Search
  • Follow NativePlanet
Share
» »ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!

வெகு தூரம் செல்வது, களைப்படையாமல் செல்வது, உணவு, தூக்கம், கழிவறை அடங்கிய வசதிகளுடன் கூடிய பயணம் என இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது ரயில் போக்குவரத்தே ஆகும். ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அவ்வப்போது பல சலுகைகளை செய்து வருகிறது. அதன்படி இந்திய ரயில்வேயின் உணவு பட்டியலில் புது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சுவையான உணவுகளை உங்களது ரயில் பயணத்தில் நீங்கள் உண்ணலாம்!

மூன்று வருடங்களுக்கு பின் திருத்தப்பட்ட பட்டியல்

மூன்று வருடங்களுக்கு பின் திருத்தப்பட்ட பட்டியல்

இந்திய இரயில்வே மெயில், விரைவு ரயில்கள், துரந்தோ, ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் விலையை திருத்தியுள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே உணவு பட்டியலில் மாற்றம் கொண்டு வந்தது. அதற்கு பிறகு ஜனவரி 16 2023 இல் திருத்தம் செய்யப்பட்ட உணவு பொருட்களின் பட்டியலை இந்திய இரயில்வே தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட பொருட்கள், விலை, அளவு ஆகியவற்றை பற்றிய விவரங்கள் கீழே!

மூன்று வகையான கேட்டரிங் சேவைகள்

மூன்று வகையான கேட்டரிங் சேவைகள்

இந்திய ரயில்வே மூன்று வகையான வழிகளில் தன் பயணிகளுக்கு கேட்டரிங் சேவைகள் செய்து வருகிறது. ராஜதானி, சதாப்தி, துரந்தோ, காதிமேன், வந்தே பாரத் மற்றும் விரைவு ரயில்களில் மொபைல் கேட்டரிங் சேவைகள் மூலமாக உணவு வழங்கப்படுகிறது. ஃபுட் பிளாசா, சிற்றுண்டி அறைகள், ஓய்வு அறைகள், ரயில் யாத்ரி நிவாஸ் ஆகிய இடங்களில் இ-கேட்டரிங் சேவைகள் செய்யப்படுகிறது.

திருத்தப்பட்ட உணவு பட்டியல்

திருத்தப்பட்ட உணவு பட்டியல்

o 170 மிலி அளவுள்ள தேநீர் மற்றும் காபியின் விலை ஸ்டேஷன்களிலும் ரயில்களிலும் ரூ. 5 மற்றும் ரூ 1௦ ஆக விற்கப்படும்.

o 1 லிட்டர் அளவுள்ள ரயில் நீரின் விலை ரூ. 15 ஆக ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களுக்குள் விற்கப்படும். 500 மிலி அளவுள்ள ரயில் நீரின் விலை ரூ. 10 ஆகும்.

o 7 பூரி மற்றும் 150 கிராம் அளவுள்ள பூரி மசாலா அடங்கிய "எகனாமி உணவு அல்லது ஜந்தா உணவின்" விலை ஸ்டேஷன்களில் ரூ. 15 க்கும், ரயில்களுக்குள் ரூ. 20 க்கும் விற்கப்படும்.

o 2 பிரட், ஒரு துண்டு வெண்ணெய், 2 வெஜ் கட்லட், சாஸ்/ இட்லி, வடை அல்லது உப்மா, வடை அல்லது பொங்கல், வடை அடங்கிய "ஸ்டாண்டர்ட் காலை உணவின்" விலை ஸ்டேஷன்களில் ரூ. 35 க்கும், ரயில்களுக்குள் ரூ. 40 க்கும் விற்கப்படும்.

o 2 பிரட், ஒரு துண்டு வெண்ணெய், 2 முட்டை ஆம்லேட், சாஸ் அடங்கிய "நான் வெஜ் காலை உணவின்" விலை ஸ்டேஷன்களில் ரூ. 45 க்கும், ரயில்களுக்குள் ரூ. 50 க்கும் விற்கப்படும்.

o சாதம், 2 பரோட்டா அல்லது 4 ரொட்டி, பருப்பு, காய்கறி கூட்டு, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் அடங்கிய "வெஜிடேரியன் லஞ்ச்/ டின்னர்" - இன் விலை ஸ்டேஷன்களில் ரூ. 75 க்கும், ரயில்களுக்குள் ரூ. 80 க்கும் விற்கப்படும்.

o சாதம், 2 பரோட்டா அல்லது 4 ரொட்டி, பருப்பு, முட்டை கறி, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் அடங்கிய "நான் வெஜிடேரியன் லஞ்ச்/ டின்னர்" - இன் விலை ஸ்டேஷன்களில் ரூ. 80 க்கும், ரயில்களுக்குள் ரூ. 90 க்கும் விற்கப்படும்.

o சாதம், 2 பரோட்டா அல்லது 4 ரொட்டி, பருப்பு, சிக்கன் கறி, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் அடங்கிய "நான் வெஜிடேரியன் லஞ்ச்/ டின்னர்" - இன் விலை ஸ்டேஷன்களில் ரூ. 120 க்கும், ரயில்களுக்குள் ரூ. 130 க்கும் விற்கப்படும்.

o 70 கிராம் காய்கறி அடங்கிய 350 கிராம் வெஜிடபிள் பிரியாணி, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் கொண்ட வெஜிடபிள் பிரியாணி காம்போவின் விலை ஸ்டேஷன்களில் ரூ. 70 க்கும், ரயில்களுக்குள் ரூ. 80 க்கும் விற்கப்படும்.

o 2 முட்டையுடன் கூடிய பிரியாணி, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் கொண்ட "நான் வெஜிடேரியன் பிரியாணி காம்போவின்" விலை ஸ்டேஷன்களில் ரூ. 80 க்கும், ரயில்களுக்குள் ரூ. 90 க்கும் விற்கப்படும்.

o 7௦ கிராம் சிக்கன் துண்டு அடங்கிய பிரியாணி, ஊறுகாய், தயிர், ஸ்வீட், 250 மிலி தண்ணீர் கொண்ட "நான் வெஜிடேரியன் பிரியாணி காம்போவின்" விலை ஸ்டேஷன்களில் ரூ. 100 க்கும், ரயில்களுக்குள் ரூ. 110 க்கும் விற்கப்படும்.

o அதோடு ஓய்வறைகளில் மட்டுமே விற்கப்படும் வெஜிடேரியன் தாலி மற்றும் நான் வெஜிடேரியன் தாலி ரூ. 35 க்கும், ரூ. 40 க்கும் விற்கப்படும்.

    Read more about: irctc revised menu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X