Search
  • Follow NativePlanet
Share
» » பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

By Balakarthik Balasubramanian

கடல் மட்டத்திலிருந்து 1607 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சிகரம் தான் இந்த பிரம்மகிரி சிகரமாகும். இந்த சிகரத்தின் மூலமாகவே நாம் இப்பொழுது பார்க்க போகும் கூர்க்கில் உள்ள பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயமும் இப்பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சரணாலயம் தான் இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயமாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் வனத்தில் காணப்படும் இந்த சரணாலயம், பல அழகிய ரகசியங்களை உள்ளடக்கிய மரங்களையும், விலங்குகளையும் வாழிடமாக கொண்டு விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 1607 மீட்டர்கள் உயரத்தில் காணப்படும் பிரம்மகிரி சிகரத்தின் பெயராலே பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம் என்னும் பெயர் பெற்றது எனவும் அங்குள்ளவர்களால் பெருமையுடன் பேசப்படுகிறது.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

Join2manish

அதாவது 181 கிலோமீட்டர்கள் பரந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயத்திற்கு நாம் செல்லும் வழியில் காணப்படும் பொரபோல் நதி நீர், அழகிய நடனம் ஆடி நம் மனதை ஆள்கிறது. இந்த சரணாலயம் 1974ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். மேலும் இந்த சரணாலயம், வடமேற்கில் உள்ள நாகர்ஹோல் தேசிய பூங்காவாலும், கேரளாவின் தெற்கு திசையிலுள்ள, வயநாடின் மூலமாகவும் பிணைக்க பட்டு இருக்கிறது.

இங்குள்ள காடுகளில் காணப்படும் தாவரங்கள், பசுமையானதாகவும், அரை பசுமை தன்மை கொண்டதாகவும் தென்படுகிறது. இங்கே உயரத்தில் காணப்படும் சோலா புல்வெளி நிலங்கள், நம் மனதை இதமாக்கி இனிமையானதோர் உணர்வினை தருகிறது. இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், இரண்டு இருப்பு காட்டுப்பகுதிகளை கொண்டுள்ளது. அதாவது, பிரம்மகிரி மற்றும் உர்டி ஆகிய இரண்டு வனப்பகுதிகளை கொண்டுவிளங்கும் இந்த சரணாலயம், மிகவும் பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் உயரத்தை ஏறும் மலை ஆர்வலர்களுக்கான சாகசப் பயணமாக அமையும் இந்த பிரம்மகிரி சிகரம், மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சிகரம் மற்றும் சரணாலய பயணம் என்னும் இரண்டு ஆஃபர்களை ஒரே நேரத்தில் நமக்காக தர காத்திருக்கும் இந்த அழகிய இடத்தை ரசிக்காமல் செல்வது நியாயமா என்ன? வாருங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணத்தை, இயற்கையின் மூலம் அடைய முயற்சியை தொடங்கலாம்.

இந்த சரணாலயத்தை சுற்றி பார்ப்பதற்கு ஏதுவான மாதங்கள் எவை?

அக்டோபர் மற்றும் மே வரையிலான மாதங்களில் நாம் இந்த சரணாலயத்தை எந்த ஒரு தங்கு தடையுமின்றி ரசித்து மகிழலாம்.

இந்த பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள்:

புகைப்படக்கருவி, தொலைநோக்கிகள், கதிரவன் ஒளியிலிருந்து காத்து கொள்ள தேவைப்படும் திரைகள், தொப்பிகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள், பயணத்திற்கு தேவைக்கேற்ப பணம், நல்ல தரமான காலணிகள் ஆகியவற்றை நம் பயணத்திற்கு அத்தியவாசிய பொருட்களாக மறக்காமல் நினைவில் வைப்பது நம் பயணத்தின் கடினத்தை சிறிது தளர்த்தி இனிமையானதொரு உணர்வை அளிக்கிறது.

இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தை நாம் அடைவது எப்படி?:

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூரிலிருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இந்த பிரம்மகிரி. பெங்களூரின் சர்வதேச விமான நிலையமான கெம்பிகௌடா விமான நிலையம் தான் அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தின் உதவியுடன் நாம் பிரம்மகிரி செல்ல, முதலில் நகரத்திற்குள் நுழையும் நாம்...அங்கிருந்து கர்நாடக மாநிலத்தின் அரசு பேருந்துகளின் உதவியுடன் கூர்க்கை அடையலாம், இல்லையென்றால் டாக்சியின் மூலம் பிரம்மகிரி செல்லலாம்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?
மைசூர் இரயில் நிலையம் தான் பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு இரயில் நிலையமாகும். ஆம் இந்த இரயில் நிலையத்திலிருந்து 154 கிலோமீட்டர் நாம் பயணிக்க, இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தை நாம் அடைகிறோம்.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?
இந்த சாலை வழி பயணத்தை நாம் தேர்ந்தெடுப்போமாயின் மூன்று விதமான சாலை வழிகளின் உதவியுடன் நம்மால் இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தை அடைய முடிகிறது.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

L.Shyamal

முதல் வழி:

பெங்களூரு - ராம்நகரா - சன்னாப்பட்னா - மாண்டியா - கோனிகொப்பல் - பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம்

நெடுஞ்சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலை 275 இன் வழியாக

கால அவகாசம்:

இந்த நேர் வழியில் நாம் செல்ல, சுமார் 291 கிலோமீட்டரை 6 மணி நேரம் 30 நிமிடங்களின் வாயிலாக கடந்து, இந்த வனவிலங்கு சரணாலயத்தை நாம் அடைய முடிகிறது.

இரண்டாம் வழி:

பெங்களூரு - குனிகல் - சன்னராயபட்னா - ஹோலினரசிபுரா - விராஜ்பேட்டை - பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம்.

நெடுஞ்சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலை 75இன் வழியாக

கால அவகாசம்:

இந்த 344 கிலோமீட்டரை கடக்க நமக்கு சுமார் 7 மணி நேரம் தேவைப்படுகிறது.

மூன்றாம் வழி:

பெங்களூரு - கனகபுரா - மாலவல்லி - இளவலா ஹோப்பிலி - கோனிகொப்பல் - பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம்.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

commons.wikimedia.org

நெடுஞ்சாலை வழி:

தேசிய நெடுஞ்சாலை 209 இன் வழியாக

கால அவகாசம்:

இந்த 314 கிலோமீட்டரை கடக்க நமக்கு சுமார் 7 மணி நேரம் ஆகிறது.

முதலாம் வழி மிகவும் குறுகியதாகவும் வசதியாகவும் அமைந்து நம் பயணத்தை வழி நடத்த பெரிதும் உதவுகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நமக்கு அதிகாலை பொழுது உதவ, பெங்களூரிலிருந்து வெகுவிரைவில் புறப்பட்டு நாம் செல்வது மிகவும் அருமையானதொரு யோசனையாக அமைகிறது. தர்சினியில் காலை உணவை மனதார நிரப்பி கொண்டு நாம் சாலையில் பயணிக்க, "சோலை கிராமம்" எனப்படும் ராம்நகராவை நாம் அடைகிறோம். அங்கு காணப்படும் பல அழகிய மலை நிலப்பகுதிகள் நம் பயணத்தை சீரான ஒன்றாக மாற்றி மனதை இதமாக்குகிறது. இங்குள்ள குன்டி பேட்டா மிகவும் பிரசித்திபெற்ற ஒரு சிகரமாகும். அதுமட்டுமல்லாமல், ஜூமரிங்க் எனப்படும் மலை ஏறும் விளையாட்டும், கேபில் கம்பிகளை பிடித்து கொண்டு தொங்கிய படி செல்லும் ஷிப்லைனிங்கும், அம்பு எய்தல் விளையாட்டும், ரெப்பெல்லிங்க் எனப்படும் மலை ஏறுவது போன்ற பல சாகசங்களை உள்ளடக்கிய ஒரு விசித்திரம் நீங்கா இடமாகவும் இந்த ராம்நகரா விளங்குகிறது.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

