Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா?

இந்தியாவின் மிக சூடான நகரங்கள் எவை தெரியுமா?

கோடை விடுமுறை முடிந்து பசங்கள்லாம் பள்ளிக்கு போகப் போறாங்க. இப்ப வந்து சூடான நகரங்கள பத்தி போடுறீங்கனு கேக்கலாம். ஆனா பாருங்க... கோடை விடுமுறைதான் முடிஞ்சிச்சே தவிர்த்து கோடை விட்டமாதிரி தெரியல.. அடிக

By Udhaya

கோடை விடுமுறை முடிந்து பசங்கள்லாம் பள்ளிக்கு போகப் போறாங்க. இப்ப வந்து சூடான நகரங்கள பத்தி போடுறீங்கனு கேக்கலாம். ஆனா பாருங்க... கோடை விடுமுறைதான் முடிஞ்சிச்சே தவிர்த்து கோடை விட்டமாதிரி தெரியல.. அடிக்குற வெயில் மண்டைய பொளந்து உள்ள இருக்குற மூளைய சூடாக்குது. ஒருவேள நீங்க இந்த ஊர்களுக்குலாம் சுற்றுலா போகறதா இருந்தா இங்க ஆகஸ்ட் மாசம் வரைக்கும் கோடை வெயில் சுளீர்னுதான் அடிக்கும்ங்குற மறந்துடாதீங்க.

 ரெண்டச்சின்தலா

ரெண்டச்சின்தலா

இது வளர்ந்து வரும் ஒரு சிறு நகரமாகும். இந்த ஊருக்கு இருக்குற ஒரு சிறப்பே அங்க அடிக்குற வெய்யில்னாலதான். 45 டிகிரிய அசால்ட்டா தாண்டி, அங்க இருக்குற மக்கள வாட்டி வதைக்குது இந்த ஊர்ல. மே மாசம் 2012ம் வருசம் 52 டிகிரி அடிச்சதுதான் அதிகபட்சம். பத்து நிமிசத்துல பாலே கொதிச்சிரும் அவ்வளவு வெய்யில் அது.

Abdaal

குண்டூர் சுற்றுலாத் தளங்கள்

குண்டூர் சுற்றுலாத் தளங்கள்

ரன்டசின்தலா என்கிற ஊர் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

கொண்டவீடு கோட்டை

குண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.

கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.

இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன.

கொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன.

மலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.

மங்களகிரி

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரமே இந்த மங்களகிரி. குண்டூர் மற்றும் விஜயவாடாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த மங்களகிரி கிராமமும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

மங்களகிரி எனும் பெயருக்கு புனிதமான மலை என்பது சொல்லாமலே விளங்கும். பெயருக்கேற்றபடி இந்த கிராமத்தில் பல கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. மற்றொரு சிறப்பம்சம் இங்கு தனித்தன்மையான நெசவுத்துணி வகைகள் கிடைப்பதாகும். மங்களகிரியில் தயாராகும் பருத்தி புடவைகள் தென்னிந்திய பெண்களிடையே விரும்பி அணியப்படும் ஒன்றாகும்.

இந்த நகரத்தில் புகழ் பெற்ற லட்சுமி ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் விஜயம் செய்கின்றனர். ஒரு மலையின்மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்த மலை ஒரு எரிமலையாக இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வெல்லத்தை நைவேத்தியமாக அளித்து பூஜிக்கின்றனர்.

தென்னிந்திய யாத்ரீகர்களும் சுற்றுலாப்பயணிகளும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலின் கோபுர வடிவமைப்பு அக்கால கோயிற்கலைக்கு சான்றாக காட்சியளிப்பதுடன் வேறெங்குமே பார்க்க முடியாத அளவுக்கு சிக்கலான நுணுக்கமான கட்டுமான அமைப்புடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.

உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா

குண்டூர் நகரத்திற்கு தெற்கே சுமார் நான்கு மைல் தொலைவில் இந்த உப்பலபாடு இயற்கை பாதுகாப்பு பூங்கா அமைந்துள்ளது. ஏராளமான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் வகையில் இந்தப்பகுதியில் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன.

