Search
  • Follow NativePlanet
Share
» »சாகர் தீவு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சாகர் தீவு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சாகர் தீவு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சமயஞ்சார்ந்த முக்கியத்துவம் உள்ள சொர்க்கத்தீவுக்கு உங்களை அழைத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்? எங்கு பார்த்தாலும் சுற்றிலாப் பயணிகளின் கூட்டம், பரப்பரப்பான விடுமுறை மற்றும் சமயஞ்சார்ந்த ஸ்தலம் - இது தான் கொல்கத்தா கடலோரப் பகுதியில் உள்ள சாகர் தீவு. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்த தீவில் பல சுற்றுலா ஈர்ப்புகள் உள்ளன. அதிக செலவில்லாமல் இங்கே உங்களின் சுற்றுலாவை மகிழ்ச்சியோடு கழிக்கலாம். ஹிந்துக்களின் திருவிழாவான மகர சங்கராந்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகு அல்லது சாலை வழியாக இங்கு வருவார்கள். மேலும் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வு பெறவும் இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

 சாகர் தீவு மற்றும் அதனருகில் இருக்கும் ஈர்ப்புகள் இந்த இடத்தின் சிறப்பு என்ன?

சாகர் தீவு மற்றும் அதனருகில் இருக்கும் ஈர்ப்புகள் இந்த இடத்தின் சிறப்பு என்ன?

இந்த தீவின் வாழ்க்கை முறையிலிருந்து உணவிலிருந்து படகு சவாரிகள் வரை அனைத்துமே இதன் சிறப்பம்சமாக விளங்குகின்றன. தங்களின் கார் மூலமாக பயணம் செய்ய விரும்புபவர்களும் இங்கே சுலபமாக செல்லலாம்; படகுகள் மூலம் தங்களின் கார்களையும் இந்த தீவிற்குள் எடுத்துச் செல்லலாம். மகர சங்கராந்தியின் போது இங்கு கொண்டாடப்படும் கங்காசாகர் மேளாவை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது. கங்கா நதி, வங்காள விரிகுடாவை சந்திக்கும் இடத்தில் மக்கள் புனித நீராடுவார்கள்.

Santanu Saha

கடல் சார்ந்த பூங்கா

கடல் சார்ந்த பூங்கா

சாகர் தீவில் பல விதமான பறவைகளையும் கண்டு களிக்கலாம். சாகர் தீவிலுள்ள சாகர் கடல் சார்ந்த பூங்கா மற்றும் கபில் மினி கோவில் ஆகிய இடங்களில் பயணிகள் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம். இங்கே இருக்கும் சாகர் கலங்கரை விளக்கத்திற்கு செல்லவும் சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள். இங்கிருந்து தீவின் அழகிய தோற்றத்தை கண்டு களிக்கலாம். கார் இல்லையென்றால் இந்த தீவை சுற்றிப் பார்ப்பது சற்று கடினமாக இருக்கும். உங்களிடம் கார் இல்லையென்றால் ஒரு வாடகை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வாடகை விஷயத்தில் ஏமாந்து விடாதீர்கள்!

Santanu Saha

பயண வசதிகள்

பயண வசதிகள்

சாகர் தீவை கொல்கத்தாவிலிருந்து மாநில நெடுஞ்சாலை 34 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 117 வழியாக வந்தடையலாம். இந்த தீவு மாநில தலைநகரத்திலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பக்காளி என்ற இடத்திலிருந்து படகு மூலமாக இங்கே வர வேண்டும். கொல்கத்தாவிலிருந்து நேரடியாக படகு மூலமாகவும் இங்கே வரலாம்.

கொல்கத்தாவில் இருக்கும் இரயில் நிலையம் தான் இந்த தீவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன

சாகர் தீவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் உள்ளன.

