Search
  • Follow NativePlanet
Share
» »ஹனிமூன் போகணும்னா வடகிழக்கிந்தியாதான்! அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ!

ஹனிமூன் போகணும்னா வடகிழக்கிந்தியாதான்! அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ!

புதிதாக திருமணம் ஆனவர்கள், தங்களை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், இளமையை உணர்ந்து பெற்றோர் உறவினர்களின் அணைப்பு இல்லாத தனியானதொரு வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அறியவும், அதே நேரத்தில் உலகை ரசிக்கவும் ஹனிமூன் செல்வதுண்டு. நம்ம ஊர்லயும் புதுசா கல்யாணம் ஆனதும் ஹனிமூன் போற பழக்கம்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா இருந்துட்டுதான் வருது. ஆனா எப்படியும் இன்னும் சில ஆண்டுகள்ல இந்த பழக்கம் எல்லார்கிட்டயும் வந்துடும். அதுலயும் இப்ப இருக்குற இளம் இணையர்கள் இந்த ஹனிமூன் கொண்டாட்டத்த பெரிய அளவுல எதிர்பார்க்குறாங்க. அப்படி ஒருவேள நீங்க புதுசா திருமணமானவரா இருந்தா உங்களுக்கு ஒரு யோசனை. ஹனிமூனுக்கு நீங்க வட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு போங்க.. என்னது அவ்ளோ தூரமா? அப்படி நீங்க வாயை பிளந்து எவ்ளோ ஆகும்னு யோசிக்கிறது தெரியுது.. வெறும் 850 ரூபாதான்.. வேற என்ன பயணத்துக்கு திட்டமிட வேண்டியதுதான...

சரி.. இந்தியாவுல ஹனிமூன் போகுறதுக்கு வட கிழக்கு இந்திய மாநிலங்கள்தான் மிகச் சிறந்ததுனு உங்களுக்கு நிரூபிக்குறமாதிரி 5 காரணங்கள் சொல்லவா?

 காரணம் 1

காரணம் 1

❁ நீங்க வேற்று உலகத்துல இருப்பதாகவே உணரலாம்

ஆ ஊன்னா ஏலியன் வேற்று உலகம்னு ஆரம்பிச்சுடறான்யானு நீங்க யோசிக்குறது புரியுது. ஆனா நா சொல்றது உண்மைதான். நீங்களே வேணும்னா வட கிழக்கு இந்தியாவுக்கு போன உங்க நண்பங்க கிட்ட கேட்டுப்பாருங்க. நீங்க இந்தியாவுல இருக்கீங்களா இல்ல சைனா காட்டுக்குள்ள இருக்கீங்களானே உங்கள நீங்க கிள்ளிப் பாத்துப்பீங்க அந்த அளவுக்கு சிறப்பா இருக்கும்..

அப்படி அழகான அமைதியான பகுதிகள்ல நீங்களும் உங்க துணையும் கை கோர்த்துக்கிட்டு மாமனார் மாமியார் கொழுந்தன்ஸ் சச்சரவு இல்லாம, ஒன்னு விட்ட ரெண்டு விட்ட சித்தப்பா பெரியப்பா அட்வைஸ் இல்லாம அழகா உங்களுக்குனே படைக்கப்பட்ட அமைதியான ஒரு சாலையில நடந்து உங்க வாழ்க்கைய ரசிச்சி பாத்தா எப்படி இருக்கும்.

சரி சரி.. கற்பனையில மிதக்காதீங்க.. மீதி 4 காரணங்களையும் முழுசா படிச்சிட்டு அப்றம் ட்ரீமோ சாங்க்கோ என்ஜாய் பண்ணுங்க..

காரணம் 2

காரணம் 2

❁ காங்க்டாக் எனும் சொர்க்க பிரதேசம்

சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த காங்க்டாக் பகுதி முன்னாடி காத்மண்டு இருந்த இடத்த ரிபிளைஸ் பண்ணிடிச்சி.. அட காத்மண்டு தான் வெளிநாடு ஆகிடிச்சில.. அப்ப இந்தியாவுக்குனே இருக்குற ஹனிமூன் டெஸ்ட்டினேசன்ல பெஸ்ட் காங்க்டாக்தான்.

ஆமா அங்க என்னலாம் இருக்கு?

வரவேற்பும் தடபுடல் விருந்தும் இயற்கை நம் கண்களுக்கு வழங்க, மனதும் வந்த களைப்பு தெரியாமல் அதன் அழகிலேயே நம்மை கவர்ந்துவிடும். அதுதான் காங்க்டாக்.

மான் பூங்காவும், அழகிய காடுகளும் போதும் இதன் அழகை சொல்ல... அந்த சாலை வழியே நடந்து செல்லும்போதே உங்களுக்குள் இளையராஜா முதல் அனிருத் வரை பலர் வந்து இசை வளர்த்துவிடுவார்கள்.

600 வகை மலர்களையும் நீங்கள் இங்கு காணமுடியும். அவை மிகவும் அழகாகவும் வெவ்வேறு வகை நிறங்களிலும், வடிவங்களிலும் உங்கள் மனதை திருடிவிடும். ஒரு சமயம் உங்கள் துணையுடன் இங்கேயே தங்கிவிடலாமா என்றபடி கேட்கக்கூட தோன்றிவிடும்.

