Search
  • Follow NativePlanet
Share
» »ராஜோவ்ரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ராஜோவ்ரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ராஜோவ்ரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஜம்மு காஷ்மீரின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ராஜோவ்ரி மாவட்டமாகும். 1968 வரை பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இவ்விடம், அதன் பிறகு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கி.பி.1194 முதல் 1846-ம் ஆண்டு வரை இந்த மாவட்டத்தை ஜரால் வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.

ராஜோவ்ரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Amit J Sangekar

ஜரால் வம்சத்தினரால் கோட்டைகளும், மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தின் கட்டிடக்கலை பாணியின் அடையாளமாக அவை இன்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. கண்கவரும் வகையில் பல்வேறு இடங்களைப் கொண்டுள்ள ராஜோவ்ரியில் மிகவும் பிரபலமான பார்வையிடங்களாக பாஞ்ச் பீர் மற்றும் லால் பாவ்லி ஆகிய இடங்கள் உள்ளன.

ராஜோவ்ரி சுற்றுலா வர திட்டமிடும் பயணிகள் ஐந்து சகோதரர்களும், அவர்களுடைய சகோதரியும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அழகிய நினைவிடமான பாஞ்ச் பீருக்கு கண்டிப்பாக வர வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என எண்ணற்ற மனிதர்கள் வந்து செல்லும் புனித இடமாக இது இருக்கிறது.

ராஜோவ்ரி மாவட்டத்தின் மற்றுமொரு முக்கிய பார்வையிடமாக இளவேனில் தண்ணீர் ஏரியான லால் பாவ்லி உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு வகை மீன்களை சுற்றுலா பயணிகள் காண முடியும். அழகிய ஏரிகளுக்காக புகழ் பெற்றிருக்கும் இம்மாவட்டத்தில் கடோரி சார், சாமர் சார், தியா சார், சமோட் சார், கும் சார், பாக் சார் மற்றும் அகல் தர்ஷினி ஆகிய ஏரிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

துன்னாமன்டி சாராய், மங்ளாதேவி கோட்டை, முராத்பூர் சாராய் மற்றும் மசூதி,நாத்பூர் சாராய் மற்றும் நவோகாஸி ஸியாரத் ஆகியவை ராஜோவ்ரியின் பிற முதன்மையான சுற்றுலாதலங்களாகும். இந்த பகுதியை பாகிஸ்தானிடமிருந்து காக்கும் பொருட்டு உயிரிழந்த சாதாரண மக்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் முக்கிய நினைவிடங்களாக உஸ்மான் நினைவிடம் மற்றும் பாலிடான் பவன் ஆகியவற்றை சொல்லலாம்.

சுற்றுலாப் பயணிகள் ராஜோவ்ரிக்கு விமானம், இரயில் மற்றும் சாலை என எந்த வகை போக்குவரத்தையும் பயன்படுத்தி வந்து சேர முடியும். ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜுன் மாதம் முடிய நீடித்திருக்கும் கோடைகாலம் ராஜோவ்ரிக்கு வர சிறந்த பருவமாகும். ஜில்லென்றிருக்கும் குளிர்காலத்திலும் கூட சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ராஜோவ்ரிக்கு குளிர்காலங்களிலும் வரலாம்.

இந்த சுற்றுலாத்தலத்திலுள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக லால் பாவ்லி உள்ளது. ராஜோவ்ரி நகரதிலிருந்து 20 கிமீ தொலைவில் ராஜோவ்ரி-தன்னாமன்டி சாலையில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வித்தியாசாமன மற்றும் அழகிய மீன் வகைகளைக் காண முடியும். லால் பாவ்வி ஊற்றுக்கு பூமிக்கடியில் நந்தசாகர் ஏரியுடன் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

ராஜோவ்ரி மாவட்டத்தின் முதன்மையான மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோபிந்த் சிங் ஜி-க்காக இந்த குருத்துவாரா கட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி, 1616-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை சந்திக்க செல்லும் போது வழியில் இங்கே சில நாட்கள் குரு ஹர்கோபிந்த் சிங் ஜி தங்கியிருந்திருக்கிறார். 4 அடுக்குகளையும், 15 அறைகளையும் மற்றும் அவற்றில் 8 அறைகளை கொண்ட பள்ளி / பாடசாலையையும் இந்த இடம் கொண்டிருக்கிறது.

1960-ம் ஆண்டு சர்தார் தாரா சிங் என்ற பொறியாளர் இந்த இடத்தை பெரிது படுத்தும் பொருட்டு மீண்டும் வடிவமைத்தார். சாத்தி பட்ஷாலி பங்லா சாஹிப் குருத்துவாரா என்ற இந்த இடம் ஞாயிற்றுக் கிழமைகளில் திரளான மக்கள் கூட்டத்தை எப்பொழுதும் கொண்டிருக்கும். குரு ஹர்கோபிந்த் சிங் ஜி-யின் பிறந்த நாளின் போதும் ஏகப்பட்ட பக்தர்கள் இந்த குருத்துவாராவிற்கு வருகை தருவார்கள். இந்த இடத்திற்கருகில் ஸ்ரீ ஹர்கோபிந்த் சாஹிப் கல்வியியல் கல்லூரியையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

Read more about: jammu kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X