Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?

சென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?

சென்னைல ரைடுக்கு ஏற்ற தலம் எங்க பாஸ் இருக்கு-ன்னு விசயம் தெரியாதவராக நீங்க இருந்தா இந்த வீக்கெண்டுக்கு சென்னை அருகே உள்ள இந்த தீவுக்கு ஜாலியா நண்பர்கடுடன் ஒரு டிரிப் போய்ட்டு வாங்க.

சென்னைவாசிகள் வீக்கெண்ட் சுற்றுலா என முடிவெடுத்தவுடன் பெரும்பாலும் தேர்வு செய்வது மெரினா, பெசண்ட் நகர், அல்லது ஷாப்பிங் மால்கள் தான். சென்னைல வேற என்ன பாஸ் இருக்கு-ன்னு விசயம் தெரியாதவராக நிங்க இருந்தா இந்த வீக்கெண்டுக்கு சென்னை அருகே உள்ள இந்த தீவுக்கு ஜாலியா நண்பர்கடுடன் ஒரு டிரிப் போய்ட்டு வாங்க.

சென்னை - சோழவரம்

சென்னை - சோழவரம்


சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழவரம் ஏரி. சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள இது அப்பகுதியில் மிகப் பிரலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி பார்ப்பதற்கு அணை போன்ற தோற்றமளிப்பளிப்பது வியப்பே. சென்னையில் உள்ள ஏரிகளிலேயே இது மிகப் பெரிய ஏரியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த சோழவரம் ஏரி சுற்றுலாத் தலமாகவும் காட்சியளிக்கிறது.

Puzhal2015

சோழவரம் - கும்மிடிப்பூண்டி

சோழவரம் - கும்மிடிப்பூண்டி


ஆந்திர மாநில எல்லையோரம், தமிழக எல்லைக்கு உட்பட்ட இடத்தில், பரந்து விரிந்து கிடக்கும் ஓர் பகுதிதான் கும்மிடிப்பூண்டி. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, ஆந்திர எல்லை பகுதியை ஒட்டியுள்ளது ஏழு கண் பாலம். பாலத்தின் இரு புறத்திலும், பரந்து விரிந்துள்ள நீர்த்தேக்கம், கண்களை கவரும் வகையில், ரம்மியத் தோற்ம் கொண்டது. மழைக்காலங்களில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை மற்றும் மாநெல்லூர் ஏரியின் உபரி நீர், 20 கிலோ மீட்டர்கடந்து இந்த இடத்தில் தான் பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள உப்பங்கழியுடன் கலக்கிறது.

கும்மிடிப்பூண்டி - சுல்லூர்பேட்டை

கும்மிடிப்பூண்டி - சுல்லூர்பேட்டை


கும்மிடிப்பூண்டி அடுத்து எளவூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கான எல்லை தொடங்குகிறது. சென்னை- விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்தால் ஆந்திராவிற்கு உட்பட்ட சுல்லூர்பேட்டையை அடையலாம். செல்லும் வழியிலேயே வலது புறத்தில் புலிகேட் ஏரி பிரம்மிப்பை ஏற்படுத்தும். ஏரியின் நடுவே அமைந்துள்ள தீவுகளும் சற்று வியப்பாகவே இருக்கும்.

Raj

சுல்லூர்பேட்டை - புலிகேட் ஏரி

சுல்லூர்பேட்டை - புலிகேட் ஏரி


ஆந்திராவிற்கு உற்பட்ட இந்த புலிகேட் ஏரி பார்ப்பதற்கு வங்காள விரிகுடாவுடன் இணைந்த கடல் பகுதி போன்றே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு பெரியது. இந்த ஏரியின் உள்ளேயே திட்டுத்திட்டாக பல தீவுகள் இருப்பதை காண முடியும். இவற்றின் பின்னால் ஓர் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் வரலாறே உள்ளது.

Manvendra Bhangui

புலிகேட் ஏரி

புலிகேட் ஏரி


இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி என்ற பெருமை கொண்டுள்ளது புலிகேட் ஏரி. இதன் வடக்கே சுவரணமுகி ஆறும் வடமேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் மற்றும் சில ஓடைகளும் இந்த ஏரியில் இணைகின்றன.

Lalithamba

பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்


புலிகேட் ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சுற்றியுள்ள நீர்ப் பறவைகளுக்கும், சீசன் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து இடம் பெயரும் பறவைகளுக்கும் புகழிடமாக உள்ளது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை இடையில், ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு தானே.

shrikant rao

டச்சுவின் கோட்டை

டச்சுவின் கோட்டை


டச்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் புலிகேட் பகுதி இருந்துள்ளதாக வரலாறு உள்ளது. அதிலும் புலிகேட் இவர்களின் டச்சுக்களின் தலைநகரமாக செயல்பட்டுள்ளது. அவர்களின் முன்னோர்கள் இறப்பின்பொழுது இங்கு கல்லறைகள் எழுப்பப்பட்டது. இன்றும் அக்கல்லறைகள் ஓர் சிற்றுலாத் தலமாகவே உள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யம்

விஜயநகர சாம்ராஜ்யம்


டச்சுக் காரர்களின் ஆட்சிப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் இருந்தபோது இங்கு அதிகமான அளவில் ஆன்மீகத் தலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தற்போது ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சிதிலமடைந்த நிலையில் வரலாற்றை நினைவு கூறுகிறது.

McKay Savage

அதிர்ச்சியூட்டும் ஆதிநாராயண கோவில்

அதிர்ச்சியூட்டும் ஆதிநாராயண கோவில்


ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் சாதாரண கருங்கல்லினாலும், செங்கற்களினாலும் கட்டப்பட்டது இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இக்கோவில், லேட்ரைட் என்னும் ஒருவித சிவப்பு நிறக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியக் கூடத்தில் ராமாயணக் காட்சிகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியை நோக்கி சுற்றுலா செல்ல ஈர்க்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X