காங்க்டாக் ல வேறென்னலாம் இருக்குனு தெரிஞ்சிக்க விருப்பப்படுறவங்க இத கிளிக் பண்ணி தெரிஞ்சிக்கோங்கப்பா ப்ளீஸ்

காரணம் 3

காரணம் 3

❁ ஷில்லாங்கில் ஒரு சிலிர்க்கவைக்கும் சிலாக் சிலாக் பயணம்

சங்கு ஏரிக் கரையில எரும மாட்டு மேல அழகான சவாரி ஒன்னு போனா போதும். அட எரும மாட்டு மேலயான்னு கேக்காதீங்க.. யாக் அப்படிங்குற ஒரு வகை விலங்கத்தான் அப்படி சொல்லிட்டேன். வடகிழக்கு மாநிலங்கள்லயே அதிக படிப்பறிவு கொண்ட மக்கள் வசிக்கும் பூமி இது. இங்கு ஹனிமூன் போறவங்க என்ன பண்ணலாம்னு தான கேக்குறீங்க!

போட் ரைட் போலாம், தாவரவியல் பூங்காவுல நேரம் கழிக்கலாம், உங்கள் துணையோட பேசி மகிழலாம், அருங்காட்சியகம் இருக்கு, லேடி ஹிடாரி பூங்காவுல ஜப்பானிஸ் தோட்டம் அழகு கலை வண்ணங்கள ரசிச்சி ரசிச்சி உருகலாம்...

சரி என்னெல்லாம் வாங்கலாம்?

மூங்கில் கைவினை பொருள்கள் வாங்கலாம், அழகிய வண்ணங்கள் நிறைந்த கலைகள் கொண்ட சாவ்ல்கள், துணி மணிகள், காசி காடுகள்ல கிடைக்குற ஸ்கிரப்கள் ஆகியவை வாங்கலாம். அப்பறம் புரா பஜார் ல கிடைக்குற மோமோஸ். சும்மா சொல்லலப்பா நம்ம ஊர்ல கிடைக்கிறதவிட நூறு மடங்கு நல்லா இருக்குனு நண்பரே சொல்லிருக்கார்னா பாத்துக்கோங்களேன்.

காரணம் 4

காரணம் 4

❁ சிரபுஞ்சியில் வாழ்க்கையை உணர்வோம்

நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த இடம் நிச்சயமாக இருக்கும் என்பதை நாம் அங்கு சென்றதும் உணர்வோம்.

அட.. மலையில ஏறி அங்க வீசுற காத்த சுவாசிச்சாலே நமக்குள்ள ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு வரும். ஏன்னா அங்க இருக்குற மலைகள் அப்படி பிரம்மாண்டமா இருக்கு.. எங்குட்டு திரும்புனாலும் பச்ச பச்சயா கெடக்கு.. நம்ம ஊர்லலாம் இப்படி ஒரு இடத்த பாக்குறது ரெம்பவே அரிது. இந்த மாதிரி இடத்துல உங்க துணையோட கிளம்பி போனீங்கனு வையுங்க.. உங்க வாழ்க்கையோட தத்துவத்த புரிஞ்சிப்பீங்கனே சொல்லலாம்.

சரி அப்படி அங்க என்னலாம் இருக்கு?

மேகாலயா மாநிலம் உலகம் முழுவதும் புகழ்பெற காரணமே இந்த சிரபுஞ்சிதான். அதிக அளவு மழைப் பொழிவு இருப்பது இதற்கு காரணமாகும். இங்கு எப்போதுமே அழகிய சூழ்நிலை நிகழும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் எங்கேயும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், மலைகளின் எழில் காட்சிகள் என உங்கள் இருவரையும் அலேக்கா தூக்கி டூயட் லொகேஷனுகுள்ள போட்டமாதிரி வச்சி செஞ்சிடும் இந்த இடம்.

ஆரஞ்ச் பழம் மிகவும் பிரபலம். மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, நோகலிகை நீர்வீழ்ச்சி, டெயின்-த்லென் நீர்வீழ்ச்சினு இவ்ளோ இடங்கள நீங்க கட்டாயம் பாத்துட்டு வரணும்.

❁ லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

❁ லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

வழக்கமா சொல்ற டயலாக்கா இருக்கே.. சரி கட்ட கடைசியா வந்தாலும் டாப்பான பாய்ண்ட் இத்தான். உங்களுக்கு எந்த வித தொந்தரவும் இருக்காது.

உங்க மன நிலை எப்போதுமே அமைதியா இருக்கும். அட நிஜமா சொல்றேன்.. நீங்க பயணம் போகும்போதும் சரி, இயற்கைய ரசிக்கும் போதும் சரி உங்க மன நிலை சீராவே இருக்கும். உங்களுக்குள்ள பதைபதைப்பு இருக்காது.. பெரிய அளவுல மனச் சோர்வு இருக்காது.ஏன் உடம்பு கூட பலமா இருக்கும். அட ஹனிமூனுக்கு போயிட்டு பாதில திரும்பி வந்துடக்கூடாது பாருங்க.. வட கிழக்கு மாநிலங்களுக்கு போனா உங்க ஹனிமூன் திட்ட நாட்கள் இன்னும் எக்ஸ்ட்ரா ஆகுமே தவிர குறையாது. சரி சரி.. நீங்க இப்ப டூயட் பாட ஆரம்பிக்க... அடுத்த கட்டுரையில சந்திக்கிறோம்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more