Search
  • Follow NativePlanet
Share
» »ஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்!

ஓயாமல் கொட்டும் மழை - மேகாலயாவின் அற்புதத்திற்கு காரணம் இதுதான்!

கலாச்சாரம், மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய எல்லா அம்சங்கள் குறித்தும் ஒரு புதுமையான அனுபவத்தை சுற்றுலாப்பயணிகள் இந்த மேகாலயா மாநில சுற்றுலாவில் உணரலாம். ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டம், கிழ

By Udhaya

கலாச்சாரம், மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய எல்லா அம்சங்கள் குறித்தும் ஒரு புதுமையான அனுபவத்தை சுற்றுலாப்பயணிகள் இந்த மேகாலயா மாநில சுற்றுலாவில் உணரலாம். ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டம், கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் மற்றும் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களாகும். இங்கு செல்வது என்பது மிகவும் அலாதியான ஆனந்தமாகும். இங்கு பெய்திடும் மழையில் நனைந்து, இயற்கையை ரசித்து, காற்றினில் மிதந்து, மனதை வருடவிட்டு, எண்ணங்களை புத்துணர்வாக்கி, மகிழ்ச்சியாக ஒரு ஆட்டம் போட்டுவிட்டு வரலாம்.

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

மேகாலயா மாநில பழங்குடி மக்கள் பல்வேறு வகையான திருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். தனித்தன்மையான அம்சங்களை கொண்ட நடனங்கள் இந்த திருவிழாக்களின் முக்கிய அங்கமாகும். மனித வாழ்க்கையின் முக்கிய பருவங்களை கொண்டாடும் சடங்கு நிகழ்ச்சிகளாகவும், இயற்கை சுழற்சிகளை குறிப்பிடும் சடங்குகளாகவும் இந்த கொண்டாட்டங்கள் இருக்கக்கூடும். நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தனிப்பட்ட கிராம நிகழ்ச்சியாகவோ அல்லது பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ நடத்தப்படுகின்றனது. காஸி பழங்குடி இனத்தாரின் பாரம்பரிய கலையம்சங்களை இந்த நடன வடிவங்களில் பார்த்து ரசிக்கலாம்.

Ashwin Kumar

சமநிலையை குறிப்பிடும் விழாக்கள்

சமநிலையை குறிப்பிடும் விழாக்கள்

கா ஷாத் மின்சியம், கா போம் பிலாங் நோங்கிரம், கா ஷாத் ஷிங்வியாங் தங்கியப், கா ஷாத் கிய்ன்ஜோ கஸ்கய்ன், காம் பம் கானா ஷ்னாங், உம்சன் நோங்கராய், ஷாத் பெஹ் சியர் போன்ற இம்மாநிலத்தில் கொன்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களாகும். மனிதர்கள் மற்றும் இயற்கைச்சூழலுக்கு இடையேயான சமநிலையை குறிப்பிடும் விதத்தில் ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Arup Malakar

 ஒற்றுமைக்கான சடங்கு நிகழ்ச்சிகள்

ஒற்றுமைக்கான சடங்கு நிகழ்ச்சிகள்

மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தும் நோக்கத்துடனும் இந்த சடங்கு நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்படுகின்றன. பெஹ்டியன்கிலாம், லஹோ நடனம், சோவிங் சடங்கு போன்றவை ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்றன. கரோ இன மக்களிடையே டென் பில்சியா, வங்காலா, ரோங்ச்சு கலா, மீ அமுவா, மங்கோனா, கிரங்டிக் பவா, ஜமங் சியா, ஜா மெகபா, ஸா ஸத் ரா சக்கா, அஜெவார் அஹவ்யா, டோரே ரடா நடனம், சம்பில் மெசரா, டோ'க்ரு சுவா, சரம் சா, ஆ சே மனியா அல்லது டட்டா ஆகிய திருவிழா மற்றும் சடங்கு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன.
Nori Syamsunder Rao

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

விமானம், ரயில், பேருந்து, சுயவாகனம் மூலம் நாம் மேகாலயா பயணிக்கலாம். ஆனால் ஒரு விசயம் என்னவென்றால் பேருந்து மற்றும் சுயவாகனத்தில் தமிழகத்திலிருந்து இவ்வளவு தூரம் பயணிப்பது என்பது மிகவும் கடினமான வழிமுறை. அதற்காக விமானத்தில் செல்ல வசதியில்லாதவர்களுக்கு சிறப்பான யோசனை ரயில்தான்.

