Search
  • Follow NativePlanet
Share
» »சினிமா வெறியரா நீங்க ? அப்ப இதப் படிங்க!!

சினிமா வெறியரா நீங்க ? அப்ப இதப் படிங்க!!

By Staff

தமிழர்களுக்கு என்ன பிடிக்கும், எதில் அர்வம் காட்டுவார்கள் என்றால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும். இங்கு ரெண்டே ரெண்டுதான் செல்லுபடியாகும் 1. சினிமா 2. அரசியல். ஆகையால் மாறுதலுக்கு ஒரு சினிமா சம்பந்தப்பட்ட இடத்திற்குச் செல்லலாம்.

கமல் பல பேட்டிகளில் வருத்தப்பட்டுச் சொல்வார் : எந்தவொரு வேலைக்குப் போக வேண்டுமென்றாலும் படித்தபின்தான் செல்ல வேண்டும் என்று நம்புகிறார்கள்; அது சம்பந்தப்பட்ட படிப்பையும் படிக்கிறார்கள். ஆனால், சினிமாவிற்கு வர வேண்டுமென்றால் மட்டும் எதையும் தெரிந்துகொள்ளாமல், வெறும் படம் பார்த்ததை மட்டும் தகுதியாக கொண்டு சினிமா எடுக்க வேண்டும் என்று வந்து விடுகிறார்கள்.

Vasanth

Photo Courtesy : Arun Mo

மணி ரத்னம் யாரிடமும் உதவி இயக்குனராய் வேலை செய்யவில்லை. இருந்தாலும், மணிக்கணக்கில் ப்ரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் எண்ணற்ற சினிமா நூல்களைப் படித்து அதற்குப்பின் இயக்குனராய் ஆனார்.

ஆனால், தமிழில் படிக்க விரும்புவர்களுக்கு எப்படி ப்ரிட்டிஷ் கவுன்சில் செல்ல முடியும் ? ஏற்கனவே, தமிழில், சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் குறைவு. இதனால், போதிய புத்தக கடைகளும் இல்லை.

இந்தக் குறை இப்போது தீர்ந்திருக்கிறது : வடபழனியில் Pure Cinema என்ற பேரில் புதிதாக சினிமா புத்தக கடையை அருண் என்ற இளைஞர் திறந்திருக்கிறார். தமிழகத்திலேயே சினிமாவிற்கென்று ஒரு புத்தக கடை இருப்பது இதுதான்.

Cinema

Photo Courtesy : Arun Mo

முழுக்க முழுக்க அயல் நாட்டு சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள்தான் இங்கிருக்கும் என்று எண்ண வேண்டாம். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களில் சொற்பமே ஆங்கிலத்தில், மீதி அனைத்தும் தமிழில். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல் போன்ற பெரிய நடிகர்களைப் பற்றி புத்தகங்கள் இருக்கின்றன. இதுதவிர சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகள், ஆவணப்பட டிவிடிகளும் இருக்கின்றன.

அருணின் வருத்தம் தமிழில் ஆவணப்படங்களைப் பற்றிய‌ போதிய விழிப்புணர்வு இல்லாதது. எடுக்கப்படும் சில ஆவணப்படங்களையும், அடுத்த தலைமுறையினர்காக, காப்பகத்தில் வைக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லாதது.

இவர் படச்சுருள் என்ற சினிமா பத்திரிகையும் நடத்துகிறார். வார இறுதியில், உலக சினிமாக்களை இலவசமாக திரையிடுகிறார்.

அருணைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். அருண் 30 வயது இளைஞர். பெரும்பாலான இளைஞர்களைப் போலவே மென்பொருள் சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்தார். சிறிது காலம் அந்தத் துறையில் வேலை செய்தார்; ஆனால், மனம் முழுக்க சினிமாவில். விளைவு அருணும் அவரது நண்பர் குணாவும் தமிழ் ஸ்டுடியோ என்ற வலைதளத்தை ஆரம்பித்தனர். குறும்படம் எடுக்க விரும்புவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவது, சினிமா கருத்தரங்களை நடத்துவது, மாற்று சினிமாவைப் பற்றி பேச இயக்குனர்கள், எழுத்தாளர்களை அழைத்து வருவது என்று பல பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.

நீங்களும் சினிமா விரும்பியா ? அப்போது ஒரு நடை வடபழனி வரை சென்று உங்களுக்கான புத்தகத்தை தேடுங்கள்!!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X