Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா?

உலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா?

உலகின் முதல் வெள்ளைப் புலியைக் காண செல்வோமா?

By Udhaya

மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமங்கள் பல உள்ளன. இதனைத் தவிர, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அழகும், மனிதனால் படைக்கப்பட்ட அற்புதங்களையும், ரேவா நகரில் ஒரு சேர காணமுடியும். வெள்ளைப் புலிகளுக்கு புகழ் வாய்ந்த நகரம் ரேவா. இப்படி நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பல அழகிய சுற்றுலாத் தலங்களை கொண்டு விளங்குகிறது ரேவா நகரம். வாருங்கள் இங்கு ஒரு சுற்றுலாவுக்கான அம்சங்களை கண்டு வருவோம்.

எங்கெல்லாம் செல்லலாம்

எங்கெல்லாம் செல்லலாம்

பிஞ் பஹார், வடக்கு கீழ் பகுதி, கைமோர் பஹார் மற்றும் ரேவா பகுதி என நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் தவிர்த்து, ரேவா நகரில் பாகேல் அருங்காட்சியகம், ரேவா கோட்டை, பிலி கோதி, கோவிந்த்கர் கோட்டை, கோவிந்த்கர் அரண்மனை, வெங்கட் பவன், ரானி தளாப் கிணறு, ஏபிஎஸ் பல்கலைக்கழக அரங்கம், பைரோம் பாபா சிலை, ராணிபூர் கர்ச்சூலியான், கியோந்தி நீர்வீழ்ச்சி, பூர்வா நீர்வீழ்ச்சி, சாச்சாய் நீர்வீழ்ச்சி என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன.
wiki

முதல் வெள்ளைப் புலி

முதல் வெள்ளைப் புலி

ரேவா நகரின் வரலாறு நர்மதா ஆற்றின் மற்றொரு பெயர் ரேவா என்பதாகும். கி.பி 3-ஆம் நூற்றாண்டில், இம்மாவட்டத்தில் உள்ள பகுதிகளை, மௌரிய சாம்ராஜய அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். மேலும், முதன் முதலாக வெள்ளைப் புலியைக் கண்டதும் ரேவாவில் தானாம்.

SusuMa

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

விமானம், ரயில் அல்லது சாலை வழியாக எளிதில் ரேவா நகரை அடையமுடியும். கஜூரஹா விமான நிலையத்தில் இறங்கி, கார் அல்லது பேருந்து மூலம் ரேவாவை அடையலாம். ரேவாவில் ரயில் நிலையம் உள்ளது. இது நகருக்கு மிக அருகில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எளிதில் இங்கு வர முடியும். மேலும் கஜூராஹாவில் இருந்து பல பேருந்துகள் ரேவாவுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலமாகவும் ரேவா நகரை அடையலாம். ரேவா நகரை ரசிக்க ஏற்ற காலம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் மழைக்காலத்தில் ரேவாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

vishaka jayakumar

ரேவா கோட்டை

ரேவா கோட்டை

மத்திய பிரதேசத்தில் இருக்கும் அழகிய கோட்டைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ரேவா கோட்டை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த பண்பாட்டையும், நாகரிகத்தையும் உணர்த்தும் வகையில் இருக்கிறது ரேவா கோட்டை.

வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலா வருகின்றனர். இப்போது ரேவா கோட்டையில், சுற்றுலாப் பயணியாக நாம் சென்று தங்கவும் முடியும். சலீம் ஷா என்ற மன்னரால் தொடங்கப்பட்டு, பின்பு கட்டி முடிக்கப்படாமல் இருந்தது இந்தக் கோட்டை. அதன் பிறகு ரேவா அரசர் இதனைக் கட்டி முடித்திருக்கிறார்.
Lala Deen Dayal

