Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பதினெட்டு + வயதானவர்கள் மட்டும் போகும் அட்டகாசமான சுற்றுலா!

இந்தியாவில் பதினெட்டு + வயதானவர்கள் மட்டும் போகும் அட்டகாசமான சுற்றுலா!

தாஜ்மஹாலை பார்க்கும் அந்த கணம் வார்த்தைகள் எல்லாம் பயனற்று போய் நமது அன்பானவருடன் கைகளை கோர்த்து விவரிக்க முடியாத பரவச அனுபவத்தை பெறலாம்.ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்: வெண்பனி மெலிதாய் அகல

By Udhaya

இந்தியா கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஊர். இங்கு திருமணமானவர்கள் கூட இதைப் பற்றிப் பேச கூச்சப்படுவார்கள். அட இப்படியெல்லாம் இருக்கா என ஆச்சர்யப்படுவார்கள். திருமணத்துக்கு முன்பு பாச்சுலர் பார்ட்டி என்று கேள்விப்பட்டு அதை நினைத்து ச்ச என்ன மாதிரியான கலாச்சாரம் என்று சலித்துக்கொள்வார்கள். லிவ்வின் வாழ்க்கையை பத்தி தெரிஞ்சிக்கிட்டா போதும், நாட்டை சீர்கெடுக்க வந்தவர்கள் என்று கோபப்படுவார்கள். நிற்க..

சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ கடவுளின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ கடவுளின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்

இதெல்லாம், 80ஸ் கிட்ஸ் காலம். இப்ப 90ஸ் கிட்ஸ் கல்யாணத்துக்கு தயாராகி (சில பேருக்கு கல்யாணமே முடிஞ்சிருச்சிருக்கும்) ஐடி வாழ்க்கை, அழகழகா சேர்க்கைனு நட்புக்களோட வாழ்க்கைய என்ஜாய் பண்ணுற காலம். உலகம் முழுக்க சுத்தி வரணும்னு ஆச இருந்தாலும், அட்லீஸ்ட் இந்தியாவயாச்சும் சுத்தி வரணும்னு தன் மனச தேத்திக்கிட்டு, கடைசில கோவா பிளான கூட நிறைவேத்த முடியாம இருக்குற மொரட்டு சிங்கிள்ஸ்களுக்கு இந்த கட்டுரை நிச்சயமா உதவும். ஒன்லி அடல்ட்ஸ் கம்மிங் இன்சைட்.. அதர் பிப்பிள் நோ படிச்சிஃபையிங்க்.

அய்யய்யோ ஒடனே போய்டாதீங்க.. இந்த கட்டுரையில திருமணமானவர்கள் (காதலிப்பவர்கள் கூட இருக்கலாம். உங்க இஷ்டம்) தங்கள் துணையோடு ரொமான்ஸ் பண்ண ஏத்த இடங்கள பத்திதான் சொல்லப்போறோம். அட இதுதான் நிறைய வாட்டி சொல்லிட்டாங்களேனு நினைக்கலாம். ஆனா இது புதுசு.. கட்டாயம் படிங்க.. அதுக்கு முன்னாடி, மேல இருக்குற பெல் பட்டன அமுக்கி சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டீங்கன்னா இங்க நாங்க போடுற ஆர்ட்டிக்கிள்ஸ் கண்ண மூடிட்டு மின்னல் வேகத்துல உங்க ஸ்கிரீன தட்டும்.

உங்களுக்கு வழித்துணையா க்ரிஷும், சான்யாவும் வராங்க.. என்ன தயாரா போலாமா.. ரைட்டு விடு ஜூட்..

எங்கெல்லாம் போகப்போறோம்....

எங்கெல்லாம் போகப்போறோம்....

ஹாய் டூட்ஸ். திஸ் இஸ் க்ரிஷ். ஷி இஸ் சான்யா.. நம்ம இப்ப இந்தியாவுல இருக்குற ரொமாண்டிக்கான இடங்களுக்கு டூர் போகப்போறோம். எங்கெல்லாம் போப்போறோம்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு வந்துருக்கோம். அத பத்தி இப்ப சான்யா சொல்வாங்க.

ஹாய் பிரண்ட்ஸ்.. நம்ம க்ரிஷ் சொன்ன மாதிரியே, இந்த இந்த இடங்களுக்குலாம் போகலாம்னு நாங்க ரெடி பண்ணிட்டு வந்த லிஸ்ட் இதோ..

