Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா ?

இந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா ?

முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். இந்த பெரும் சாம்ராஜ்யத்தின் கடைசி முகலாய அரசர் இரண்டாம் பாதூர் ஷாஹ் 1857ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் என்பது ஒரு சோக வரலாறு. இப்படி சூழ்ச்சியின் பயனாக இந்திய தேசத்தின் அதிகார பீடத்தை ஆங்கிலேயேர்கள் கைப்பற்றியது முகலாய பேரரசின் முடிவாக அமைந்தது.

என்னதான் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் முகலாய அரசர்களின் இருப்பிடமாக இருந்த செங்கோட்டை ஆகும். இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

செங்கோட்டை :

செங்கோட்டை :

முகலாய பேரரசர் ஷாஹ் ஜகானால் 1547ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டையில் இருந்துதான் கிட்டத்தட்ட 200 வருடங்கள் அதாவது 1857ஆம் ஆண்டு வரை முகலாய அரசர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.

Christopher John SSF

செங்கோட்டை :

செங்கோட்டை :

இந்த கோட்டையின் சுவர்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவப்பு நிற மணற்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகவே 'செங்கோட்டை' என இவ்விடம் அழைக்கப்படுகிறது.

Dennis Jarvis

செங்கோட்டை :

செங்கோட்டை :

செங்கோட்டையின் மதில் சுவர்களுக்குள் ஒரு முழுமையான நகரமே இயங்கி வந்திருக்கிறது. தெளிவாக திட்டமிடப்பட்ட வீதிகள், கோட்டை முழுமைக்கும் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான ஓடைகள், அரசர் மக்களை சந்திக்கும் தர்பார் போன்றவை இக்கோட்டையினுள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Christopher John SSF

செங்கோட்டை :

செங்கோட்டை :

தாஜ் மஹாலை வடிவமைத்த 'உஸ்தாத் அஹமத் லஹுரி' என்பவர்தான் ஷாஹ் ஜகானின் உத்தரவின் பெயரில் இந்த செங்கோட்டையையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1638ஆம் ஆண்டு இதற்க்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு 1648ஆம் ஆண்டு நிறைவுற்றிருக்கிறது.

Christopher Chan

செங்கோட்டை :

செங்கோட்டை :

பேரரசர் ஷாஹ் ஜகானின் ஆட்சி காலத்திலும், பின் அவரின் மகனான அவுரங்கசீபின் ஆட்சி காலத்திலும் செங்கோட்டை முகலாய அரசின் மையமாக, நினைத்துகூட பார்க்க முடியாத செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது.

அவுரங்கசீபின் ஆட்சி காலத்தில் செங்கோட்டையில் உள்ள அரசரின் அந்தப்புர சுவர்களில் விலையுயர்ந்த வெண்முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Russ Bowling

செங்கோட்டை :

செங்கோட்டை :

அவுரங்கசீபின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 18ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக முகலாய வம்சம் அழிவை சந்தித்தது. 1739ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர் ஷாஹ் மிக எளிதாக முகலாய படையை தோற்கடித்ததோடு செங்கோட்டையையும் சூறையாடினார்.

அப்போது இங்கிருந்த விலைமதிக்க முடியாத மயில் சிம்மாசனம் மற்றும் பல அரிய கற்கள் மற்றும் ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

Christopher John SSF

செங்கோட்டை :

செங்கோட்டை :

கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயேர்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 1857ஆம் ஆண்டு செங்கோட்டையில் வசித்துவந்த கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பாதூர் ஷாஹ்வை கைது செய்து கோட்டையினுள்ளேயே சிறை வைத்தனர் .

Saad Akhtar

செங்கோட்டை :

செங்கோட்டை :

ஒரு வருடம் கழித்து 1858ஆம் ஆண்டு இரண்டாம் பாதூர் ஷாவை மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்கூனுக்கு நாடுகடத்தியதொடு கொடிகட்டி பறந்த முகலாய சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

அதன் பின்னர் இந்த செங்கோட்டையில் இருந்த தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கலைநயமிக்க மரச்சாமான்கள், அழகிய தோட்டங்கள், அரண்மனை பணியாளர்களின் வீடுகள் போன்ற அனைத்தும் அழிக்கப்பட்டன.

Shashwat Nagpal

செங்கோட்டை :

செங்கோட்டை :

இந்த கோட்டையில் இருந்து நாதிர் ஷாஹ்வால் கொள்ளையடிக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களான கோஹினூர் வைரம், ஷாஹ் ஜகானின் வைன் கோப்பை, இரண்டாம் பாதூர் ஷாஹ்வின் மணிமுடி போன்றவை ஆங்கிலேயே அரசினால் கைப்பற்றப்பட்டு லண்டனில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.

Arian Zwegers

செங்கோட்டை :

செங்கோட்டை :

இந்த கோட்டையில் உள்ள லாகூர் கேட் என்ற நுழைவு வாயிலில் தான் இந்திய பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நேரு இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பாரத பிரதமர் இக்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாக இருக்கிறது.

Dennis Jarvis

செங்கோட்டை :

செங்கோட்டை :

இன்று டெல்லியில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக செங்கோட்டை திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் இங்கே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்களை கவரும் விதமாக ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் முகலாயர்களின் வரலாற்றை சொல்லும் விதமாக் ஒளி - ஒலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Christopher John SSF

செங்கோட்டை :

செங்கோட்டை :

இந்த கோட்டையினுள் தெற்கு பகுதியில் பணிப் பெண்கள் தங்கும் இடமான மும்தாஜ் மஹால், அரசிகள் மற்றும் இதர மனைவியர் தங்கும் இடமான ரங் மஹால், மற்றும் அரசர் தங்கும் இடமான க்ஹஸ் மஹால் ஆகியவை இருக்கின்றன.

இதில்மும்தாஜ் மஹாலில் அருங்காட்சியகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

LASZLO ILYES

செங்கோட்டை :

செங்கோட்டை :

அரசர் மக்களை சந்திக்கும் இடமான திவான் இ க்ஹஸ் என்ற இடமும் செங்கோட்டையினுள் இருக்கிறது. வெள்ளை பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட இந்த இடத்தில் தான் அரசர் மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

பிரான்கிஸ் பேர்னியர் என்னும் பிரஞ்சு பயணி 17ஆம் நூற்றாண்டின் போதுதிவான் இ க்ஹஸில் பின்னாளில் காணாமல் போய் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கும் மயில் சிம்மாசனத்தை கண்டதாக தன்னுடைய பயண புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Christopher John SSF

செங்கோட்டை :

செங்கோட்டை :

இந்த கோட்டைக்கு முன்பாகவே சவாரி பஜார் என்ற பழமையான கடை வீதி ஒன்று இருக்கிறது. முகலாயர் காலத்தில் இருந்து இயங்கிவரும் இந்த கடை வீதியில் விதவிதமான துணி வகைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கலாம்.

Paul Simpson

செங்கோட்டை :

செங்கோட்டை :

டெல்லிக்கு சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய இடங்களில் இந்த செங்கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டையை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: new delhi historic places forts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X