» »இந்தியாவின் பொக்கிஷங்கள்! அன்றும்இன்றும்!

இந்தியாவின் பொக்கிஷங்கள்! அன்றும்இன்றும்!

Posted By: Udhaya

70 வருட சுதந்திர இந்தியாவில் எதுலாம் மாறியிருக்கிறது என்றால் நம் கண்களுக்கு ஒவ்வொன்றாய் வந்துபோகும் இடங்களுள் மிக முக்கியமானவை டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய இடங்கள் தான்.

உண்மையில் இந்தியா என்றொரு நாடு கூட்டமைக்கப்படுவதற்கு முன்பு வரை பழமையும், சிறப்புமாக இருந்து வந்த இடங்கள் காலப்போக்கில் மேற்கத்திய நாகரிகத்துக்குட்பட்டு, அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு சொல்கிறமாதிரி, எப்படி இருந்த இடங்கள் இப்படி ஆகிவிட்டது பாருங்கள்.

 தாஜ்மஹால்

தாஜ்மஹால்

இந்தியாவின் புகழை உலகுக்கு எடுத்துச்சொல்லும் இந்த கட்டிடம் முகலாயர்களின் மிகச்சிறந்த கட்டுமானமாக போற்றப்படுகிறது.

தற்போதுள்ள தாஜ்மஹாலுக்கும் அந்த காலத்து தாஜ்மஹாலுக்கும் உள்ள வித்தியாசம் பார்க்கவேண்டுமா? அடுத்த படத்தில்....

1859ல் தாஜ்மஹால்

1859ல் தாஜ்மஹால்


1859ம் ஆண்டு பெலிக்கோ பியட்டோவால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

 புத்த துறவிகளின் இசைக்குழு

புத்த துறவிகளின் இசைக்குழு


புத்த துறவிகள் பல்வேறு இசை கருவிகளை இசைக்கப் பயிற்சி பெற்றவர்களாவர். தற்போதும் புத்த மடாலயங்களில் இவர்களின் இசையை கேட்கமுடியும். ஆனால் இவர்கள் சுதந்திரத்துக்கு முன்னர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தார்கள் தெரியுமா. அடுத்த படத்தைப் பாருங்கள்.

 1850ம் ஆண்டு

1850ம் ஆண்டு

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஆட்சி செய்தபோது மிசனரிகளையும், வேலையாட்களையும் பணியமர்த்தினர். அவர்கள் இந்தியாவை அடிமை செய்ததை விளக்கும் அற்புதமான படம் இது.

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் புத்த மடாலயத்தின் வெளியே எடுக்கப்பட்ட படம் இது.

 கிர்காவம் சாலை

கிர்காவம் சாலை

மும்பையின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான கிர்காவன் சாலை அதிக மக்கள் அன்றாடம் வந்து செல்லும் இடமாகும்.

இங்கு நின்று பார்த்தாலே ஏதோ வெளிநாட்டில் இருப்பது போன்றதொரு உணர்வு ஏற்படும். ஆனால் இது அந்த காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா. அடுத்த படத்தில்


http://www.mcgm.gov.in/irj/portal/anonymous

 1900ல் கிர்காவன்

1900ல் கிர்காவன்

பாம்பே (தற்போது மும்பை) நகரின் முக்கிய சாலையான கிர்காவன் பழமையும், அழகும் நிறைந்து காணப்படும் புகைப்படம் இதோ.

 வாரணாசி

வாரணாசி

புனித தலமான வாரணாசி இந்தியாவில் அதிகம் பேர் செல்லும் நகரமாக திகழ்கிறது.

இந்துக்களின் நம்பிக்கைப்படி பாவம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது.

இந்த நகரத்துக்கு இருக்கும் பழமைமாறா குணத்தை நம்புவீர்களா இதோ இந்த படத்தை பாருங்கள்

 1875ல் வாரணாசி

1875ல் வாரணாசி

1875ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வாரணாசியில் குழந்தைகளும், பெணகளும் நீராடுவதை காண்பிக்கிறது.

 வாரணாசி கோயில்கள்

வாரணாசி கோயில்கள்

காசியில் மூழ்கி எழுந்து கோயில்களுக்கு செல்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.

தற்போதுள்ள கோயில்கள் வண்ணமயமாகவும் அழகாகவும் இருக்கின்றன. அப்படியானால் பழைய கால கோயில்கள்?

 1865ம் ஆண்டு

1865ம் ஆண்டு

இது 1865ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

 லஹௌல் பள்ளத்தாக்கு

லஹௌல் பள்ளத்தாக்கு

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது லாஹௌல் மாவட்டம். இரண்டு வெவ்வேறு மாவட்டங்களாக இருந்து வந்த லாஹௌல் மற்றும் ஸ்பிதி, 1960 ம் ஆண்டு ஒரே மாவட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

 அந்த காலத்தில் லஹௌல் பள்ளத்தாக்கு

அந்த காலத்தில் லஹௌல் பள்ளத்தாக்கு

அந்த காலத்தில் புகைப்படக் கருவிகள் ஒன்றும் அவ்வளவு எளிதாகக் கையாளக்கூடியதல்ல.

அதையும் மீறி இந்த உயரத்துக்கு ஏறி படமெடுத்துள்ளார்கள் எனில் சிறப்பானதுதானே.

Read more about: travel