ஆக்ரா

ஸ்ரீநகர்

லடாக்

ஷிம்லா

வெல்சாவோ

சிரிடாவோ

லவ்வர்ஸ் பீச்

ஹோலன்ட் பீச்

பட்டர்பிளை பீச்

மாண்ட்ரேம் பீச்

எமரால்ட் லேக்

ஊட்டி போட்டிங்

பைக்காரா பால்ஸ்

தூவானம் அணை

வெள்ளிமலை

மேக மலை

கொடைக்கானல்

கூர்க்

ஆலப்புழா


வர்க்கலா

பெக்கல்

குமரகோம்

கோவளம்

தேக்கடி

வயநாடு

ரிஷிக்கொண்டா

குடகு மலை

கபினி

இதெல்லாம் பாத்தா நிறைய இடங்கள் ஏற்கனவே பாத்துட்டோமேனு தோணுதா.. ஆனா அந்த அந்த பகுதிகள்ல பாக்கவேண்டிய முக்கியமான இடங்கள பத்தி பாத்துருக்கீங்களா. அததான் நானும் க்ரிஷ்ஷும் உங்களுக்கு சொல்லப்போறோம்.

யு ஆர் ரைட் சான்யா. நானும் இவங்களும் பர்ஸ்ட் நார்த் இன்டியாவுல இருக்குற சூப்பரான இடங்கள பத்தி சொல்றோம். அங்க எங்கெல்லாம் போகலாம்.. எங்கெங்க அனுபவிக்கலாம். தனிமையில் இனிமை காணும் இடங்கள் எவை எல்லாத்தையுமே இந்த ஒரு பதிவுல பாக்கலாம். வா சான்யா போகலாம்.

 தாஜ் மஹால்

தாஜ் மஹால்

தாஜ் மஹால், லவ்னா உண்மையில் இத்தனை சக்தி வாய்ந்ததா என உலகை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்ற அதிசய பொக்கிஷம். யமுனை ஆற்றின் கரையில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட காதலின் சின்னமான தாஜ் மகாலை விட ஹனிமூனுக்கு செல்ல வேறு சிறந்த இடம் இருக்க முடியுமா என்ன? சொல்லு சான்யா..

கண்டிப்பா இருக்கவே முடியாது க்ரிஷ். இந்த தாஜ்மஹால பத்தி இன்னும் கொஞ்சம் டிடெய்ல்ஸ் சொல்லேன் தெரிஞ்சிக்கிறேன்.

தாஜ்மஹாலை பார்க்கும் அந்த கணம் வார்த்தைகள் எல்லாம் பயனற்று போய் நமது அன்பானவருடன் கைகளை கோர்த்து விவரிக்க முடியாத பரவச அனுபவத்தை பெறலாம்.ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்: வெண்பனி மெலிதாய் அகலும் காலை நேரத்தில் இங்கு செல்கையில் தாஜ்மஹாலின் பரிசுத்தமான அழகை மனம் குளிர ரசிக்கலாம்.

என்ன க்ரிஷ் கவிதையெல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட.. ஹூம்..

பின்ன... தாஜ்மஹால் சொன்னா காதலும், கூடவே கவிதையும் சேர்ந்தே வந்துடுதுல்ல..

ஆமாங்க.. இந்த தாஜ்மஹால பத்தி நாங்க சொல்றதவிட உங்க துணையோட நீங்க சேர்ந்து வந்து இங்க அனுபவிக்கும்போதுதான், அதன் அருமை புரியும். சரி தாஜ்மஹாலுக்கு எப்படி போலாம் சொல்லு..

தலைநகர் தில்லியில் இருந்து 204 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆக்ராவை தேசிய நெடுஞ்சாலை 2இன் மூலமாக மூன்று மணி நேர பயணத்தில் சென்றடையலாம். மேலும் தில்லியில் இருந்து ஆக்ரா வரை 'Palace on Wheels' எனப்படும் ஆடம்பர ரயில் சேவை இந்திய ரயில்வே துறையால் நடத்தப்படுகிறது.

அப்றமா தங்குறதுக்கு ஹோட்டல்ஸ், அருகாமையில் பாக்க வேண்டிய இடங்கள்னு நிறைய விசயம் இங்க இருக்கு... தாஜ் மகாலை தவிர்த்து ஆக்ரா கோட்டை, அக்பர் சமாதி, மனகாமேஸ்வரர் கோயில் போன்ற வேறு சில நல்ல சுற்றுலாத்தலங்களும் உள்ளன. ஆக்ராவில் தங்குவதற்கு ஆடம்பரமான ஹோட்டல்கள் முதல் பட்ஜெட் ஹோட்டல்கள் வரை நிறையவே உள்ளன.

என்ன பிரண்ட்ஸ்.. ஆக்ராவுக்கு தாஜ்மஹால பாக்க எப்ப போகப்போறிங்க?

Photo:ASIM CHAUDHURI

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:


ஹே க்ரிஷ்.. நீ ஆக்ரா பத்தி சொல்லிட்ட. ஆனா ஜம்மு காஷ்மீர் ல இருக்குற ஸ்ரீநகர் பத்தி தெரிஞ்சிக்கணும்போல இருக்கு.. நாம அங்க போயி சில விசயங்கள நம்ம பிரண்ட்ஸுக்கும் ஷேர் பண்ணிக்கலாம்தானே.