விமானத்தில் செல்பவர்கள் கவனத்துக்கு...

விமானத்தில் தமிழகத்திலிருந்து மேகாலயா செல்ல விரும்புவர்களுக்கு சென்னையிலிருந்து ஒரு விமானமும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரையிலிருந்து தலா ஒரு விமானமும் இயக்கப்படுகிறது. இவற்றில் சென்னை தவிர்த்து மற்ற அனைத்தும் இரண்டுக்கும் அதிகமான நிறுத்தங்களுடன் கூடிய விமானங்களாகும்.

நேரடி ரயில்களோ பேருந்துகளோ தமிழகத்திலிருந்து மேகாலயாவிற்கு இல்லை. ஆனால் உங்களுக்கு சிறந்த வழியை எங்களால் காட்டமுடியும்.

Sharada Prasad CS

எளிமையான வழிமுறையில் செல்லுங்கள்

எளிமையான வழிமுறையில் செல்லுங்கள்


வழிமுறை 1

சென்னையிலிருந்து விமானம் மூலம் கவுகாத்திக்கு செல்லவேண்டும்.

2.40 மணி நேரங்கள் எடுக்கும் இந்த பயணம்

கவுகாத்தியிலிருந்து நோங்க்பு எனும் இடத்துக்கு செல்லவேண்டும்.

வழிமுறை 2

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் செல்லவேண்டும்.

12 மணி நேரங்கள் ஆகும் இந்த பயணம் 1000ரூபாய்க்குள் அடங்கும்.

ஹைதராபாத்திலிருந்து ராணிக்குஞ்ச் பத்துநிமிடத்தில் சென்றுவிடலாம். அங்கிருந்து கொல்கத்தாவுக்கு பேருந்தில் பயணிக்கவேண்டும்.

இந்த பயணம் 27 மணி நேரம் எடுக்கும். அங்கிருந்து சிலிகுரி மேலும் 12 மணி நேரம் ஆகும். சிலிகுரியிலிருந்து ரயில் மூலம் காமாக்யா சென்றடையவேண்டும்.

Masrur Ashraf

 மேகாலயாவில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்

மேகாலயாவில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்

ஷில்லாங்க், சிரபுஞ்சி, காசி மலை, ஜெயின்டியா மலை, கரோ மலைகள், ஜோவாய் ஆகிய பகுதிகளும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களும் ஆகும்.

அருவிகள், சாகசங்கள், கிராமங்கள், ஆன்மீகத் தளங்கள், ஏரிகள், காட்சிகோணம், குகைகள், காட்டுயிர் வாழ்வு, பூங்கா, அருங்காட்சியகங்கள், சிகரங்கள், மலைகள், கடற்கரைகள், கோட்டைகள் என நிறைய பகுதிகள் இந்த இடத்தில் இருக்கின்றன. வாருங்கள் ஒவ்வொன்றாக காணலாம்.

Joymanik Dohling

மேகாலயா அருவிகள் சுற்றுலா

மேகாலயா அருவிகள் சுற்றுலா

இங்குள்ள அருவிகள் மிகவும் அழகானவை. உங்களை சுறுசுறுப்பாக்கும் இந்த அருவிகளுக்கு நாம் பயணிக்கலாம்.

மேகாலயாவில் அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் சுற்றுலா பொக்கிஷங்களில் ஒன்றாக டைர்ஸி நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஜோவாய் - ஷில்லாங் பாதையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் தண்ணீர், ஆர்ப்பரிக்கும் வேகத்தில் தண்ணீரை படுவேகமாக தூக்கியடிக்கும் வல்லமை பெற்றதாகும்.

ஜோவாய் நகரத்தின் அம்ராலெம் துணைப் பிரிவில் க்ராங் சூரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவையினங்களில், மிகவும் அழகானதாகவும் மற்றும் தெய்வீக தன்மை உடையதாகவும் க்ராங் சூரி என்ற பறவை கருதப்படுகிறது.

தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் பிக்னிக் பொழுதுபோக்கு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு இந்த பெல்கா நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது.

மிகவும் புகழ்பெற்ற தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம்.

டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த நீர்வீழ்ச்சியாகும். இது அதன் பெயரை "த்லென்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இப்பகுதியின் குகைகளில் வாழ்ந்து வந்த ஒரு ராட்சத பாம்பின் (மலைப்பாம்பு) பெயரிலிருந்தே பெற்றுள்ளது.

இந்தியாவின் ஏழாவது உயரமான நீர்வீழ்ச்சியான கைன்ரெம் நீர்வீழ்ச்சி, சோஹ்ராவின் மலைகளில் இருந்து மூன்று படிநிலைகளில் கீழ்நோக்கிப் பாய்கிறது. அருகருகாக பாயும் இதர சிறு அருவிகளை அருகாமையில் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சி, மழைக்காலத்தின் போது காணத் தெவிட்டாத ஒரு காட்சியாகும்.

டோம்பேவாரே எனும் இந்த அழகிய ஏரியானது ‘ஈமான் அசாக்கிரே' எனும் சிறு கிராமத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 113 பேர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோன்று மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, மாவ்லின்னாங், ரோங்பாங் டரே, ஸ்பிரிட் ஈகிள், நோகலிகை நீர்வீழ்ச்சி போன்ற நிறைய நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

Narendra Modi

 மேகலாயாவில் ஒரு சாகசப்பயணம்

மேகலாயாவில் ஒரு சாகசப்பயணம்

பராபாணி என்றழைக்கப்படும் உமியம் ஏரி மேகாலயா மாநிலத்தில் உள்ள ரி போய் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். 1960-களில் உமியம் நதிக்கு மேல் நீர்-மின் அணை கட்டும்போது இந்த ஏரி உருவாக்கப்பட்டது. தற்போது பலவகை விளையாட்டு வசதிகள் மற்றும் தீரச் செயல்கள் புரியும் வசதிகளும் இந்த ஏரியில் அளிக்கப்படுவதால் இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

ஜோவாயில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள லூம்ஸ்நோங் கிராமத்தில் உள்ள ஊம்லாவான் குகை சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் நின்று இரசித்து செல்லும் இடமாகும்.

கரோ ஹில்ஸ் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் மத்தியில் மலைஏற்றம் எனப்படும் சாகச பொழுதுபோக்கு அம்சம் பிரபலமாக உள்ளது. இந்த மலையேற்ற பயணங்கள் மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

இமில்சாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி டுரா-சொக்பொட் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. சாய்வான மலைப்பிளவின் ஊடே இரு பாதைகளில் ஓடிவரும் ஒரு ஓடையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து இந்த ஓடை ஒரு அழகிய குளத்தில் வந்து சேர்கிறது.

க்ரெம் மௌம்லூ என்று பிரபலமாக வழங்கப்படும் மௌம்லூ குகை இந்தியத் துணைக் கண்டத்தின் நான்காவது நீளமான குகை ஆகும். சுமார் 4,503 மீட்டர் அளவிலான அசரடிக்கும் நீளத்துடன் காணப்படும் இது, இப்பகுதியின் முன்னணி சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.

மேலும் ஸா ஐ மிகா பூங்கா, மாவ்சின்ராம், துரா சிகரம், நெங்கோங், மௌஸ்மாய் குகை, நோக்ரெக் பயோஸ்பியர், அர்பெல்லா சிகரம் உள்ளிட்ட இடங்கள் சாகசங்களுக்கு பெயர் போனதாக இருக்கிறது.

Pankaj Kaushal

கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்

கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்


நோகலிகை நீர்வீழ்ச்சி

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, முக்கியமாக இந்த மழைகளிலிருந்தே அதன் நீர் வரத்தைப் பெறுகிறது. எனவே, டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது, இதுவும் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். மிகச் சரியாக இந்த நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில், நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பாரித்த நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது.

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, சுமார் 315 மீட்டர் உயரத்துடன், இந்தியாவின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

யானை நீர்வீழ்ச்சி

மிகவும் புகழ்பெற்ற தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம்.

Ashwin Kumar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X