாபோதி சொசைட்டி

கன்னட சினிமாவின் கோடம்பாக்கமாக அறியப்படும் பரபரப்பு மிகுந்த பெங்களூர் காந்திநகர் பகுதியில் அமைதியின் இருப்பிடமாய் திகழும் மகாபோதி சொசைட்டி அமைந்திருப்பது அதிசயமான ஒன்று. இந்த சொசைட்டி ஒரு பிரார்த்தனை கூடம், ஒரு ஸ்தூபம், ஒரு போதி மரம் அதனடியில் ஒரு புத்தர் சிலை என்று அதன் வளாகத்தில் நுழையும் எவரையும் தனி உலகத்துக்கே அழைத்துச் சென்று விடும்.

ஓம்கார் ஹில்ஸ்

ஓம்கார் ஹில்ஸ்

பெங்களூரின் அதிகம் அறியப்படாத பிக்னிக் ஸ்தலம் இந்த ஓம்கார் ஹில்ஸ். இந்த இடத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள அதிகாலை அல்லது அந்தி வேளையில் வரவேண்டும். அதாவது சூரிய உதயம் மற்றும் அஸ்த்தமன காட்சிகளை ஓம்கார் ஹில்ஸ்ஸிலிருந்து பார்த்து ரசிப்பது அற்புதமான அனுபவம்.

இதெல்லாவற்றையும் விட ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணியோசை எழுப்பும் பிக்பென் கடிகாரத்திற்கு பிறகு உலகின் மிகப்பெரிய கடிகாரமாக கருதப்படும் கடிகாரம் ஒன்று கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஓம்கார் ஹில்ஸ் செல்வதற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் மற்றும் கே.ஆர் மார்கெட் (கலாசிபாளையம்) பேருந்து நிலையங்களிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


Sagar Sakre

Read more about: travel trip bangalore karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X