Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!

இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!

இந்தியாவின் பழமையான நாகரிகம் ஹரப்பா - மொகஞ்சதாரோ சிந்து சமவெளி நாகரிகம் என்றும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகள் இன்றளவும் உலக அளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார் தான் இந்தியாவின் மிக பழமையான நகரம் என்பதற்கான தகவல்கள் வெளி வந்துள்ளன. அதன்படி நாம் இவ்வளவு நாட்களாக 2,500 ஆண்டுகள் பழமையான நகரம் பூம்புகார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது 15,000 ஆண்டுகள் பழமையானது என்று சான்றுகள் கூறுகின்றன! அதனைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

வரலாற்றை கண்டறிய துவங்கப்பட்ட ஆய்வு

வரலாற்றை கண்டறிய துவங்கப்பட்ட ஆய்வு

2, 500 ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்பட்ட இந்த நகரம், இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பழமையான துறைமுக நகரமாக இருக்கக்கூடும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. NIOT எனப்படும் தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், தற்போதைய கடற்கரையில் இருந்து கடலில் 40 கி.மீ தொலைவில், நீருக்கு அடியில் 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் துறைமுக நகரம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நாகரிகம்

கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நாகரிகம்

இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் பள்ளத்தாக்குகளும் நீர் வீழ்ச்சியும்

கடலுக்கு அடியில் பள்ளத்தாக்குகளும் நீர் வீழ்ச்சியும்

மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே காவிரியும், அதன் கிளை நதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளும், பெரிய நீர் வீழ்ச்சியும் கண்டறியப் பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த அட்டவணைப்படி நடத்திய ஆய்வில், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை கடற்கரை நகரமாக இருந்தது தெரியவந்துள்ளது.

பூம்புகாரின் வயது 2,500 அல்ல 15,000

பூம்புகாரின் வயது 2,500 அல்ல 15,000

இந்த ஆய்வில் கண்டறிந்தஉண்மைகள் பூம்புகார் 2,500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்களுக்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன்முதலில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் பழமையான நகரமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இவை யாவும் சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம் போன்றவற்றால் இடம் மாறி வந்த இந்த 3 பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும்.

பூம்புகாரை ஒட்டி அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்

பூம்புகாரை ஒட்டி அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்

எத்தனை பழமை வாய்ந்த நம் நகரத்தை கடல் கொண்டு போய் விட்டதே நாம் கவலை படுகிறோம் அல்லவா! என்ன செய்வது? ஆராய்ச்சி முடிய இன்னும் நாட்கள் இருக்கின்றன. எத்தனை எத்தனை அதிசயங்களை நாம் காணப் போகிறோம் என்று தெரியவில்லை! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கீழே உள்ளவை தான் பூம்புகாரை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்கள்!o டச்சுக் கோட்டை, தரங்கம்பாடி

o பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

o பூம்புகார் கடற்கரை

o புதிய ஜெருசலேம் தேவாலயம், தரங்கம்பாடி

o அணைக்கரை டேம்

o அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில்

o தரங்கம்பாடி பழைய துறைமுகம்

மேலும் நீங்கள் அருகிலுள்ள திருக்கடையூர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களையும் ஆராயலாம்.

பூம்புகாரை பற்றிய மற்றொரு ஆய்வின் முடிவு

2020 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த K.சீதா அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வந்துள்ளன்ன.

o மயிலாடுதுறை பகுதியில் பழங்கால மனிதனின் இருப்பை உறுதிப்படுத்த இங்கு காணப்படும் பழங்காலப் பாத்திரங்கள் அல்லது வளங்கள் போதுமானவை.

o மயிலாடுதுறை என்ற பெயர் மயிலின் நகரத்திற்கு பிரபலமான இடத்தை குறிக்கிறது, அதாவது மயில் நகரம்.

o மயிலாடுதுறை மண்டலத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சேர்ந்த பல மன்னர்களின் கிட்டத்தட்ட பத்தொன்பது கல்வெட்டுகள் உள்ளன.

o விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் புதிய கற்கால மனிதன் இருந்தான் என்ற உண்மையை புதிய கற்கால சமூகத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

o சமீபத்தில், மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் கிராமத்தில் இரண்டு கற்காலக் கருவிகளை ஆசிரியர் ஒருவர் மீட்டுள்ளார்.

o அகழ்வாராய்ச்சியின் போது, மயிலாடுதுறைக்கு அருகில் கம்பர்மேட்டில் இரும்பு வயது கலாச்சாரம் அல்லது பெருங்கற்கால மட்பாண்டங்கள் கிடைத்தன.

o புகழ்பெற்ற காவேரிபூம்பட்டினம் மற்றும் பூம்புகார் என்றழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற துறைமுக நகரம் சங்க காலத்தின் முதல் சோழர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன.

o கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இப்போது ஒரு முக்கிய மீன்பிடி கிராமமாக, காவிரி ஆற்றங்கரையில் கடலை சந்திக்கிறது. .

o மயிலாடுதுறை பகுதியும் அதன் சுற்றுப்புறங்களும் சங்க காலத்திற்குப் பிந்தைய காலத்தில், பல்லவர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்பு முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: mayiladuthurai tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X