Search
  • Follow NativePlanet
Share
» »ஜார்க்கண்ட்டில் கட்டாயம் காணவேண்டிய 10 மலைப்பிரதேசங்கள்

ஜார்க்கண்ட்டில் கட்டாயம் காணவேண்டிய 10 மலைப்பிரதேசங்கள்

ராஞ்சி நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. அது தவிர ஜாம்ஷெட்பூர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் வணிகக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் இதர முக்கியமான நகரங்க

By Udhaya

ராஞ்சி நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகராக விளங்குகிறது. அது தவிர ஜாம்ஷெட்பூர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் வணிகக்கேந்திரமாகவும் திகழ்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் இதர முக்கியமான நகரங்களாக தன்பாத், பொக்காரோ மற்றும் ஹஸாரிபாக் போன்ற நகரங்கள் அமைந்திருக்கின்றன. 'காடுகளின் பூமி' என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஜார்கண்ட் மாநிலம் தன்னுள்ளே மனிக்கரங்கள் தீண்டாத இயற்கை வளத்தை வாய்க்கப்பெற்றிருக்கிறது. பசுமை மாறாக்காடுகள், அலையலையாய் மடிந்து கிடக்கும் மலைகள், பாறைப்பாங்கான பீடபூமி பிரதேசங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பல்வேறு எழில் அம்சங்களுக்கு இந்த மாநிலம் புகழ் பெற்றுள்ளது.

 ராஞ்சி மலைப்பகுதி

ராஞ்சி மலைப்பகுதி

ஜார்க்கண்ட்டின் தலைநகரான ராஞ்சியில் இருக்கும் மலைப்பகுதி இங்கு இருக்கும் சுற்றுலாப் பகுதிகளில் மிக முக்கியமானது ஆகும்.

இங்குள்ள நீர்வீழ்ச்சிகளுக்காக இந்த இடம் பெயர் பெற்றதாகும். இந்த மலை உங்கள் கண்களுக்கு இயற்கை விருந்தளிக்கும். உங்கள் மனதை குளிரூட்ட இயற்கை பூமிக்கு தந்த கொடை அது.

என்னவெல்லாம் இருக்கு

ராஞ்சி மலை, குட்ரு நீர்வீழ்ச்சி, தாசம் நீர்வீழ்ச்சி, ஜான்ஹா அருவி, ராஞ்சி ஏரி, பாகாரி மந்திர், ஜகநாத் கோயில், பிர்சா விலங்கியல் பூங்கா, காங்கே அணை, ராக் தோட்டம், மான் பூங்கா ஆகியன.

எப்படி செல்வது

ராஞ்சிக்கு நிறைய பேருந்து, ரயில் வசதிகள் உள்ளன. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் தலைநகரங்களிலிருந்து எளிதில் செல்லமுடியும்.

வாடகை கட்டண ஆட்டோக்கள் மூலம் ராஞ்சியிலிருந்து மலைக்கு செல்ல முடியும்.

எப்போது செல்லலாம்

செப்டம்பரிலிருந்து மே மாத இறுதி வரை இங்கு செல்வது சிறப்பு

Skmishraindia

நேதர்கட் மலைப்பகுதி

நேதர்கட் மலைப்பகுதி

காட்டு விலங்குகளைக் காண சிறந்த இடம்

காடுகளின் ராணி என ஜார்க்கண்ட்டில் அழைக்கப்படும் பூங்கா இது

காடு என்பதால் அடர்ந்த பசுமையான மரங்கள் உங்களுக்கு சுற்றுலா அம்சங்களாக நிற்கின்றன.

சூரிய உதயம் மற்றும் மறைவு ஆகியவற்றை இங்கு நீங்கள் ரசிக்கலாம்.

என்னவெல்லாம் இருக்கு

மேக்னோலியா காட்சிமுனை, மேல் மற்றும் கீழ் காக்ரி நீர்வீழ்ச்சி, லோத் அருவி, கோயல் காட்சி முனை, சத்னி அருவி என நிறைய காணப்படுகின்றன.

எப்படி செல்வது

ஜார்க்கண்ட் சென்ட்ரலிலிருந்து 168 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் எளிதில் இந்த இடத்தை அடையலாம்.

எப்போது செல்லலாம்

வருடம் முழுவதும் இந்த இடத்துக்கு போகலாம். கோடை விடுமுறையில் அதிக அளவில் மக்கள் வருவார்கள்.

Ujjawalagrawal2

 கிரிதிஹ் மலைப்பகுதி

கிரிதிஹ் மலைப்பகுதி

மலைகளில் பகுதி என்று அழைக்கப்படும் இந்த பகுதி, மிகவும் அழகாக இருக்கும். பரஸ்னாத் மலை எனும் ஜார்க்கண்ட்டின் மிக உயர்ந்த சிகரம் இந்த மலையில் தான் உள்ளது.

மகுவா, ஷிமுல், பலஸ் உள்ளிட்ட அரிய வகை மரங்களை இங்கு காணலாம்.

என்னலாம் பாக்கலாம்

பரஸ்னாத் மல, உஸ்ரி அருவி, மதுபன், கான்டோலி பூங்கா, ஜெய்ன் அருங்காட்சியகம், ஜார்க்கண்டி தம் என நிறைய இடங்கள் இருக்கின்றன.