ஓ. நிச்சயமா சான்யா.. அங்க போகறதுக்கு முன்னாடி, ஸ்ரீநகர பத்தி சில விசயங்கள உன்கிட்டயும், நம்ம நண்பர்கள் கிட்டயும் சொல்லிக்கிலாம்னு நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீர்னு பேர கேட்டவுடனேயே நம்மள்ல பலருக்கு அங்க போக பயம். தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்நகரம் ஹனிமூன் செல்ல அற்புதமான ஓரிடமாகும். இமய மலையை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ரீநகரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் என்றால் அது தால் ஏரி தான். காஷ்மீரின் மணிமகுடம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஏரியில் படகு பயணம் போவதென்பது அத்தனை அழகான ஒரு அனுபவமாக இருக்கும். அதிகாலையிலும், மாலை வேளையிலும் சூரியன் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களை நாம் இங்கே காணலாம்.

ஆமா. கிரிஷ் நானும் படிச்சிருக்கேன். தால் ஏரி பக்கத்துலேயே நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்குறதா சொல்றாங்களே. அத பத்தி கொஞ்சம் சொல்லேன்.

தால் எரியியை ஒட்டியே கிழக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது நிஷ்ஹத் பாக் என்னும் முகலாயர் காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட தோட்டம். 'நிஷ்ஹத் பாக்' என்றால் மகிழ்ச்சியின் தோட்டம் என பொருள்படுகிறது. அதற்கு ஏற்றவாறே இந்த தோட்டத்தில் இருந்து ஹிமாலய மலைகளின் பேரழகை எந்த தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.

சான்யா : ஸ்ரீநகரை எப்படி அடையலாம்?

க்ரிஷ்: ஹும்.. நல்ல கேள்வி.. இதுக்குத்தான் நம்ம சைட்ல விளக்கமா குடுத்துருக்கோம்ல.. அப்றம் இந்த சைட் மூலமா நீங்க ஃபிளைட், டிரைன் கூட புக் பண்ணிக்கலாம். இங்க கிளிக் பண்ணி மேலும் விவரங்கள தெரிஞ்சிக்கோங்க.. https://tamil.nativeplanet.com/

சான்யா : க்ரிஷ் நீ இதையெல்லாம் சொல்லிட்ட.. அந்த லடாக் மேட்டர நான் சொல்றேனே.... பா.. பிளீஸ்.

க்ரிஷ் : ஓ எஸ்.. தாராளமா சொல்லுபா..

சான்யா : ஹே.. க்ரிஷ் நீ என் பெஸ்ட் பிரண்ட்தான.. என்னய இந்த லடாக் பைக் டிரிப் கூட்டிட்டு போயேன்.

க்ரிஷ் : நாம பிரண்ட்ஸ் ங்குறது.. அவுட் ஆப் ஆபிஸ்தான். இப்ப நம்ம ஆபிஸ் விசயமா வெளிய வந்துருக்கோம்..

சான்யா : இல்லப்பா.. நானும் அவங்களுக்காகதான் சொல்றேன். இதே பைக் ல போயி நாம லைவ் டிராவல் எக்ஸ்பிரியன்ஸ காட்டலாம்ல.

க்ரிஷ் ; சரி.. நா அதுக்கு ஏற்பாடு பண்றேன்.. வா..

சான்யா: உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பைக்கில் பயணம் செய்ய பிடிக்குமெனில் இந்தியாவில் சாலைப்பயணம் போக மிகச்சிறந்த ஒன்று என சொல்லப்படும் லெஹ் முதல் லடாக் வரையிலான சாலைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

475 கி.மீ தூரமுள்ள இந்த பயணத்தின் போது ஹிமாலய மலைகளின் அற்புதமான இயற்கை காட்சிகளையும், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளையும், மலைமுகடுகளையும் நாம் காணலாம். இந்த பயணத்தின் போது உலகில் பயணம் செல்லத்தகுந்த மிக உயரமான சாலை, வண்டிகளை தானாகவே மேலே இழுத்து செல்லும் 'காந்த சாலை' போன்ற பல்வேறு அபூர்வமான விஷயங்களை இந்தப்பயனத்தின் வழியாக நாம் அனுபவிக்க முடியும்.

இப்படிப்பட்ட பயணங்கள் தான் உங்களுக்குள்ளான பந்தத்தை மேலும் உறுதியாக்கும். சவால் நிறைந்த தருணங்களை ஒன்றாக கடந்து வருவதை தவிர வேறொரு அழகான தருணம் இருக்க முடியாது.

க்ரிஷ்: ஆமா.. உண்மைதான் இல்ல..சான்யா..