பல அரியவகை பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் அருகி வரும் பறவையினங்களை இங்கு பார்க்கலாம். புள்ளி கூழைக்கடா மற்றும் வெளிநாட்டு வண்ணக்கொக்கு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இந்த சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையானது சமீபத்திய வருடங்களில் 12000த்திலிருந்து 7000 என்பதாக குறைந்து காணப்படுகிறது. இதற்கு ‘புவி வெப்பமயமாதல்' உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இருப்பினும் இந்த சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. பல வெளிநாட்டு, தூர தேச புலம்பெயர் பறவைகளை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை பெறுவதற்காக பறவை ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளன. இனப்பெருக்க காலம் என்பதால் இம்மாதங்களில் ஏராளமான புலம்பெயர் பறவைகளை இங்கு பார்க்க முடியும்.

கொடப்பகொண்டா கிராமம்

குண்டூர் நகரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் இந்த கொடப்பகொண்டா கிராமம் அமைந்துள்ளது. நர்சராவ்பேட் எனும் இடத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த கிராமத்துக்கு எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையலாம். கொண்டகவுரு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கிராமம் காலப்போக்கில் கொடப்பகொண்டா என்று மாற்றம் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி மூன்று சிகரங்களுடன் காட்சியளிக்கும் ஒரு மலையும் அமைந்துள்ளதால் இது திரிகூடபர்வதம் என்ற பெயராலும் பிரசித்தமாக அழைக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்தை சுற்றிலும் பல மலைகள் காணப்பட்டாலும் இவற்றில் திரிகூடாச்சலம் அல்லது திரிகூடாத்ரி எனும் மூன்று சிகரங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன. கிராமத்தின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்த மூன்று சிகரங்கள் தெரிகின்றன. இந்த சிகரங்களுக்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கொடப்பகொண்டா கிரமாத்திற்கு அருகில் குத்திகொண்டா எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமும் உள்ளது. இது தட்சிண காசி என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடப்பகொண்டாவுக்கு வருகைதரும் பயணிகள் இந்த குத்திகொண்டாவுக்கும் விஜயம் செய்யலாம்.

புவனேஸ்வர்

புவனேஸ்வர்

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் இந்தியாவின் மிகவும் சூடான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கோடைக்காலங்களில் 40டிகிரி அளவுக்குவெய்யில் கொளுத்தும். இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 45 டிகிரி வரை இருந்துள்ளது.

Balajijagadesh

புவனேஸ்வர் சுற்றுலா

புவனேஸ்வர் சுற்றுலா

ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த புராதன நகரம் 3000 வருடங்கள் பழமையான தொன்மையை கொண்டுள்ளது. இந்த புபனேஷ்வர் நகர்ப்பகுதியில் 2000 கோயில்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த புராதன நகரத்துக்கு ‘இந்தியாவின் கோயில் நகரம்' எனும் சிறப்புப்பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு காணப்படும் கோயில்கள் யாவற்றிலும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை நுணுக்கங்கள் காட்சியளிப்பது ஒரு அற்புதமான சிறப்பம்சமாகும். புபனேஷ்வர், பூரி மற்றும் கொனார்க் ஆகிய மூன்று கோயில் நகரங்களும் ‘ஸ்வர்ண திரிபுஜா' (தங்க முக்கோணம்) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

தௌலிகிரி

தௌலிகிரி எனும் இந்த மலைப்பகுதி புபனேஷ்வர் நகரில் மற்றொரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் பொறிக்கப்பட்ட பாறைக்கல்வெட்டு ஆணை ஒன்று இந்த மலையில் காணப்படுகிறது. காலத்தால் அழியாது காட்சியளிக்கும் இந்த பாறைக்கல்வெட்டு 3ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது ஒரு வியக்கத்தக்க உண்மையாகும். தௌலிகிரி ஸ்தலம் வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. மேலும், ரம்மியமான இயற்கைச்சூழலின் நடுவே ஒரு அமைதி ஸ்தலமாகவும் இந்த தௌலிகிரி மலைப்பகுதி காட்சியளிக்கிறது. நெடுநேரம் அமர்ந்து இயற்கைச்சுழலை ரசிப்பதற்கு இது மிகவும் ஏற்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தௌலிகிரி மலைப்பகுதியில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கப்போர் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில் புத்த மதச்சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந்த மலையின் உச்சியில் ஒரு வெந்நிற பகோடா கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. 1970ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த பகோடா கோயில் மலையின் அழகுக்கு அழகூட்டும் வகையில் வீற்றிருக்கிறது

