Search
  • Follow NativePlanet
Share
» »ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைஸென் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களில் ஒன்றாகும். ஆனால் இதன் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் எந்த ஒரு நகரத்திற்கும் சளைத்ததல்ல. இது ரைஸென் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த நகரமே இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைநகர் ஆகும். இந்த இடம் இங்கு மலைமேல் அமைந்துள்ள புகழ் பெற்ற ரைஸென் கோட்டையின் நினைவாக இந்த பெயர் பெற்றது. முந்தைய காலங்களில் இது ராஜவாஸினி' அல்லது ராஜஸயன்' என அழைக்கப்பட்டது. அதற்கு அரச குடியிருப்பு என அர்த்தம்.

ரைஸென் - வரலாற்றின் பார்வையில் ஒரு மறு பயணம்!

ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
AyushDwivedi1947

ரைஸெனின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கு சான்றாக உள்ளன. கி.பி 1200-ம் ஆண்டு இந்த ரைஸென் கோட்டை கட்டப்பட்டது. அதன் பிறகே இந்த இடம் ரைஸென் என அழைக்கப்படுகிறது. எனினும், இந்த கோட்டையானது 1760-ல், போபாலின் மூன்றாவது நவாபான புகழ்பெற்ற ஃபியாஸ் முகம்மது கான்' வசமானது. அன்றிலிருந்து இது போபாலின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, 1956-ஆம் ஆண்டு இந்த இடம் போபால் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு போபால் மாகாணம் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ரைஸெனில் பார்ப்பதற்கு என்னென இருக்கிறது?

ரைஸென் சுற்றுலா பல்வேறு கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை உள்ளடக்கியது. மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம், அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் மத மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சான்றாக இருக்கிறது. இங்கு கோவில்களும், மசூதிகளும் அருகருகே அமைந்துள்ளன. அவை இம்மக்களின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்கின்றன. மேலும் ரைஸென் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹஸ்ரத் பீர் மற்றும் ரைஸென் கோட்டை ஆகியவை அறியப்படுகின்றன.

ரைஸெனுக்கான வருகை!

ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Sheerazwiki

ரெஸெனில் விடுமுறைய கழிப்பதற்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களே மிகவும் சிறந்தவை. ஏனெனில் இந்த இரண்டு மாதங்களில் தான் வானிலை மிகவும் இனிமையாக காணப்படும். ரைஸென் சாலை, ரயில் மற்றும் விமான மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் உள்ள ரயில் மற்றும் விமான நிலையம் போபால் ஆகும்.

பிம்பெட்கா

இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பீமரின் பெயரைத் தாங்கியுள்ள பிம்பெட்கா இந்தியாவிலேயே மிகவும் பழமையான குகைகளில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். பிம்பெட்கா குகைகள் மற்றும் பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ளன. இவை விந்திய மலைத்தொடர்களால் சூழப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. இங்கிருக்கும் 600-க்கும் மேற்பட்ட குகைளில் பழங்கால மனிதர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பல்வேறு ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மனிதர்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல், புலி, நாய், பல்லி, யானைகள், எருதுகள் மற்றும் பல விலங்கினங்களின் ஓவியங்களும் இந்த குகைகளில் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் வரைவதற்கு இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காய்கறிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வர்ணங்கள், இந்த குகைகளின் உட்புற சுவர்களில் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பௌத்த மத தலங்களாகவே கருதப்பட்டு வந்தன.

V.S.வாகான்கார் என்ற இந்திய தொல்லியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இந்த குகை மற்றும் பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலங்களைச் சேர்ந்தவை என கண்டறியப்பட்டன. இந்த ஓவியங்களை வரைய பயன்படுத்தப் பட்டுள்ள பாணி, பழைய கற்காலத்திலிருந்து மத்திய காலம் வரையிலும் நீண்டிருக்கிறது. பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கு நம்மை பயணிக்க வைக்கும் தன்மையுடைய பிம்பெட்கா குகைகள் இருப்பதால், அவை இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் தேசிய பொக்கிஷங்களாக உள்ளன.

ரைஸென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Shobhitsingh314

கி.பி. 1200-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரைஸென் கோட்டை, இந்த ரைஸென் மாவட்டதின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள மலைத்தொடரின் மேல் இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகே, இந்த நகரத்திற்கு ரைஸென் எனப் பெயர் கிடைத்தது. மணற்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை அற்புதமான பண்டைய கால கட்டிடக் கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட பின்னரும் இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

பெரும் கற்சுவருடன் எழுப்பப்பட்ட இந்த கோட்டையானது ஒன்பது நுழைவாயில்களை கொண்டுள்ளது. இது மேலும் 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுளது. இவற்றை எல்லாம் விட மிக ஆச்சர்யமானது, இந்த கோட்டையின் நீர் மேலாண்மை திட்டம்தான். இந்த கோட்டையில் இன்றும் நல்ல நிலையில் சுமார் 40 கிணறுகள் உள்ளன. அதோடு இந்த பகுதியை சுற்றி பல்வேறு பண்டைய கால குகைகள் காணப்படுகின்றன. அவற்றில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் நம்முடைய நாட்டின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சான்றாக திகழ்கின்றன.

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X