Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தான் - ராஜ வாழ்கையின் சொர்க்க வாசல்

ராஜஸ்தான் - ராஜ வாழ்கையின் சொர்க்க வாசல்

ஜனநாயக ஆட்சி காலத்தில் வாழும் நமக்கு அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பற்றியும், அவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்பது பற்றியும் நேரில் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. மலைக்க வைக்கும் செல்வம், படைவீரர்கள், நடன மங்கையர்கள், வானளவு அஹங்காரத்துடன் வாழ்ந்த அக்கால அரசர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் கட்டாயம் சென்றிட வேண்டிய ஓரிடம் தான் இந்தியாவின் 'சுற்றுலா தலைநகரம்' என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ஆகும். அரண்மனைகள் நிறைந்த இந்த அழகிய ஊருக்கு போகலாம் வாருங்கள்.

அழகிய கோட்டைகள் :

அழகிய கோட்டைகள் :

இன்று வெளிநாட்டு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத்தலமாக ராஜஸ்தான் திகழ முக்கியமான காரணங்களில் ஒன்று அங்கிருக்கும் அரண்மனைகள் தான். விவரிக்க முடியாத கலைநயத்துடனும், பிரமாண்டமாகவும் கட்டப்பட்டிருக்கும் இவற்றில் சில விடுதிகளாக மாற்றப்பட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ராஜ உபசாரம் அளிக்கின்றன.

Photo: Flickr

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

ராஜஸ்தானில் இருக்கும் புகழ்பெற்ற அரண்மனை தங்கும் விடுதிகளில் ஒன்றுதான் பிசோலா ஏரியின் நடுவே ஒய்யாரமாக அமைந்திருக்கும் 'லேக் பேலஸ்' ஆகும். உதய்பூர் ராஜ பரம்பரையினரின் மாளிகையாக திகழ்ந்த இந்த இடம் இப்போது உலகின் மிகவும் 'ரொமேன்டிக்' விடுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

Photo:Tomasz Wagner

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சூரிய ஒளியில் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த ஏரியை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். 'இந்தியாவின் வெனிஸ்' என்றழைக்கப்படும் உதய்பூர் நகருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இந்த லேக் பேலசுக்கும் தவறாமல் சென்றுவாருங்கள்.

Photo:exilism

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

இந்த 'லேக் பேலஸ்' பற்றிய மேலதிக தகவல்களையும், அங்கு உள்ள அறைகளை முன்பதிவு செய்வது பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Tomasz Wagner

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

இரவில் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிரும் 'லேக் பேலஸ்'.

Photo:Benjamin B

அழகிய கோட்டைகள் :

அழகிய கோட்டைகள் :

இந்த லேக் பேலஸ் தவிர ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர்க் கோட்டை, மேஹ்ரங்கர்க் கோட்டை, உமைத்பவான் பேலஸ், ஜெய்சால்மர் கோட்டை போன்றவற்றையும் நாம் கட்டாயம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.

Photo: Flickr

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கார்த்திகை ஏகாதசியில் இருந்து ஐந்து நாட்கள் உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றான 'புஷ்கர் ஒட்டக சந்தை நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்களுக்கு மேல் இந்த கால்நடை திருவிழாவில் பங்குகொள்கின்றனர்.

Photo:Dew

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

வெறும் கால்நடை சந்தையாக மட்டும் இல்லாமல் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு ராஜஸ்தானின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் புஷ்கர் அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி போன்றவையும் நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மக்களின் பாரம்பரிய வாழ்கையை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த புஷ்கர் விழாவில் நிச்சயம் கலந்துகொள்ளுங்கள்.

Photo:Anja Nowak

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

இந்த கால்நடை திருவிழாவை நாம் 'ஹாட் ஏர் பலூன்' மூலம் வானில் மிதந்தபடியும் கண்டு ரசிக்கலாம்.

Photo:Meeta

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

இங்கே ஒட்டகங்களுக்கு இடையேயான அலங்கார போட்டியும் நடைபெறுகிறது. இதற்காக ஒட்டகங்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்படுகின்றன.

Photo:sheetal saini

புஷ்கர் திருவிழா

புஷ்கர் திருவிழா

காசியை போலவே இந்தியாவில் உள்ள மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான இந்த புஷ்கர் நகரின் மற்றுமொரு சிறப்பு இங்கிருக்கும் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 'பிரம்மா' கோயிலாகும். இந்தியாவில் வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் பிரம்மா கோயில்களில் இது முதன்மையானதாகும். கார்த்திகா பூர்ணிமாவை ஒட்டி நடக்கும் திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

Photo:Vberger

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X