commons.wikimedia.org

அங்கிருந்து புறப்பட்டு நாம் செல்ல சன்னாபட்னாவை அடைகிறோம். மர பொம்மைகளுக்கும், மர ஆபரணத் தயாரிப்புகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகவும் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாகவும் விளங்கும் இந்த சன்னாபட்னாவின் வரலாறு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அதனால், இந்த இடம் குழந்தைகளின் பேராதரவை பெற்று பெருமையுடன் விளங்குகிறது என்றும் கூறலாம். ஆம், பொம்மைகளை காணும் கண் மணிகளின் இதழ்களிலிருந்து உதிர்க்கும் சிரிப்பு, அந்த இடத்தின் அழகை மேலும் மெருகேற்றி, அந்த இடத்தின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. கூகுல் ஹைதராபாத் என்னும் நிறுவனம் இந்த பொம்மைகளை தீவிரமாக விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகிறது.

அடுத்ததாக நாம் செல்ல போகும் ஒரு இடம் மாண்டியா தான். இந்த பகுதி சர்க்கரை ஆலைகளுக்கும் பண்ணைகளுக்கும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மேலும், இங்கு தான் மிகவும் பிரசித்தி பெற்ற, கிருஷ்னசாகர் அணையும் உள்ளது. இங்கு அமைந்துள்ள மிகவும் உயரமான ஸ்ரீரங்கபட்டின கோட்டை, கம்பீரமாக காணப்படுகிறது.
அதன் கம்பீரத்தை காணும் நம் கண்கள், திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஒன்று இந்த கோட்டை என்பதனை தெரிந்ததும், வரலாற்றின் சிறப்பினை அன்னாந்து பார்த்து ஆச்சரியமும் கொள்கிறது. நீங்கள் ஒரு விலங்கு ஆர்வலரா? அப்படி என்றால், இங்கு காணப்படும் பீமேஷ்வரி வனவிலங்கு சரணாலயம் உங்களை சரணாகதியடைய செய்யும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. ஆம், பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம் நம்மை பற்றி கொள்ளும் முன்பே, இந்த பீமேஷ்வரி வனவிலங்கு சரணாலயத்தின் அழகு, செல்லும் வழியில் நம்மை தொற்றிக்கொண்டு இன்பமானதொரு உணர்வினை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.

அதுமட்டுமல்லாமல், இங்கு காணும் கோக்ரல்பெல்லர் பெல்கிரன்ரி, பறவைகளின் வாழிடமாக மட்டுமல்லாமல்.... குறிப்பிட்ட காலத்தில் குடிபெயற ஆசைக்கொள்ளும் பறவைகளின் தற்காலிக வாழிடமாகவும் இருக்கிறது என்பதனை தெரிந்துக்கொள்ளும் நம் மனம் 'நாமும் பறவையாக பிறந்திருக்க கூடாதா?' என்னும் ஏக்கத்தில் வாடி தவிக்கிறது. மேலும், இங்கே மாண்டியாவில் உள்ள மெலுகோட்டி ஆலயம், இங்குள்ள பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டு தளமாகும்.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

commons.wikimedia.org

கூர்க் பகுதியின் அருகிலுள்ள கோனிகொப்பலில் எண்ணற்ற கவர்ச்சிகரமான இடங்கள் அமைந்து நம் மனதை கொள்ளை அழகால் வருடுகிறது. இங்குள்ள இர்பூ நீர்வீழ்ச்சியை ஒருபோதும் நம்மால் உதறிவிட்டு முன்னோக்கி செல்ல இயலாது என்பதனை அங்கு நாம் காணும் இயற்கை காட்சிகளே நம் மனதிற்கு தெளிவுபடுத்தி மனதை இதமாக்குகிறது. இந்த கோனிகொப்பலிற்கு அருகில் காணப்படும் நாகர்ஹோல் தேசிய பூங்காவும் நம்மை இன்பம் நோக்கி பயணிக்க வைக்கிறது.