ராஜாராணி கோயில்

புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த ராஜாராணி கோயில் புராதன கட்டிடக்கலைஞர்களின் திறமைக்கு சான்றாக வீற்றிருக்கிறது. 11ம் நூற்றாண்டில் மத்தியில் கட்டப்பட்ட இந்த கோயில் லிங்கராஜ் கோயிலுக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. இதன் கருவறையில் எந்த தெய்வச்சிலையும் வைக்கப்படாது வெறுமையாக காட்சியளிப்பது இந்த கோயிலின் ஒரு தனித்தன்மையான அம்சமாக கூறப்படுகிறது. இது மன்மதக்கலைக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கோயிலைச்சுற்றிலும் ஆண் பெண் சிருங்கார சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிற மணற்பாறைக்கற்களால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தொல்லியல் துறை இக்கோயில் வளாகத்தை பராமரித்து நிர்வகிப்பது மட்டுமல்லாமல் நுழைவுக்கட்டணம் ஒன்றையும் பார்வையாளர்களிடம் வசூலிக்கிறது.

Sambit 1982

 தல்டோன்கஞ்ச்

தல்டோன்கஞ்ச்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள தல்டோன்கஞ்ச் எனும் பகுதிதான் இந்தியாவின் மிக அதிக சூடான நகரம் எனும் பெயரைப் பெற்றுள்ளது. இங்குதான் 48 டிகிரி செல்சியஸ் வெயில் எல்லா வருடமும் பதிவாகிறது. அதே நேரத்தில் இந்த நகரம் பனிப்பொழிவுடனும் காட்சியளிக்கும்.

பலமு கோட்டைகள்

பலமு கோட்டைகள்

தற்பொழுது அழிவின் விளிம்பில் நிற்கும் இரண்டு கம்பீரமான கோட்டைகள் பலமு சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாகும். இஸ்லாமிய பாணியிலான பழைய கோட்டை மற்றும் புதிய கோட்டைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் உள்ளன.

பலமு கோட்டைகள் ச்ஹெரொ வம்சத்தவற்களுக்கு பாத்தியப்பட்டதாகும். இந்தக் கோட்டை ராஜா மெடினி ரே என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையானது அந்தக் கால கட்டத்தில் எதிரிகளிடமிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கியது. ஆகவே இந்த இரண்டு கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.

பலமு புலிகள் சரணாலயம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே புலிகள் சரணாலயம் இந்த பலமு புலிகள் சரணாலயம் மட்டுமே. மேலும் இது நாட்டில் உள்ள ஒன்பது முதன்மையான புலிகள் சரணாலயத்தில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த சரணாலயம் சுமார் 1,014 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் மைய பகுதி மட்டுமே சுமார் 414 சதுர கி.மீ. அளவிற்கு பரந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 600 சதுர கி.மீ. அளவிற்கு விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் ராமன்டாக், லட்டூ, குகுரும் போன்ற சில வன கிராமங்களும் உள்ளன. இந்தப் பகுதி 1973 ம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே புலிகள் காணப்படுகின்றன. 2012-ம் ஆண்டின் இங்கு ஒரே ஒரு ஆண் புலியும் ஐந்து பெண் புலிகள் மட்டுமே இருந்தன. பலமு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1947-ஆம் ஆண்டில் இந்திய வன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது. இங்கு நீங்கள் புலிகளை தவிர்த்து, யானை, சிறுத்தை, காட்டெருமை, சாம்பார் மற்றும் காட்டு நாய்கள் போன்ற மற்ற விலங்குகளையும் காணலாம். சாகசத்தை விரும்பும் பயணிகளூக்கு இந்த காடு அழகான நீர் வீழ்ச்சிகள், மலை சரிவுகள், இலையுதிர் புல்வெளிகள், போன்றவற்றை வழங்குகின்றது. இந்தப் பகுதியில் முர்ஹு, ஹுலுக், குல்குல், மற்றும் நெதர்ஹத் போன்ற மிக முக்கியமான மலைகளும் இருக்கின்றன.