Souradipta

 இஸ்கானை

இஸ்கானை

மாயாபூர் என்கிற சொல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. மேலும் மாயாபூர், தான் ஒரு ஆன்மீக நகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுத்துகின்றது. இங்குள்ள இஸ்கான் ஆலயம் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை தன்னுள் ஈர்த்து வருகின்றது. அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (ISCON) என்பது ஆன்மீக ஆர்வலர்கள் நெருங்கி பின்னப்பட்ட ஒரு குழுவாகும்.

இஸ்கானைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், உதவி முயற்சிகள் மற்றும் பூஜைகளை ஏற்பாடு செய்து விமர்சையாக கொண்டாடுகின்றனர். இங்கு துர்கா பூஜா, தீபாவளி, தசரா, மற்றும் காளி பூஜை போன்ற விழாக்கள் வெகு விவர்சையாக கொண்டாடப்படுகின்றது. இஸ்கான் பக்தர்களின் தீவிர செயல்பாட்டின் காரணமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். இஸ்கான் மாயாபூரை தலைமையமாக தேர்ந்தெடுத்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

Ilya Mauter

வேற்றுமையில் ஒற்றுமை!

வேற்றுமையில் ஒற்றுமை!

மாயாபூர் கங்கை நதிக் கரையில், கங்கையும் ஜாலங்கி நதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரமே சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடமாக அறியப்படுகின்றது. பொதுவாக சைதன்ய மஹாபிரபு பகவான் கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுகின்றார். இங்குள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சுவாரஸ்யமான மற்றும் இப்போது அடங்கியுள்ள ஒரு மோதல் என்பது இந்த நகரை எவ்வாறு அழைப்பது என்பதாகும். இந்த நகரத்தை மியாபூர் எனறு அழைப்பதா அல்லது மாயாபூர் என்று அழைப்பதா என்கிற பிரச்சனை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றது.

வரலாற்று சிறப்பு மிக்க மாயாபூரில் இன்றும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் இந்துக்களுடன் இணக்கமாக ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்து வாழ்வது ஒரு வரவேற்கத்தக்க விஷயமாகும். இங்கு இஸ்கான் நிறுவனரான ஸ்ரீல பிரபு பாதாவின் சமாதி உள்ளது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பிருந்தாவனத்திற்கு கண்டிப்பாக விஜயம் புரிய வேண்டும்.

Rajmenoka

மாயாபூரின் பாரம்பரிய உணவு வகைகள்

மாயாபூரின் பாரம்பரிய உணவு வகைகள்

மாயாபூரின் குறிப்பிடத்தக்க அம்சம் அதனுடைய பாரம்பரிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவுப் பிரியர்களுக்கான சொர்க்க பூமி இது. இங்கு வரும் பயணிகள் இங்குள்ள சிறு உணவகங்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் ருசிமிக்க பெங்காலி உணவுகளை சுவைத்து மகிழலாம். தெரு கலாச்சாரம் மாயாபூரில் மிகப் பிரபலமானது. இங்குள்ள ஷாப்பிங் வாய்ப்புகள் குறிப்பாக பாரம்பரிய மற்றும் சில்லறை வணிகங்கள் மிகவும் பிரபலமானது.

மேற்கு வங்காளத் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்தில் உள்ள மாயாபூர் ஒன்று அல்லது இரண்டு நாட்களை கழிப்பதற்குரிய ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். இது ஹூக்ளி உட்பட பிற மேற்கு வங்க நகரங்களுக்கு மிக அருகில் உள்ளது. மாயாபூரை ஹுலர் காட்டில் இருந்து படகு மூலமும் அணுக முடியும்.

Ayan Mukherjee

மாயாபூர் சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்

மாயாபூர் சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்

இங்கு குளிர்காலத்தில் லேசான மற்றும் இனிமையான வானிலை நிலவுகிறது. எனவே மாயாபூருக்கு சுற்றுலா செல்ல குளிர்காலமே மிகவும் சிறந்தது.

Braja Sorensen

Read more about: kolkata west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X