Search
  • Follow NativePlanet
Share
» »ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலித்தால் இனி இந்த நம்பருக்கு கால் செய்யவும்!

ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்கு அதிக விலை வசூலித்தால் இனி இந்த நம்பருக்கு கால் செய்யவும்!

அடிக்கடி ரயிலில் சென்று வருபவர்களுக்கு நாம் எதைப் பற்றி படிக்கப் போகிறோம் என்று நன்கு தெரியும். நீங்கள் சாதாரண ஒரு உள்ளூர் ரயில் நிலையத்திற்கு சென்றாலும் கூட அங்கு விற்கும் பொருட்களின் விலை மற்ற கடைகளை விட அதிகமாக இருப்பதை உணருவீர்கள். உணவு பொருட்கள், ஸ்டேஷனரி, நொறுக்கு தீனிகள், ஏன் தண்ணீர் பாட்டில்களின் விலை கூட சற்று அதிகமாகத் தான் இருக்கிறது. இனியும் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்க தேவையில்லை. ஆம்! இனி ரயில்வே ஸ்டேஷன்களில் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே கீழே கொடுக்கப்பட்ட நம்பருக்கு போன் செய்யவும்!

railway-station-recipe-16626965881-1669723428.jpg -Properties

அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள்

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்தால், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற எளிய பொருட்களுக்கு உண்மையான விலையை விட ரயில்வே கடைகள் உங்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது மிகவும் சாதாரண விஷயம் தான் என்று பலர் கடந்து செல்கின்றனர்.

இன்னும் சிலர் இங்கு வருவதற்கு முன்னரே விலை அதிகமாகத் தான் இருக்கும் என்று எண்ணத்தில் வந்து வாங்கி செல்கின்றனர். ஆனால் இன்னும் சிலரால், அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. அதனால் தேவைப்படும் பொருளைக் கூட அங்கு வாங்காமல் தள்ளி போடுகின்றனர். இது எத்தகைய அபாயத்தை விளைவிக்கும் தெரியுமா?

railway-station-recipe-16626965881-1669723428.jpg -Properties

அபாயம் அறியாத பயணிகள்

ஆம், நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உணவு வாங்கி சாப்பிடாமல், தண்ணீர் வாங்கி குடிக்காமல் இருந்தால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும். அதுவே உங்களுடன் வரும் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு நாம் இப்படி செய்ய முடியுமா. செய்தால் என்ன விபரீதம் நடக்கும்.

தண்ணீர் தானே? சாப்பாடு தானே? இறங்கிய பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். அடுத்த நொடி நிச்சயமில்லாத இந்த வாழ்வில் எண்ணற்ற அபாயங்கள் வந்து சேரும். இனியும் நீங்கள் அதிக விலை கொடுத்து ரயில்வே ஸ்டேஷன்களில் பொருட்களை வாங்க வேண்டாம்.

pav11

இது உங்களின் உரிமை

நமது ஆரோக்கியமும், தேவையும் ஒரு புறம் இருந்தாலும், நாம் ஏன் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும். நியாயமற்ற முறையில் விற்கும் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி நம் பணத்தை வீணடிப்பதோடு, சமூகத்தையும் கெடுக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் கடந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷன்களில் சிறிது சிறிதாக பெரிய தொகை சேருகிறது. இதுவும் குற்றம் தானே? லஞ்சம் கொடுப்பது எப்படி குற்றமோ அப்படிதான் அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்குவதும்.

irctc3-16690898151-1669723438.jpg -Properties

இனியும் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை

அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, பயணிகளுக்கு உதவும் இந்த எண்ணை ரயில்வே சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையற்ற கூடுதல் விலையை செலுத்துவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, இந்த எண்ணை டயல் செய்து புகார் அளிக்க வேண்டும். இந்த தேவையற்ற செலவுக்கு முற்றுப்புள்ளி வைக்க கீழ்க்கண்டவாறு புகார் அளிக்கவும்.

o இரயில்வேயில் கட்டணமில்லா 1800111139 என்ற எண்ணிற்கு கால் செய்து உங்களது புகாரை அளிக்கலாம்.

o மேலும் அதனை SMS மூலமாகவும் அனுப்பலாம், 9711111139 என்ற எண்ணிற்கு உங்களது புகாரை SMS செய்யுங்கள்.

o உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து "புகார் மேலாண்மை அமைப்பு" (Complaint Management System) என்ற அமைப்புக்குள் சென்று உங்களது புகாரை ரெஜிஸ்டர் செய்திடுங்கள். புகாரைப் பதிவுசெய்த பிறகு, புகார் எண் உங்களது மொபைல் நம்பருக்கு வந்து சேரும். இதைப் பயன்படுத்தி நீங்கள் நிலைமையைக் கண்காணிக்கலாம்.

Read more about: irctc indian railways
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X