சான்யா : ஆமாமா.. சரி க்ரிஷ். அடுத்து இந்த ஜம்மு காஷ்மீர்ல வேறெங்கலாம் போறோம்.

க்ரிஷ் : அத தெரிஞ்சிக்க அவ்ளோ ஆவலா உனக்கு.. சரி நாதான் அப்பவே சொன்னேன்ல.. தமிழ் நேட்டிவ் பிளானட்னு இந்த சைட் ல.. ஜம்மு காஷ்மீருக்கு எப்படு போறது.. என்னென்ன செய்றது. அருகாமையில் இருக்கும் இடங்கள்னு நிறைய இருக்கு.. இத கிளிக் பண்ணி பாத்தா போதும்..

Photo:Basharat Shah

ஷிம்லா:

ஷிம்லா:

சான்யா: இதுக்கே போர் அடிக்குது க்ரிஷ்.. இனி நிறைய இடங்கள் பாக்கவேண்டி இருக்கு.. ஆனா எல்லாத்துக்கும் நாம ரெண்டு பேரும் எப்படி டிராவல் பண்றது.. சொல்லு. கஸ்டமா இருக்குமே..

க்ரிஷ்: ஹனிமூன்னா எல்லா இடத்துக்கும் போகனும்னு அவசியமா என்ன சொல்லு.. நாம நம்ம நேயர்களுக்காக இப்படி ஒவ்வொரு இடத்த பத்தியும் சொல்றோம். அவங்களுக்கு எந்த இடத்துக்கு போகணும்னு நினைக்குறாங்களோ அந்த இடத்துக்கு போவாங்க.. நம்ம வேலய நம்ம செய்யுறோம். இதுல என்ன கஸ்டம் உனக்கு.

சான்யா : எனக்கு ஷாப்பிங், அட்வென்ட்சர்னு திரில்லிங்கா எதுனா பண்ணாதான் போர் அடிக்காதுடா.

க்ரிஷ்: என் கேர்ள் பிரண்ட் கூட போகவேண்டிய இடத்துக்கெல்லாம் உன் கூட வந்துட்டு இருக்கேன். பாரு.. என் நேரம்தான் இது.. சரி வா.. உன்ன சூப்பரான ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.

குளுகுளு ஜிலுஜிலுவென குளிர் நிறைந்த சிம்லா இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் அவர்களின் கோடைகால தலைநகராக விளங்கிய இந்த நகரம் ஹனிமூனுக்காகவே கடவுளால் படைக்கப்பட்டது போன்று உள்ளது. சுற்றிப்பார்க்கவும், ஷாப்பிங் செய்திடவும், சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் இங்கே ஏராளமான இடங்கள் உண்டு. சிம்லா வரும் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டிய இடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 'தி மால்' என்னும் ஷாப்பிங் வளாகத்திற்கு தான். சிம்லாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய பொருட்கள் விற்கப்படும் கடைகள், உணவகங்கள், கேளிக்கை கிளப்புகள், குளிருக்கு இதமாக காபி குடிக்க என இங்கே ஏராளமான விஷயங்கள் உண்டு. இது தவிர ச்ரிஸ்ட் சர்ச், ஜக்ஹூ ஹனுமான் கோயில், சம்மர் ஹில் என சுற்றிப்பார்க்கவும் நல்ல நல்ல இடங்கள் இங்கே ஏராளமாக உண்டு. மேலும் வருட வருடம் உலக பிரசித்தி பெற்ற மலை சைக்கிள் பந்தையங்கள் இங்கே நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட நினைப்பவர்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் செல்வது நல்லது.

Photo:Nishanth Jois

எப்படி அடையலாம்? எங்கு தங்கலாம்?

எப்படி அடையலாம்? எங்கு தங்கலாம்?

சான்யா: ஹப்பா..ஹப்பா.. ஹபா.. டேய்.. இவ்ளோ பேசுறயே.. இத படிக்குறவங்களுக்கு புரியுமானு கொஞ்சம் யோசிக்கிறயா பாரு.

க்ரிஷ்: இது புரியாம இருக்குறதுக்கு உன்ன மாரி மக்கா அவங்க.. அதுலாம் நல்லா புரியும். கல்யாணம் ஆகி கணவன் மனைவியா வர்றவங்களுக்கு ஷிம்லாதான் இந்தியாவிலேயே பெஸ்ட். இததான் வளச்சி வளச்சி சொல்லிருக்கேன். புரியுதா?

சான்யா : ம்.. சரி சரி... இந்த ஊருக்கு எப்படி போகலாம்.. எங்க தங்கலாம்ங்குறத இத கிளிக் பண்ணி தெரிஞ்சிக்கோங்க..
ஹ்ஹ்ஹ்ஹ.. அப்றம் க்ரிஷ்.. தென்றல் எப்படி இருக்காங்க.. என்ன பத்திலாம் எப்பவாச்சும் பேசுறயா.. இல்ல அன்னைக்கு இன்ட்ரோ பண்ணதோட சரியா போச்சா.

