Search
  • Follow NativePlanet
Share
» » உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?

உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?

இந்தியா உலகிலேயே மிக பழமையான நாடு என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆதி காலத்தில் கடலுக்குள் மூழ்கிய லெமுரியா கண்டம் முதல் சமீபத்தில் மூழ்கிய பூம்புகார் வரை இந்தியர்களின் வரலாறு தொன்று தொட்டு இருக்கிறது. ஆனால் இந்தியா உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்திருகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மைதான். சிந்து சமவெளி, ஆரியர்கள், மௌரியர்கள், சோழர்கள், குப்தர்கள் என நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தியா 7 ஆவது இடத்தில் என்றால் முதல் இடத்தில் உள்ள நாடு எது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

644px-sacred-tank-at-madura-1674453397.jpg -Properties
Photo Credit: Romesh Chunder Dutt]
Romesh Chunder Dutt]

உலக மக்கள்தொகை மதிப்பாய்வு பட்டியல்

உலக மக்கள் தொகை மதிப்பாய்வின் (WPR) பட்டியலின்படி, ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேதியின்படி இந்தியா உலகின் ஏழாவது பழமையான நாடாகும். மதிப்பாய்வின்படி, இந்தியாவின் ஆரம்பகால அரசாங்கம் கிமு 2000 இல் நிறுவப்பட்டது என்று சான்றுகள் கூறுகின்றன.

ஆனால், யார் மூத்தவர் என்ற கேள்வி மனதில் எழுகிறது. WPR இன் பட்டியலில், ஈரான் உலகின் பழமையான நாடாக கருதப்படுகிறது. ஈரானின் அரசாங்கம் கிமு 3200 இல் நிறுவப்பட்டது என்று WPR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

800px-plate--2-1674453548.jpg -Properties
Photo Credit: Romesh Chunder Dutt]
Romesh Chunder Dutt]

உலகின் மிக பழமையான நாடுகள்

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3200 ஆண்டுகள் பழமையான ஈரான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் தேதியின் அடிப்படையில் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு உலகின் மிகப் பழமையானவை என்று கருதும் முதல் பத்து நாடுகள் இதோ

1. ஈரான் - கிமு 3200

2. எகிப்து - கிமு 3100

3. வியட்நாம் - கிமு 2879

4. ஆர்மீனியா - கிமு 2492

5. வட கொரியா - கிமு 2333

6. சீனா - கிமு 2070

7. இந்தியா - கிமு 2000

8. ஜார்ஜியா - கிமு 1300

9. இஸ்ரேல் - கிமு 1300

10. சூடான் - கிமு 1070

800px-karli_-32-1674454240.jpg -Properties
Photo Credit: Romesh Chunder Dutt]
Romesh Chunder Dutt]

சுய இறையாண்மை அடிப்படையில் பழமையான நாடுகள்

வேறுபட்ட அளவுகோலைப் பயன்படுத்தி, உலக மக்கள்தொகை மதிப்பாய்வு மூலம் சுய-இறையாண்மை தேதியின்படியும் உலகின் மிகப் பழமையான நாடுகளின் பட்டியலை உலக மக்கள்தொகை மதிப்பாய்வு தயார் செய்துள்ளது. அந்த பட்டியலில் ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடாக முதல் இடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து சீனா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் பட்டியலில் உள்ளன.

1. ஜப்பான் - கிமு 660

2. சீனா - கிமு 221

3. சான் மரினோ - கிபி 301

4. பிரான்ஸ் - கிபி 843

5. ஆஸ்திரியா - கிபி 976

6. டென்மார்க் - கிபி 1000

7. ஹங்கேரி - கிபி 1001

8. போர்ச்சுகல் - கிபி 1143

9. மங்கோலியா - கிபி 1206

10. தாய்லாந்து - கிபி 1238

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X