Search
  • Follow NativePlanet
Share
» »ரைசன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைசன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைசன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ரைசன், கடல் மட்டத்திலிருந்து 1433 அடி உயரத்தில் குலுவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிறு சிறு கிராமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, பியாஸ் நதிக்கரையில் இருக்கும் ரைசன், அவ்விடத்திலுள்ள ஓய்விடங்களுக்காகவும், வெண்மையான ஆற்று நீரில் செய்யும் 'ஒயிட்-வாட்டர் ராப்டிங்' விளையாட்டிற்காகவும் மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இங்கிருக்கும் ஆப்பிள் பண்ணைகளும், ப்ளம் மற்றும் வாதுமை கொட்டை பழ தோட்டங்களும், இந்த இடத்தின் இயற்கையழகிற்கு மேலும் மெருகூட்டுவதாக உள்ளன.

ரைசன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Johan Philip

குளிர்காலத்தின் முடிவில், மார்ச் மாதங்களில் இந்த மொத்த பிராந்தியமுமே பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலையாக காட்சியளிக்கும். ரைசனின் முக்கியமான பார்வையிடமாக இருப்பது, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கோடைகால முகாம்களை நடத்திடும் ராஜேந்திரா தேசிய கண்நோய் மையமாகும். இந்த முகாம்களில் பல்வேறு விதமான கண் நோய்கள் பரிசோதனை செய்யப்படுகின்றன. ரைசனில் அமைந்திருக்கும் ரகுநாத் கோவில் இந்துக்களிடம் மிகவும் பிரபலமான புண்ணியதலமாகும்.

இந்து கடவுளான ராமருக்கான இந்த இடம், பெருமளவிலான பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வருடம் முழுவதும் கவர்ந்திழுக்கும் இடமாக இருக்கிறது. ரைசனில் பார்க்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான கோவில் ஜெகன்னாதி தேவி கோவிலாகும். குலுவிலிருந்து 3கிமீ தொலைவில் உள்ள பெக்கி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவில் மிக நேர்த்தியான திறமையை வெளிப்படுத்தும் விதமாக கட்டப் பட்டிருக்கிறது.

குலு, மணாலி, குசாய்னி, நக்கர், புண்டர், மணிகரன் மற்றும் பாலம்பூர் ஆகியவை ரைசனுக்கு அருகிலுள்ள பிற சுற்றுலா தலங்களாகும். ரைசனில் ரயில் நிலையமோ அல்லது விமான தளமோ இல்லாத காரணத்தால், இங்கு வருபவர்கள் அருகிலுள்ள ரயில் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ரைசனின் அருகாமை விமான நிலையமாக குலு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ரைசன் செல்வதற்கான டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை சுற்றுலாப் பயணிகள் எளிதில் பெற முடியும்.

ரைசன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Balaji.B

21 கிமீ தொலைவில் இருக்கும் அருகிலுள்ள குலு நகரத்தை சாலை வழியாகவும் அடைய முடியும். மேலும் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குலுவிலிருந்து ரைசனுக்கு இயக்கப்படுகின்றன. ரைசனின் பருவநிலை வருடம் முழுவதும் மிதமானதாகவே காணப்படும். கோடைகாலங்களில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸில் இருந்து 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மிதமான மழைப்பொழிவைப் பெறும் மழைக்காலங்களிலும் ரைசனுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். குளிர்காலத்தில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸில் இருந்து 0 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ரைசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒயிட் வாட்டர் ராப்டிங் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இடம் கூடாரம் அமைத்து தங்கி ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகவும் உள்ளது. பியாஸ் நதியில் ராப்டிங் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற மாதங்களாக ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலங்கள் அறியப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சேவைகளை, வாடகை முறையில் இங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரைசன் பகுதியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பரிபூரணமாக ரசித்திட மலையேற்றம் பேருதவியாக இருக்கிறது. 26கிமீ தொலைவில் உள்ள ரைசன்-மணாலி மலையேற்றப் பாதை குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். ரைசனிலிருந்து மணாலி, காசோல், நக்கர், கிஸாதாச், நாகரூணி மற்றும் ராம்சு ஆகிய மலையேற்றப்பாதைகளில் செல்வது சாகச விரும்பிகளுக்கு விருந்தாக இருக்கும். இந்த மலையேற்றப் பாதைகள் அவற்றின் இயற்கை அழகிற்காகவும், பரவி நிற்கும் மேகக் கூட்டங்களுக்காகவும் மற்றும் பயணத்தின் போது கிடைக்கும் .

Read more about: uttar pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X