க்ரிஷ்: அட போமா.. நீ வேற.. அவளுக்கு நான் உன்கூட வேல விசயமாத்தான் டிராவல் பண்றேன்னு சொல்லி புரிய வைக்கறதுக்குள்ள வடகொரியா, தென்கொரியாவே ஒன்னுசேர்ந்துடிச்சு. அவ ஏதோ ராஜஸ்தான்ல ஷூட் இருக்குனு போய்ருக்கா. அதனால தப்பிச்சேன்.

சான்யா: சரி... எனக்கு தென்றல பாக்கணும்போல இருக்கு.. வா ராஜஸ்தான் போகலாம்.

க்ரிஷ்: என்னடா.. சொல்ற... ராஜஸ்தானா.. அது ரெம்ப தூரமாச்சே.. அப்ரம் நம்ம பிளான்ல அது இல்லவே இல்லயே.. எப்டி போறது.. அது மட்டும் இல்லாம அவ தொல்லை இல்லாம இப்பத்தான் நாலு நாள் சந்தோசமா இருக்கேன்.. இப்ப வேணும்னே மாட்டி விடறயா நீ.

சான்யா: கேட்டுக்கிட்டீங்களா. தென்றல்.. இவனுக்கு நீங்க தொல்லையாம்.. இந்தாங்க அவன்கிட்டயே கேளுங்க..

க்ரிஷ்: போச்சிடா.. ஹலோ.. தென்றல்.. இல்லமா.. வேல விசயமா.. அய்யோ இல்லமா...... ஆமா.. அது.... வந்து.. இல்ல.. சரிமா..

சான்யா: என்ன ராஜஸ்தான் போறோமா.. ?

Photo:Nishanth Jois

 உதய்பூர் :

உதய்பூர் :


ஒரு நாள் முதல்வர் மாதிரி சில நாள் ராஜா போல வாழ ஆசையா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்புருக்கு தான். பெரும் ராஜ பாரம்பரியம் கொண்ட இந்த நகரில் மன்னர் காலத்திய அரண்மனைகள் இன்றும் அப்படியே பராமரிக்கப்படுகின்றன. அங்கே தங்குகையில் நாமும் ஒரு அரசைப்போல உணர்வோம்.

சான்யா: சரிடா.. நீ உன் ஆளு கூட கொஞ்ச நேரம் ஹேப்பியா இருந்துட்டு வா.. நா நம்ம நேயர்களுக்கு இந்த இடங்கள பத்தி சொல்லிட்டு இருக்கேன்.

க்ரிஷ்: பண்றதயும் பண்ணிட்டு.. சரி..டி...

உதய்பூர் அரண்மனை:

சான்யா: வாங்க பிரண்ட்ஸ்.. உதய்ப்பூர்னாலே அரண்மனைதானே.. ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் வைத்து அளவில் மிகப்பெரியதாகவும், சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அரண்மனையாகவும் இருக்கிறது இந்த உதய்பூர் அரண்மனை. ஒரு அரண்மனையாக இல்லாமல் மகாராணா உதய் சிங் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பல அரண்மனைகளின் வளாகமாகவே இந்த உதய்பூர் அரண்மனை இருக்கிறது. யானை சவாரி செய்தபடி இந்த அரண்மனையில் உலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

சான்யா; அல்லோவ்... மச்சி எங்கடா இருக்க..

க்ரிஷ்: இப்பதான உன்ன டிராப் பண்ணிட்டு வந்தேன். அதுக்குள்ள கால் பண்ணிட்ட.. என்ன வேணும் சொல்லு..

சான்யா: இஇஇ.. இல்லடா.. அது வந்து.. இந்த பதெஹ் னு ஏதோ ஏரி இருக்குதாமே..

க்ரிஷ்: உதய்புரில் உள்ள ஏரிகளில் மிக அழகானதாக இது வர்ணிக்கப்படுகிறது. 1680களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. ஒரு தீவில் நேரு பூங்காவும், வனவிலங்கு காட்சியகமும் உள்ளது. மற்றறொரு தீவினுள் நவீனமான 'Water-Jet' நீருற்றுடன் கூடிய பூங்கா ஒண்டு அமைந்திருகிறது. மூன்றாவது தீவில் உதய்பூர் வான் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 'ஹர்ஷலி அமவஷ்ய மேளா' என்னும் திருவிழா இந்த ஏரியின் கரையில் கொண்டாடப்படுகிறது.