எப்படி செல்வது

ஜார்க்கண்ட் சென்ட்ரலில் இருந்து 173 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கிர்திஹ். பொதுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளிலும் பயணித்து இந்த இடத்தை அடைய முடியும்.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே முடிய உள்ள காலம் இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.


CaptVijay

 காட்ஷிலா மலைப்பகுதி

காட்ஷிலா மலைப்பகுதி

சுபர்நேகா ஆற்றுக்காகவே இந்த இடத்துக்கு பயணம் செய்யலாம். காலுதிஹ் எனும் இடம் இங்கு முக்கிய சுற்றுலா மையமாக பார்க்கப்படுகிறது. இங்கு உருவாக்கப்பட்ட செயற்கை அணை புருடி அணை ஆகும்.

என்னவெல்லாம் இருக்கு

புருடி ஏரி, புல்டுங்க்ரி மலைகள், தாரகிரி அருவி,. காலுதிஹ் அணை, கௌரிகுன்ஜ், ராண்கினி மந்திர்

எப்படி செல்வது

ஜார்க்கண்ட் சென்ட்ரலிலிருந்து 203 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். பேருந்து ரயில்கள் மூலம் இந்த இடத்தை அடையலாம்.

எப்போது செல்வது

அக்டோபர் முதல் மார்ச் மாத தருவாயில் இந்த இடத்துக்கு செல்லலாம்

Pinakpani

ஹஜாரிபாக் மலைப்பகுதி

ஹஜாரிபாக் மலைப்பகுதி

கான்கேரி மலை, பார்சோ பானி குகை, கசாரிபாக் ஏரி, தேசிய பூங்கா, அஸ்கோ ராக் ஆர்ட், கோனார் அணை, பத்ரகாளி கோயில் என இந்த இடத்தைச் சுற்றி நிறைய இடங்கள் இருக்கின்றன.

எப்படி செல்வது

ஜார்க்கண்ட் சென்ட்ரலிலிருந்து 77 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மே மாதம் முடிய

Pic Boy 101

தியோகர்

தியோகர்

பாபா பைத்யநாத் கோயில், திரிகுட்டா மலை, சத்சங்கா ஆஸ்ரமம், மயூரா ஆறு, நாதன் பகர், ஹாதி பஹார் என நிறைய இடங்கள் இந்த மலைப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இங்கு செல்ல சிறந்த காலமாகும்.

Tarunsamanta

ஜாம்ஸெட்பூர்

ஜாம்ஸெட்பூர்

தால்மா மலைகள், திம்னா ஏரி, ஜூப்ளி பூங்கா, ரசி மோடி, டாடாஸ்டீல் விலங்கியல் பூங்கா, பார்சி தீ கோயில் என நிறைய இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

எப்படி செல்வது

ஜாம்ஷெட்பூரிலிருந்து 165 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது ஜார்க்கண்ட் சென்ட்ரல். இங்கிருந்து நிறைய பேருந்து, வாடகை டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன.

எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் இங்கு செல்ல ஏற்ற காலமாகும்.

Shahbaz26

பலமு மலைப்பகுதி

பலமு மலைப்பகுதி

டால்டன்கன்ஜில் அமைந்துள்ள இந்த பலமு மலைப்பகுதி கண்கொள்ளா காட்சிகளை கொண்டது.

இங்கு பாலமு கோட்டை, பெல்டா தேசிய பூங்கா, கோயல் ஆறு, லோத் அருவி, யானை, புலி, மான் என நிறைய பார்க்கலாம்.

எப்படி செல்வது

ஜார்க்கண்ட் சென்ட்ரலிலிருந்து 198கிமீ தொலைவில் அமைந்து உள்ளது இந்த பலமு.

எப்போது செல்வது

அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலமாகும்.

Marlisco

தன்பத் மலைப்பகுதி

தன்பத் மலைப்பகுதி

தாங்கிரி மலை, மைத்தான் அணை, பான்செட் அணை, டாப்சான்சி ஏரி, பாட்டின்டா அருவி என நிறைய இடங்கள் இந்த மலைப் பகுதியில் காணப்படுகின்றன.

எப்படி செல்வது

தான்பாத் ஜார்க்கண்ட் சென்ட்ரலிலிருந்து 204 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

எப்போது செல்வது

வருடத்தின் எல்லா நாட்களிலும் பயணிக்கலாம்

Smeet Chowdhury

 கிரிபுரு மலைப்பகுதி

கிரிபுரு மலைப்பகுதி

கிரிபுரு மலைப்பகுதி சிறிய இடம் என்றாலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடம். இந்த இடத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு இருக்கும் மெக்தாபுரு மலை, சரன்டா காடுகளுக்கும் பயணிக்கின்றனர்.

எப்படி செல்வது

ஜார்க்கண்ட்டிலிருந்து 295கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மலை. வாடகை கார் அல்லது டாக்ஸிக்கள் மூலம் இந்தஇடத்தை அடையலாம். மேலும் சந்திப்பு ரயில்நிலையம், பொதுப் போக்குவரத்து மூலமாகவும் பயணிக்க முடியும்.

எப்போது செல்வது

ஜீலை முதல் டிசம்பர் வரையிலான காலம் இங்கு வருகை தர சிறந்த காலமாகும்.

Eddyvishal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X