Search
  • Follow NativePlanet
Share
» »சலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சலோக்ரா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் சோலன் நகரிலிருந்து 5.3 கி.மீ தூரத்தில் உள்ளது. பல ரம்மியமான கிராமப்புறங்கள் இப்பகுதியில் நிரம்பியுள்ளன. இவற்றில் தோப்-கி-பெரஹ், மாஹி, பஸால் மற்றும் மாஷிவார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கண்டகாட், சோலன், தரம்பூர் மற்றும் குனிஹார் போன்ற முக்கியமான இதர சுற்றுலா நகரங்களும் சலோக்ராவுக்கு அருகில் அமைந்துள்ளன.

சலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

க்ரோல் கா திப்பா எனும் அழகிய செழிப்பான மலை ரம்மியமான இயற்கை வனப்போடு இந்த ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. பசுமையான பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருக்கும் சலோக்ரா சுற்றுலாப்பயணிகளுக்கு திகட்டாத இயற்கைக்காட்சிகளை வாரி வழங்குகிறது. சிவனுக்கான ஒரு புகழ்பெற்ற கோயிலும் இப்பகுதியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பரோக் எனும் இடத்தில் உள்ளது. சலோக்ராவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கிருந்து 41 கி.மீ தூரத்திலுள்ள சிம்லாவுக்கும் விஜயம் செய்யலாம். பயணிகளுக்கான ஏராளமான சுற்றுலா அம்சங்கள் சிம்லா நகரில் நிரம்பியுள்ளன. மேலும் சலோக்ரா சுற்றுலாத்தலம் கல்கா ரயில் நிலையத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் இதர முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சுலபமாக பயணிக்கலாம்.

சலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Agam.b26

சலோக்ரா நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் துவங்கி ஜுன் வரையிலான காலம் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது. தவிர கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டாலும் இணைக்கமான சூழல் நிலவுவதால் குளிர்காலத்திலும் இப்பகுதிக்கு விஜயம் செய்து மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

சலோக்ராவிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த க்ரோல் கா திப்பா என்றழைக்கப்படும் மலைப்பகுதி முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அழகிய மலைப்பகுதியில் மலையேற்றத்துக்கான ஏராளமான பாதைகள் உள்ளன.

சலோக்ரா ரயில் நிலையத்துக்கான பின்புறம் உள்ள இந்த மலைப்பகுதிக்கு பயணிகள் சுலபமாக சென்றடையலாம். ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகள் ஏராளமாக இந்த மலைப்பகுதியில் நிரம்பி வழிகின்றன என்பதே இந்த ஸ்தலத்தின் விசேஷமாகும்.

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X