Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரை எது தெரியுமா ?

இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரை எது தெரியுமா ?

கடற்கரைகளுக்கு போவது மனதுக்கு எப்போதுமே உற்சாகம் தரக்கூடிய ஒரு விஷயமாகும். வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சலில் இருந்தும், பரபரப்பான நகர வாழ்கையில் இருந்தும் தற்காலிகமாக விடுதலை பெற்று தனிமையை கொண்டாடவும், மனதுக்கு பிடித்தவருடன் கொஞ்சல் மொழி பேசவும் கடற்கரைகளை விடவும் நல்ல இடம் இருக்க முடியாது.

பொதுவாக நமக்கு தெரிந்த கடற்கரைகளில் குப்பைகள் நிறைந்திருக்கும், கடற்கரை நெடுகிலும் சிறு பொருள் விற்பவர்கள் மொய்த்துக் கொண்டிருப்பார்கள், இவை தவிர இன்னும் பல சங்கதிகள் நடைபெறும். கொஞ்சம் காற்று வாங்கவும், கடலை ரசிக்கவும் இவைகளையெல்லாம் பொறுத்துக்கொள்வதை தவிர வேறு வழியும் நமக்கு இல்லை.

ஆனால், இதுபோன்ற தொந்தரவுகள் எதுவும் இல்லாமல் அற்புதமான இயற்கை காட்சிகளுடன் வாழ்கையில் ஒருமுறையேனும் கட்டாயம் செல்லவேண்டிய இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரையை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

வங்காள விரிகுடாவில் இருக்கும் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் தீவுக்கூட்டங்களில் உள்ள ஹெவ்லொக் தீவில் அமைந்திருக்கும் 'ராதாநகர் கடற்கரை' தான் இந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரையாக சொல்லப்படுகிறது.

Photo:mOTHrEPUBLIC

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அழகுடையாத இருக்கிறது இந்த கடற்கரை. சற்றும் மாசுபடாத வெள்ளை மணல், வானம் கீழிறங்கி வந்ததுபோல நீல நிறத்தில் இருக்கும் கடல், கடற்கரையை ஒட்டியே பசுமை நிறைந்த காடுகள் என ஒரு இயற்கை சொர்க்கமாகும் இந்த ராதாநகர் கடற்கரை.

Photo:Ankur P

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த கடற்கரையில் நின்று சூரிய உதயம் மற்றும் அஸ்த்தமனத்தை காண்பது நிச்சயம் நம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத இனிய நினைவாக இருக்கும். சூரியனின் பொன்னிற கதிர்கள் வெள்ளை மணலில் பிரதிபலிப்பது கொள்ளை அழகாக இருக்கும்.

Photo:Algae Rhythm

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த கடற்கரையானது பிரபல டைம்ஸ் பத்திரிக்கையால் ஆசியாவின் சிறந்த கடற்கரையாகவும், உலகின் ஏழாவது மிகச்சிறந்த கடற்கரையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Photo:Algae Rhythm

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த கடற்கரையில் கடலின் சீற்றம் குறைவாக இருப்பதால் கடலில் குளிப்பதற்கும் இந்த கடற்கரை சிறந்ததொரு இடமாக சொல்லப்படுகிறது. சில நேரங்களில் இந்த கடற்கரையில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே குளிக்கும் முன் சுற்றுலாபயணிகள் அதனை கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியமாகும்.

Photo:Algae Rhythm

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

2 கி.மீ நீளம் கொண்ட இந்த கடற்கரையானது ஹெவ்லொக் தீவின் துறைமுகத்தில் இருந்து 12கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவம்பர் - மார்ச் வரையிலான காலகட்டத்தில் இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

Photo:Joseph Jayanth

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

வேறு எந்த கடற்கரையிலும் இல்லாத ஒரு அம்சமாக இந்த ராதாநகர் கடற்கரையில் நாம் யானையின் மீது அமர்ந்து சவாரி செய்யலாம். மேலும் செறிவான கடல் வளத்தை கொண்டுள்ள இந்த பகுதியில் ஸ்கூபா டைவிங் விளையாட்டும் நடத்தப்படுகிறது.

Photo:Algae Rhythm

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவில் இந்த ராதாநகர் கடற்கரையை தவிரவும் எலிபெண்டா பீச், கல்பதர் கடற்கரை போன்ற இடங்களும் இருக்கின்றன. இந்த தீவை அந்தமான் & நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து 57 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. போர்ட் பிளேரில் இருந்து அரசு மற்றும் தனியாரினால் இயக்கப்படும் கப்பல்கள் மூலம் இந்த தீவை அடையலாம்.

Photo:Algae Rhythm

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

தேனிலவு செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த ராதாநகர் கடற்கரை சொல்லப்படுகிறது.உங்கள் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ எங்கேனும் நல்லதொரு இடத்திற்கு சுற்றுலா விரும்பினால் நிச்சயம் இந்த ஹெவ்லொக் தீவில் இருக்கும் ராதா நகர் கடற்கரைக்கு வாருங்கள்.

Photo:Sareeta

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

ஹெவ்லொக் தீவு, அந்தமான் :

இந்த ஹெவ்லொக் தீவில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Ankur P

Read more about: andaman havelock beaches honeymoon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X