அடர்ந்த காடுகளால் சூழ்ந்திருக்கும் இந்த பிரம்மகிரி சிகரம், பல விலங்குகளின் வா(ழி)ளிடமாக விளங்கி வியப்பில் ஆழ்த்துகிறது. இங்கே காணப்படும் சில பறவைகளான, மலபார் டிராகன் என்னும் பறவையும், இந்தியன் ராபின் என்னும் பறவையும், சாம்பல் நிற மலபார் ஹார்ன்பில் என்னும் பறவையும், தென்தேசத்து மலைவாழ் மைனாவும், நீலகிரி மரப்புறாவும், மரகதப் புறாவும், கருமை நிறம் கொண்ட புல்புல் என்னும் பறவையும், நீலகிரி பறவைபிடிப்பான்களும், என எண்ணற்ற பறவைகள் நம்மை ஏக்கமுற செய்து இயற்கையின் பிரமிப்பை நோக்கி வரவேற்று முன் சென்று அமர்கிறது. அதாவது, 240 வகையான பறவைகளை காணும் நம் மனம் சிறகு இல்லாமல் வானில் பறக்க ஆசை கொள்கிறது என்றும் கூறலாம்.

இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தில் காணும், விரிந்த பரப்பில் படர்ந்திருக்கும், வளர்ந்திருக்கும் தாவரங்களான யூக்கலிப்டஸ், மூங்கில் மரங்கள், ஷோரா தாலுரா, எம்பிலிகா அஃபிஸினாலிஸ், ரைடியா டின்ங்க்டோரியா, டெர்மினாலியா தொமெண்டோசா, டெர்மினாலியா அர்ஜுனா, சாண்டலியம் ஆல்பம், ஷீலிசேரா ஒலோசா என எண்ணற்ற தாவரங்கள், நம்மை புத்துணர்ச்சி அடைய செய்து வாழ்வின் அர்த்தத்தை புரியவைக்கிறது. இவை மட்டுமல்லாமல், மேலாதிக்க இன தாவரமான டெண்டிரோகமலஸ் ஷ்டிர்க்டஸும் இங்கே காணப்படுகிறது.

மேலும் மலை பாம்புகளும், ராஜ நாகங்களும், நாகங்களும் என இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படும் ஊர்வனவைகள் அதிகமாகவே தென்பட, நம்மை பயத்தில் தள்ளி புதியதோர் உணர்வினை நம் கண்களுக்கு அவை தருகிறது.

இன்னும் சில பாலூட்டி உயிரினங்களும் இந்த பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகிறது. ஆம், எறும்புண்ணி, நீர்நாய், நீண்ட வால் உடைய குரங்குகள், காட்டு நாய்கள், சிறுத்தை பூனை, சோம்பல் கரடி, முள்ளம்பன்றி, காப்பி வண்ண கீரிகள், மலபார் பெரிய அணில்கள், புள்ளி மான்கள், சிங்கம் வால் குரங்குகள், காட்டு பன்றிகள், புனுகுப் பூனைகள், மெல்லிய தேவாங்குகள், நீலகிரி குரங்குகள், பென்னட் குரங்குகள் என பார்ப்பதற்கு ஏதுவான பாலூட்டிகள் அங்கும் இங்கும் என காணப்படுகிறது.

 பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

commons.wikimedia.org

இப்படி காட்சிகளால் நம் கண்களை கொள்ளை கொள்ளும் பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அழகை ரசித்து நாம் செல்ல, திருநேலி ஆலயம் நம்மை பக்தி நீங்கா தன்மையுடன் வரவேற்று அமரவைக்கிறது. இறைவன் பிரம்மாவால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த ஆலயம், விஷ்னு பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

அடுத்ததாக நாம் காணும் பக்ஷிப்பத்தாலம் குகைகள் கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இதனை 'முனிக்கல் குகை' என்றும் கூறுவர். இந்த குகைகள், மஹரிஷிகளாலும், முனிவர்களாலும் பயன்படுத்தப்பட்டவை என்றும் நம்பப்படுகிறது. அதனால், நாம் செல்லும் வழியில் காணும் இந்த குகையை ஒரு நிமிடம் நின்று ரசிக்க நம் மனம் ஆசைப்பட, மனம் நம் கால்களை குகை நோக்கி இழுத்து செல்கிறது என்று தான் கூற வேண்டும்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X