கோவிந்த்கர் கோட்டை

கோவிந்த்கர் கோட்டை

மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தில் இருக்கும் கோவிந்த்கர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் பெரிதும் கவர்ந்துள்ளது. ரேவாவை ஆட்சு புரிந்த மகாரஜரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, கோடை காலத்தின் தலைநகராக திகழ்ந்திருக்கிறது. எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோவிந்த்கர் கோட்டையை சுற்றி பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு மத்தியபிரதேச அரசு, இந்தக் கோட்டையை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்தக் கோட்டையை சிறப்புமிக்க தங்குமிடமாக மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. கோவிந்த்கர் கோட்டையின் அழகைப் பராமரிக்க, தனியார் நிறுவனமும், மத்தியபிரதேச அரசும் பெரும் தொகையை செலவு செய்திருக்கின்றன. மேலும், ஷாருக்கான் நடித்த அசோகா படத்தில், இங்கிருக்கும் அருங்காட்சியகப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Gobindgarh Fort

 கோவிந்த்கர் அரண்மனை

கோவிந்த்கர் அரண்மனை

ரேவாவை ஆட்சு புரிந்த மகாராஜர், கட்டிய அரண்மனை கோவிந்த்கர் அரண்மனை. ரேவா நகரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் இருக்கும் இந்த அரண்மனையைச் சுற்றி கியோந்தி, சாச்சை, பச்சூத்தி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. பிஹாத் மற்றும் பிச்சியா ஆறுகள் இங்கு தான் ஒன்று கூடுகிறது.

இந்த அரண்மனையில், பூமிக்கடியில் ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. ரேவா அரசரின் ரகசிய பாதையாக பயன்பட்டிருக்கிறது. சவ்வந்தித் திருக்கோவில், ஹனுமான் திருக்கோவில் என இந்த அரண்மனையைச் சுற்றிப் பல கோவில்கள் உள்ளன.

கோவிந்த்கர் ஏரிக்கரையில் இந்த அரண்மனை அமைந்திருக்கிறது. கோவிந்த்கர் ஏரியை பகேலா அரசர்கள் உருவாக்கினார்கள் என்பது கூடுதல் தகவல். கோவிந்த்கர் அரண்மனையில், வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.

1952 இல் பிடிபட்ட வெள்ளைப் புலியை, முதன் முதலாக இந்த மியூசியத்தில் தான் வைத்திருந்தார்கள். அந்த வெள்ளைப் புலிக்கு மோகன் என பெயரிட்டு மகிழ்கின்றனர் அந்த ஊர் மக்கள்.

Lala Deen Dayal

 கியோந்தி நீர்வீழ்ச்சி

கியோந்தி நீர்வீழ்ச்சி

கியோந்தி நீர்வீழ்ச்சி, நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள லால்கோன் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில், கியோந்தி நீர்வீழ்ச்சி 24 ஆம் இடத்தில் உள்ளது. இயற்கை எழில் நிறைந்த பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல பெரிதும் விரும்புகின்றனர். தம்சா ஆற்றின், துணை ஆறான மஹானா ஆற்றில் இருந்து கியோந்தி நீர்வீழ்ச்சி தோன்றுகிறது. சுமார் 98 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. உள்ளூர் மக்கல் இவ்விடத்தை புனிதமாக கருதி, தினந்தோறும் பூஜை வழிபாடு செய்கின்றனர். நீர்பாசனம், விவசாயம் மற்றும் குடிநீருக்காக இந்த நீர் பயன்படுத்தப்படுகிறது.

Syedzohaibullah

பூர்வா நீர்வீழ்ச்சி

பூர்வா நீர்வீழ்ச்சி

பூர்வா நீர்வீழ்ச்சி, ரேவா மாவட்டத்தில் இருக்கும் மற்றுமொரு அழகிய நீர்வீழ்ச்சி ஆகும். சுமார் 70 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிது கவர்ந்திழுக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருப்பதால், பூர்வா நீர்வீழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். டன்ஸ் ஆற்றிலிருந்து தோன்றிய இந்த நீர்வீழ்ச்சி, ரேவா பகுதியின் வடக்கே பாய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால், இந்த சமயத்தில் பல்வேறு கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. புகழ்பெற்ற சித்ரகூட் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பூர்வா நீர்வீழ்ச்சியை, வெப்பம் தணிந்து குளிராக இருக்கும் மார்ச்-மே மாத காலங்களில் சுற்றுலாப் பயணம் செய்வது சிறப்பாக இருக்கும்.


Syedzohaibullah

Read more about: travel madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X