அவ்ளோதான்... இத சொல்லி உதய்ப்பூர் டிரிப்ப முடிச்சிடு.. இதுக்கப்பறம் அங்க என்னென்ன இடங்கள்லாம் இருக்குனு தெரிஞ்சிக்கணும்னா நம்ம சைட்ல இருக்குற இந்த பக்கத்த பாக்க சொல்லு.. மறக்காம தமிழ் நேட்டிவ் பிளானட்க்கு சப்ஸ்கிரைப் பண்ண சொல்லிடு.. நா உன்ன கன்னியாகுமரில மீட் பண்றேன். பய்..

சான்யா: ஹலோ.. ஹலோ..ஹல்ல்ல்லோவ்.. அடச் சி.. வச்சிட்டான்.. சரி பிரண்ட்ஸ் மிச்ச சொச்ச இடங்கள நானே சொல்றேன்.. என் நேரம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்குறது சரியாத்தான் இருக்குது..

Photo:Dennis Jarvis

காதல் பொங்கும் கடற்கரைகள்

காதல் பொங்கும் கடற்கரைகள்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். நேரம் காலம் கூட இல்லைதான். பாத்தீங்கள்ல.. நம்ம நட்பு நம்மள தவிக்க விட்டுட்டு ரொமான்ஸ் பண்ண போய்ட்டாரு.. சரி இந்தியாவுல ரொமான்ஸ் பண்றதுக்குனே நிறைய இடங்கள் இருக்கு. அதுல பீச்தான் ஹைலைட்டு. அப்படி இந்தியாவுல நீங்க கண்டிப்பா போகவேண்டிய பீச்சுக்கள பத்தி இந்த பகுதியில பாக்லாமா..

வெல்சாவோ பீச்

அவ்வளவு எளிதாக வெல்சாவோ பீச்சின் அழகை வர்ணித்துவிட முடியாது.. எண்ணற்ற அழகைத் தன்னில் கொண்டவள் அவள். கண் இமைக்கும் நேரத்தில் கூட மனம் மயக்கும் தென்றலை தந்து உங்களை தன் மேல் காதல் கொள்ள செய்வாள். எச்சரிக்கை நீங்கள் காதலியுடன் சென்றிருக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். கோவாவில் அமைந்துள்ள இந்த பீச் தான் இந்தியாவிலேயே பல வெளிநாட்டவர்கள் விரும்பும் மிக அழகான பீச் ஆகும். உங்கள் காதலி அல்லது காதலனுடன் இந்த பீச்சில் சுற்றி வாருங்கள். ஒரு நாள் கூட போனது தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பீர்கள் எப்படி செல்வது? ஒரு இடத்தைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்குமல்லவா. அப்படி உங்களுக்கு இந்த இடத்துக்கு போகவேண்டும் என்றால் அதற்கு தமிழ் நேட்டிவ் பிளானட் தளம் உதவுகிறது. கோவாவின் கன்சோலிம் கிராமம் பற்றி தெரியுமா? அதன் அருகில் அமைந்துள்ளது இந்த பீச். வெல்சாவோ பீச் பனாஜியிலிருந்து 26கிமீ தொலைவிலும், மார்கோவிலிருந்து 14கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிரிடாவோ பீச்

சிரிடாவோ பீச்

கொஞ்சம் பாறைகளும், கொஞ்சம் மணலும் ஆங்காங்கே இணைந்து பிணைந்து உங்கள் இணையைப் போற்றும். உண்மையில் இந்த பீச்சுக்கு சென்றபின் உங்களை நல்ல இணையாக உணரவைக்கும் இந்த கடற்கரை. உங்கள் துணையுடன் தனிமையில் பொழுதை கழிக்க விரும்பும் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டியது இந்த கடற்கரைதான். அதிகம் சுற்றுலாப்பயணிகள் இல்லாத அமைதியான இடமாக அமைகிறது இது. அருகிலுள்ள கிராமத்தினரே இளநீர், மீன் போன்ற இயற்கை உணவுகளை விற்று வருகின்றனர். இந்தியாவின் பாரம்பரியமான கடற்கரை உணவுகளை ஒரு பிடி பிடியுங்கள். எப்படி செல்லலாம் சிரிடாவோ பீச், வடக்கு கோவாவின் திஸ்வாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராம கடற்கரையாகும். இது பனாஜியிலிருந்து 7.5கிமீ தூரத்திலும், டபோலிம் விமான நிலையத்திலிருந்து 20கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை எனினும், தனியார் போக்குவரத்து வசதிகள் உள்ளன. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நாசரேத் ஆலயம் இங்குள்ள மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

காதலர்களின் கடற்கரை

காதலர்களின் கடற்கரை

மற்ற எல்லா கடற்கரைகளையும் விட இந்த கடற்கரைக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது தன் பெயரிலேயே காதலை சுமந்துகொண்டுள்ளது. காதலின் ஒவ்வொரு நிலையையும் கடல் தன்னுள்ளே பதிவு செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். காதல் எந்த வயதில் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு காதலனும் காதலியும் கடற்கரையுடன் கொண்டுள்ள பந்தம் மட்டும் எப்போதும் மாறாது. நண்பர்களுள் யாராவது காதலித்துக்கொண்டிருந்தால், அவர்கள் பெரும்பாலும் கடற்கரை சுற்றுலாத் தளங்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?

