Search
  • Follow NativePlanet
Share
» »புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!

புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!

புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!

'காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் புல்வாமா மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழகிய மாவட்டமாகும்.

புல்வாமா மாவட்டம் மாநிலத்தின் கோடைகால தலைநகர் ஸ்ரீ நகரில் இருந்து 40 கிமீ தொலைவிலேயே உள்ளது. 1979-ல் மாவட்ட அந்தஸ்து பெற்ற புல்வாமா, முந்தைய காலங்களில் பன்வாங்கம் என்றும், பிறகு புல்காம் என்றும் அழைக்கப்பட்டு வந்த நகரமாகும். இந்த மாவட்டத்தின் மிகவும் பிரபலமான வரலாற்று சுற்றுலா தலமான முகலாய சாலைக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.

அழகிய சுற்றுலாத் தளங்கள்

அழகிய சுற்றுலாத் தளங்கள்

அஹர்பால் நீர்வீழ்ச்சி, ஷிகர்கா, அரிபால் நாக், ஹுர்போரா மற்றும் தார்சார் மற்றும் மார்சார் ஏரிகள் இம்மாவட்டத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளை படையெடுக்க வைக்கும் சுற்றுலா தலங்களாகும்.
Haadi784

ஆன்மீகச் சுற்றுலா

ஆன்மீகச் சுற்றுலா

குங்வாட்டன் மற்றும் நாக்பெரான் ஆகியவை இங்குள்ள பிற சுற்றுலா தலங்களாகும். பேயர் கோவில், அவந்தீஸ்வரர் கோவில், ஷா ஹம்தான் வழிபாட்டுத்தலம் மற்றும் சையது ஹாசன் மன்டாக்கி வழிபாட்டுத்தலம் ஆகியவை இங்குள்ள முக்கியமான மதத்தலங்களாகும். ஜும்மா மசூதி ஷோபியான் மற்றும் ஆசார் ஷரீஃப் பிஞ்சோரா ஆகியவை புல்வாமாவிலுள்ள பிற மதத்தலங்களாகும்.

Hajra Amin

ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா

ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா

புல்வாமா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக ஆசார் ஷரீஃப் பிஞ்ஜுரா அறியப்படுகிறது. இந்த ஆலயத்தில் முகம்மது நபியின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை யாவும் விஷேச நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். மேலும் இந்த ஆலயத்துக்கு வரும் பயணிகள் இங்கு அமைந்திருக்கும் அழகிய அருவியையும் கண்டு ரசிக்கலாம்.

Gowharwani313

அவந்தீஸ்வரர் கோவில்

அவந்தீஸ்வரர் கோவில்

புல்வாமா மாவட்டத்திலுள்ள ஜாவ்ப்ராரி கிராமத்தில் உள்ள அவந்தீஸ்வரர் கோவில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மத தலங்களுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.

இந்து மதத்தில் காக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் மாக விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளாக குறிப்பிடப்படும் சிவ பெருமான் ஆகியோரின் கோவில்கள் இங்குள்ளன. கி.பி.9-ம் நூற்றாண்டில், உட்பால வம்சத்தின் முதன் அரசரான, ராஜா அவந்திவர்மன் என்பவர் இந்த கோவில்களைக் கட்டி புல்வாமாவை தனது தலைநகரமாக மாற்றிக் கொண்டார்.

தற்பொழுது சிதைவுகளுக்கிடையில் உள்ள இந்த கோவிலை கட்டுவதற்கு மணற்பாறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் புதைந்து கிடந்த இந்த கோவிலை கி.பி.18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தோண்டி எடுத்தனர். இந்த அகழ்வாராய்ச்சியின் போது அவர்கள் சில தொல்பொருட்களையும் எடுத்தனர்.

Jimmyeager

ஷிகர்கா

ஷிகர்கா

புல்வாமா மாவட்டத்திலுள்ள ட்ரால் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சுற்றுலா தலம் தான் ஷிகர்கா. ஜம்மு காஷ்மீரின் கடைசி அரசரான மகாராஜா ஹரிசிங், இந்த இடத்திற்கு வேட்டையாடுவதற்காக வருவார்.

Biswajit Majumdar

அரிபால் நாக்

அரிபால் நாக்

புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரத்திலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான நீரூற்றுதான் அரிபால் நாக் என்பதாகும். வாட்சூர்-வான் என்றழைக்கப் படும் சிறிய மலையின் ஒரு பகுதியிலிருந்து இந்த நீரூற்று ஊற்றெடுக்கிறது. இந்த நீரூற்றின் தண்ணீர் குடிக்கவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது

shuhaab

ஹுர்போரா

ஹுர்போரா


புல்வாமாவிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஷோபியான் தாலுக்காவில் உள்ள அற்புதமான சுற்றுலாதலமாக ஹுர்போரா உள்ளது. பிரபலமான முகலாய சாலையில் கண்கவரும் சுற்றுச் சூழலிற்குப் பெயர் பெற்றவாறு அமைந்திருக்கும் இந்த இடத்தை சுற்றுலாப் பயணிகள் கார் அல்லது பேருந்துகளில் எளிதில் அடைந்து விட முடியும்

Maxx786

Cover PC: Ssk 004

Read more about: kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X