Search
  • Follow NativePlanet
Share
» »ரணக்பூர் ஜெயின் கோயில் - அதிசயிக்க வைக்கும் உலகின் மிக அற்புதமான ஜெயின் கோயில்

ரணக்பூர் ஜெயின் கோயில் - அதிசயிக்க வைக்கும் உலகின் மிக அற்புதமான ஜெயின் கோயில்

By Naveen

இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்றறியப்படும் ராஜஸ்தான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கட்டிடக்கலை அதிசயம் தான் ரணக்பூர் ஜெயின் கோயில் ஆகும். பளிங்கு கல்லில் இதைவிட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் ஒரு கட்டிடம் உலகில் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

ஜைன மதத்தின் முக்கிய தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்தநாளான இன்று இந்தியாவில் இருக்கும் அதிசயிக்க வைக்கும் ரணக்பூர் ஜெயின் கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எங்கே அமைந்திருக்கிறது?

எங்கே அமைந்திருக்கிறது?

பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் பளி மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே ரணக்பூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்தஜெயின் கோயில்.

இது ஜைனர்களுக்கான ஐந்து முக்கிய புண்ணிய யாத்ரீக ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

Paul Asman and Jill Lenoble

கோயிலின் வரலாறு:

கோயிலின் வரலாறு:

ரணக்பூர் ஜெயின் கோயிலின் மூலவராக இருப்பவர் ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதர் எனப்படும் ஆதிநாதர் ஆவர்.

15ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியில் வாழ்ந்த தர்மா ஷாஹ் என்ற தொழிலதிபரின் கனவில் ஆதிநாதர் தோன்றியதாகவும் அதனை தொடர்ந்தே இந்த கோயிலை அவர் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

Paul Asman and Jill Lenoble

பெயர்க்காரணம்:

பெயர்க்காரணம்:

15ஆம் நூற்றாண்டில் சிஸ்சோடியா வம்சத்தை சேர்ந்த ராணா கும்பா என்ற அரசர் இந்த பகுதியை ஆட்சிசெய்திருக்கிறார்.

அவர் இந்த ஜெயின் கோயில் கட்டுவதற்கு பெருமளவில் பொருளுதவி செய்ததன் பொருட்டு இந்த கோயில் அமைந்திருக்கும் கிராமத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

strudelt

கட்டிட அமைப்பு:

கட்டிட அமைப்பு:

சாமுகா எனப்படும் பிரதான கோயில் வளாகத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் அடித்தளப்பகுதி 48000 சதுர அடி பரப்பளவில் பரந்துள்ளது. 80 குமிழ் கோபுர அமைப்புகள், 29 மண்டபங்கள் மற்றும் 1444 தூண்களைக்கொண்டதாகும்.

இந்த கோயிலை வடிவமைத்தவர் தீபாகா என்ற சிற்பி ஆவார். கி.பி 1437 ஆண்டு துவங்கிய இதன் கட்டுமான வேலை கி.பி 1458 ஆம் ஆண்டுதான் நிறைவடைந்திருக்கிறது.

Daniel Mennerich

கட்டிட அமைப்பு:

கட்டிட அமைப்பு:

இதனுள் நாம் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு நுணுக்கமாக குடையப்பட்ட ஏராளமான பளிங்கு சிற்ப்பங்கள் இருக்கின்றன.

குறிப்பாக 108தலைகள் மற்றும் எண்ணிலடங்கா வால்களை கொண்ட ஒரே கல்லில் குடையப்பட்ட சிற்பம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் எனபது நிச்சயம்.

Benjamin Chodroff

கட்டிட அமைப்பு:

கட்டிட அமைப்பு:

அதோடு இந்த கோயிலின் சுவர்களில் கஜுராஹோவில் இருப்பது போல மைதுன சிற்பங்களும் இருக்கின்றன.

ஜைன கோயிலில் இதுபோன்ற சிற்பங்களை காண்பது மிகவும் அரிதாகும்.

Pablo Nicolás Taibi Cicare

கட்டிட அமைப்பு:

கட்டிட அமைப்பு:

தீர்த்தங்கரர் ஆதினாதரின் சந்நிதி.

Erik Duinkerken

எப்படி அடைவது?:

எப்படி அடைவது?:

ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்து ரணக்பூர் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து ஃபால்னா ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் பேருந்து வசதிகள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன.

Aparajith Bharathiyan

எங்கே தங்குவது? :

எங்கே தங்குவது? :

ரணக்பூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Andrew Miller

ரணக்பூர் ஜெயின் கோயில் :

ரணக்பூர் ஜெயின் கோயில் :

அடுத்த முறை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அல்லது உதய்பூர் நகருக்கு செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்கு சென்றுவாருங்கள்.

Paul Asman and Jill Lenoble

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more