எப்படி செல்லலாம்?

வடக்கு கோவாவில் அமைந்துள்ளது இந்த காதல்கடற்கரை. காதலுக்கு கோட்டை கட்டியவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கடற்கரை இது. இந்த கடற்கரைக்கு மாலை வேளைகளில் நீங்கள் சென்றால், உறுதியாக கூறலாம் நீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும் காதலர்கள் இருப்பார்கள். அவர்களின் காதல் மொழிகள் உங்களுக்கு புரியாமல் இருந்தாலும், கணவன் மனைவியாக, தாத்தா பாட்டியாக அண்ணன் அண்ணியாக யாரோ ஒருவன் ஒருத்தியாக அவர்களின் அன்பு இந்த கடற்கரை மணலில் ஹார்டிஸ்க்கைப் போல பதிந்திருக்கும். மார்காவ் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.

ஹோலன்ட் பீச்

ஹோலன்ட் பீச்


கோவாவின் வேறெந்த கடற்கரைக்கும் இல்லாத சிறப்பு இந்த கடற்கரைக்கு இருக்கிறது என்ன தெரியுமா? ஒருவேளை இந்த கடற்கரைக்கு நீங்கள் சென்றிருந்தால், நிச்சயமாக கண்டுபிடித்திருப்பீர்கள். சூரிய உதயம். கோவாவின் மொத்த பீச்சுகளிலேயே அழகான சூரிய உதயம் காணத்தகுந்த பீச் இதுதான். மேற்கு கடற்கரையில் சூரிய மறைவு காண்பது அவ்வளவு சுவாரசியமல்ல.. சூரியஉதயம் காண்பதென்றால் நிச்சயம் ஆர்வமிக்கதுதானே.

எப்படி செல்லலாம்?

கன்சோலிம் எனும் இடத்திலிருந்து ரயில் மூலம் சில நிமிடங்களில் ஹோலன்ட் பீச்சை அடைந்துவிட முடியும். அல்லது பேருந்தில் செல்வதென்றால் அது சற்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலைதான். இருந்தாலும் சுய வாகனம்தான் இங்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இங்கு பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நிறைய சலுகைகளை வாரி வழங்குகின்றன. தற்போது கார், ரயில், விமானம் புக் செய்வது தமிழ் நேட்டிவ் பிளானட்டில் எளிதாக்கப்பட்டுள்ளது. புக் செய்து பயன்பெறுங்கள். கோவாவில் மேலும் பல கடற்கரைகள் இருக்கின்றன.

சான்யா: ஹலோ.. என்னடா கால் பண்ணிருக்க..

க்ரிஷ்: உன் மெய்ல் ஓபன் பண்ணி பாரு..

சான்யா: பிரண்ட்ஸ். நம்ம நட்பு.. நம்மள தவிக்க விட்டாலும், ஒரு முக்கியமான தகவல தந்துருக்கான். இருங்க அவன் அனுப்புன மெய்ல அப்படியே உங்களுக்கு படிச்சி காட்டுறேன்.


உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த கடற்கரைகளையும் இந்த பதிவில் காணலாம்.

 வண்ணத்துப்பூச்சி கடற்கரை

வண்ணத்துப்பூச்சி கடற்கரை

பெரும்பாலும் பலருக்கு அறிந்திராத இந்த கடற்கரை கோவாவில் தான் அமைந்துள்ளது. போலம் பீச் அருகே அமைந்துள்ள இந்த கடற்கரை பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும். போட் ரைடிங், கோனான் ரைடிங் போன்ற சாகச விளையாட்டுக்களை இங்கு விளையாட முடியும். வாஸ்கோ நகரத்தின் தென் பகுதியில் இந்த பீச் அமைந்துள்ளது.

 சின்குவேரிம் கடற்கரை

சின்குவேரிம் கடற்கரை


சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது. அஸ்வெம் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத கடற்கரை இதுவாகும். உங்கள் மனம் விரும்பும் நபருடன் நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து உரையாட விரும்புகிறீர்களா அப்படியானால் இதுதான் மிகச்சிறந்த இடம். இந்த பீச் நீச்சலுக்கு மிகவும் பிரசித்திபெற்றது. ஆங்கிலப் படங்களில் காணப்படும் யாருமில்லா கடற்கரையைப் போலவே இந்த கடற்கரை அழகாக காட்சியளிக்கும்.