பிட்லா தேசிய பூங்கா

ஜார்கண்ட் ச்ஹொதங்க்புர் பீடபூமியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் உள்ள பழமையான வன பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு மிகுந்துள்ள பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் வெப்ப மண்டல காடுகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. தற்பொழுது புலிகள் பாதுகாப்பு திட்டம் கீழ் இந்தியாவில் உருவாக்கபட்ட ஒன்பது புலிகள் காப்பகத்தில் இந்தப் பூங்காவும் வருகின்றது. பருவமழைக் காலங்களில் யானை மந்தைகளை நாம் இங்கு மிக எளிதாக காணமுடியும். சிறுத்தை, சம்பார், நீல்காய், கக்கர், சுட்டி மான், ஸ்லோத் கரடி, காட்டு கரடி, மயில் போன்ற விலங்குகள் இங்கு பெரும்பான்மையாக காணப்படுகின்றன. இந்தப் பகுதியின் பசுமையான காடுகள் வழியாக கோல் மற்றும் புர்கா ஆறுகள் ஓடுகின்றன. இது பறவைக் காதலர்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும். இந்தப் பகுதியின் உள்ளே 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிட்லா கோட்டை மற்றும் பிற வரலாற்று நினைவிடங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இந்தப் பகுதிக்கு வருகை புரிகின்றனர். வனப் புகைப்படக்காரர்களுக்கு உதவ இங்கு பல்வேறு கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. இந்தக் காட்டில் சபாரி செய்வதற்கு ஜீப் வசதிகள் இருக்கின்றன. மேலும் இங்கு பயணிகள் வசதிக்காக சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதி வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Skmishraindia

திருப்பதி

திருப்பதி

சீமாந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

Nikhilb239

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கபில தீர்த்தம்

திருப்பதி மற்றும் திருமலாவுக்கு அருகில் சிவனுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கோயில் அமைந்துள்ள ஸ்தலமே கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமலை அடிவாரப்பகுதியில் மலைக்குகை வாசலுடன் காணப்படும் பிரம்மாண்ட கோயிலாக இது காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் வாசற்பகுதியில் சிவனின் வாகனமான நந்தியின் சிலை வீற்றுள்ளது. கபில மஹரிஷி இந்த கோயிலில் சிவபெருமான துதித்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த கோயிலுக்கு கபில தீர்த்தம் என்ற பெயர் வந்துள்ளது. வினாசனம் எனும் நீர்வீழ்ச்சியின் மூலம் கோயிலுக்கு அருகிலேயே ஒரு தீர்த்தக்குளமும் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் மிகப்பிரசித்தமான கோயிலாக விளங்கிய இந்த புராதனக்கோயில் 13 - 16 ம் நூற்றாண்டுகளில் விஜயநகர அரசர்கள் வணங்கி ஆதரித்த ஆலயமாகவும் திகழ்ந்திருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்புக்குள் இந்த கோயிலும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோதண்டராமஸ்வாமி கோயில்

திருப்பதியில் உள்ள இந்த கோதண்டராமஸ்வாமி கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. ராமனுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சியளிக்கும் ராமர் சிலையை தரிசிக்கலாம். புராணங்களின்படி இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய ராமன் இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. நரசிம்ம ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் விஜயநகர கோயிற்கலை அம்சங்களின் பாதிப்பை கொண்டுள்ளது. ஏகதள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் சிம்ம உருவங்கள் பொதிக்கபட்டிருக்கின்றன. இந்த கோயிலின் கோபுரம் வட்டவடிவில் அமைந்து உச்சியில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.

பரசுராமேஸ்வரர் கோயில்

திருப்பதியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் குடிமல்லம் என்ற இடத்தில் இந்த பரசுராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கான இந்த கோயிலின் கர்ப்பகிருகத்துக்குள்ளேயே லிங்கம் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மிகப்பழமையான சிவலிங்கமாகவும் இது சொல்லப்படுகிறது. கி.மு 1ம் அல்லது 2ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இது இருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

Tatiraju.rishabh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X