Search
  • Follow NativePlanet
Share
» »புஷ்கர்- நீங்கள் இப்படி ஒன்றை வாழ்க்கையில் பார்க்கவே முடியாது

புஷ்கர்- நீங்கள் இப்படி ஒன்றை வாழ்க்கையில் பார்க்கவே முடியாது

குளிர்ச்சியூட்டும் மலைகளோ, காலாற நடந்து செல்ல கடற்கரைகளோ இல்லை என்றாலும் அதி உன்னதமான ராஜ கலாசாரத்தையும், தன் புவி அமைப்புக்கு தகுந்த இயல்பான நடவடிக்கைகளில் கொண்டாட்டத்தை புகுத்தியும் இந்தியாவின் தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக ஜொலிக்கும் இடம் ராஜஸ்தான். அம்மாநிலத்தில் உள்ள புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் உலகின் மிகப்பெரிய கால்நடைச்சந்தை கூடுகிறது. ஐந்து நாட்கள் கலைகட்டும் இந்தச்சந்தையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய கால்நடைச்சந்தை:

புகைப்படம்: Pushkar Fair

உள்நாட்டு விமானங்களில் 15% கட்டண சலுகையை பெற இங்கே கிளிக்கவும்.

கார்த்திகை ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் இந்த புஷ்கர் கால்நடைத் திருவிழா நடைபெறுகிறது. ஏறத்தாழ 50,000 ஒட்டகங்கள் விற்பனைக்காக இங்கே கொண்டு வரப்படுகின்றன. இது தவிர ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை போன்றவையும் இங்கே தனித்தனியாக நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் வரை இங்கே வருகின்றனர்.

பாலைவனக் கப்பல்:

புகைப்படம்: By mantra_man

இங்கு விற்பனைக்காக வரும் ஒட்டகங்கள் ஒரு மணப்பெண்ணுக்கு நிகராக அலங்கரிக்கப்படுகின்றன. ஓட்டப்பந்தயம், நடனம் போட்டிகளில்(ஆம்! ஒட்டக நடனப் போட்டி) வெற்றி பெரும் நல்ல ஆரோக்கியமான , இளமையான ஒட்டகம் ஒன்று பத்து லட்சம் வரை விலை போகிறது.

சந்தையில் நடக்கும் கூத்துகள்:

புகைப்படம்: Sumith Meher

கால்நடை சந்தை தவிர இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு என்றே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கயிறு இழுத்தல், உரியடி, வெளி நாட்டவரும் இந்தியர்களும் மோதும் கபடிப்போட்டி, மற்றும் நீளமான மீசை வைத்திருப்பவர்களுக்கான மீசை போட்டியும் இங்கே நடக்கிறது. மாலை நேரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 2014ஆம் ஆண்டிற்கான புஷ்கர் கால்நடை சந்தை அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை நடக்கவிருக்கிறது.

புனித நீராடல் :

புஷ்கர்- நீங்கள் இப்படி ஒன்றை வாழ்க்கையில் பார்க்கவே முடியாது

புகைப்படம்: alenka_getman

புஷ்கரில் கால்நடைச்சந்தை நடக்கும் கார்த்திகை பௌர்ணமி அன்று படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால் இங்கு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் குளத்தில் புனித நீராட ஏராளமான யாத்திரிகர்களும் புஷ்கருக்கு வருகை தருகின்றனர்.

எப்படி அடையலாம் புஷ்கரை ?

புஷ்கருக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் அஜ்மீர். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இங்கு நேரடி ரயில்கள் உள்ளது. புஷ்கருக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் ஜெய்ப்பூரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து டாக்ஸி மூலம் புஷ்கரை வந்தடையலாம்.

Read more about: pushkar rajasthan november 2014
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X