வாகத்தோர் கடற்கரை

வாகத்தோர் கடற்கரை

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

மாண்ட்ரேம் கடற்கரை

மாண்ட்ரேம் கடற்கரை

வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், தேன்நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அற்புதமான இடமாகும். இது கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது. மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் நீங்கள் சென்று வரலாம்.

அகோண்டா கடற்கரை

அகோண்டா கடற்கரை

நீரில் புத்துணர்ச்சி பெற வேண்டுமா இப்போதே செல்லுங்கள் என்று விளம்பரம் செய்யலாம். அந்த அளவுக்கு இந்த பீச் மிகவும் புத்துணர்ச்சி மிக்கது. அதிக வேலையில் களைப்பாகி ஓய்வெடுக்கவேண்டிய சூழல் இருந்தால் கவலை வேண்டாம் இந்த இடத்துக்கு வாருங்கள். பாலோலெம் கடற்கரை தெற்கு கோவாவின் மிக அழகான பீச்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் சுற்றுலாத் தளம் இதுவாகும். அலைச் சறுக்கு, பனானா ரைடு, டால்பின் காட்சி, நீர் ஸ்கூட்டர், பாராகிளைடிங், காயாக்கிங், பாடிங்க் என நிறைய விளையாட்டுக்கள் இங்கு விளையாடப்படுகின்றன.

அஞ்சுனா கடற்கரை

அஞ்சுனா கடற்கரை

அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மார்க்கமாக எளிதாக அடைந்து விடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடி வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம். அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

 அரம்போல் கடற்கரை

அரம்போல் கடற்கரை

அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும். அஞ்சுனா மற்றும் மாபுஸா கடற்கரைகள் அரம்போள் பீச்சுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், அரம்போள் பீச்சின் அருகாமை பகுதிகளில் உள்ள மணி ஸ்டோன் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

 கேவ்லாசிம் கடற்கரை

கேவ்லாசிம் கடற்கரை


புகைப்பட ஆர்வமிக்கவர்கள் இந்த இடத்தை கட்டாயம் மிஸ் செய்யவே மாட்டார்கள். ஏனெனில் இந்த இடம் அப்படி ஒரு அழகான காட்சிகள் நிறைந்த இடமாகும். பனாஜியிலிருந்து 36கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

சான்யா: இந்த பய்ய. எப்டி இவ்ளோ டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணான்னு தெரிலயே.. சரி நா.. டிரிப்லாம் முடிச்சிட்டு தமிழ்நாட்டுக்கு போறேன். இனி உங்களுக்கு க்ரிஷ் தான் வழிகாட்ட போறாரு.. இவ்ளோ நேரம் எனக்கே அவன்தான் வழிகாட்டுனான். சரி.. எப்டியோ.. உங்கள மீட் பண்ணதுல சந்தோஷம். க்ரிஷ் இன்னும் நிறைய இடத்துக்கு அவன் லவ்வரோட போகப்போறானாம். அவன அப்படியே விடலாமா.. போற எடத்தெல்லாம் உங்களுக்கும் சொல்லணும்னு சொல்லிருக்கேன் பிரண்ட்ஸ்.. கவல படாதீங்க..

 தமிழ்நாட்டுலயே ஹனிமூன் கொண்டாடலாம்

தமிழ்நாட்டுலயே ஹனிமூன் கொண்டாடலாம்


க்ரிஷ்: என்னப்பா நார்த் இன்டியாவ மட்டும் காமிச்சா. இங்க இருக்குற பசங்க எப்டி போகமுடியும். அவங்களுக்கும் கமிட்மென்ட்ஸ், பிரச்னைங்கனு ஆயிரெத்தெட்டு விசயங்கள் இருக்கும். அவங்க எப்படி தமிழ்நாட்ட தாண்டி போவாங்கனு தென்றல் கேட்டுச்சி. எனக்கும் அது சரிதான்னு தோணுது. உங்களுக்கு தமிழ்நாட்டுல இருக்குற ரொமாண்டிக் இடங்கள நிறைய வாட்டி சொல்லிருக்கோம். அத ஒரு முறை நினைவுபடுத்துறோம் இந்த பகுதில..

இந்த கட்டுரைய படிங்க.. இதுல தமிழ்நாட்டுல நீங்க போகவேண்டிய சுற்றுலாத் தளங்கள் பற்றிய முழுவிவரமும் இருக்கு.

கேரளத்துக்கும், கர்நாடகத்துக்கும் ஒரு ஹனிமூன் பயணம்

கேரளத்துக்கும், கர்நாடகத்துக்கும் ஒரு ஹனிமூன் பயணம்

அதெல்லாம் பத்தி தெரிஞ்சிக்க இத கிளிக் பண்ணுங்க..அதெல்லாம் பத்தி தெரிஞ்சிக்க இத கிளிக் பண்ணுங்க..

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X