Search
  • Follow NativePlanet
Share
» »காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்!

காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்!

காவிரி வழிந்தோடி வரும் பகுதிகள் யாவும் செழிப்பும், சிறப்பும் மிக்கவையாக இருப்பினும் இன்று காவிரிக் கரையோரம் அமைந்துள்ள குறிப்பிட்ட ஏழு தலங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லப் போகிறோம்.

காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலையில் தன் பயணத்தை துவங்கி, தமிழகத்தில் கொள்ளிடமாகவும், காவிரியாகவும் பூம்புகார் என்னும் பகுதியில் வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. இது வழிந்தோடி வரும் பகுதிகள் யாவும் செழிப்பும், சிறப்பும் மிக்கவையாக இருப்பினும் இன்று காவிரிக் கரையோரம் அமைந்துள்ள குறிப்பிட்ட ஏழு தலங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லப் போகிறோம்.

சமயபுரம் - சிதம்பரம்

சமயபுரம் - சிதம்பரம்


திருச்சிக்கு உட்பட்ட சமயபுரம் காவிரி ஆற்றுப்படுகையை ஒட்டி பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சமயபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக சிதம்பரம் சுமார் 193 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு நாளில் ஆன்மீகமாகட்டும் அல்லது இதர சுற்றுலா அம்சங்களை அனுபவிக்க விரும்புவோர் நிச்சயம் இந்த பயணத்திட்டம் மூலம் பயணடையலாம்.

சென்னையில் இருந்து திருச்சி

சென்னையில் இருந்து திருச்சி


சென்னையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்சிக்கு எழும்பூரில் இருந்து ரயில் சேவை அதிகளவில் உள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், வைகை அதிவிரைவு ரயில் என அதிகளவிலான ரயில் சேவைகள் உள்ளன. மேலும், கன்னியாகுமாரி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் அதிகப்படியான பேருந்துகள் திருச்சிக்கு இயக்கப்படுகின்றன.

Raki_Man

கோயம்புத்தூர் - திருச்சி

கோயம்புத்தூர் - திருச்சி


கோயம்புத்தூரில் இருந்து சுமார் 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருச்சி. ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ் என 15க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் கூட கோவையில் இருந்து திருச்சிக்கு அதிகளவில் இயக்கப்படுகிறது.

Nittavinoda

சமயபுரம்

சமயபுரம்


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திற்கு உட்பட்டது சமயபுரம். பெரும்பாலும் ஆன்மீகத் தலங்களுக்காக புகழ்பெற்றுள்ள இது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. 14-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில், ஏழு சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இவ்விரு கோவிலுக்கும் சமயபுரம் பயணிக்கும் யாவரும் தவறாமல் சென்று வரவேண்டிய தலமாகும்.

சமயபுரம் - திருச்சி

சமயபுரம் - திருச்சி


சமயபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருச்சி. இந்த இடைப்பட்ட தொலைவில் காவிரி அற்றில் இருந்து ஸ்ரீரங்கத்தை தீவாக பிரிக்கும் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தையும், காவிரி ஆற்றுப் பாலத்தையும் கடந்து பயணிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட தொலைவில் தான் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், திருச்சியின் அடையாளமான உச்சிப் பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளது. காலை 8 மணியளவில் பயணத்தை துவங்குனீர்கள் என்றால் சமயபுரத்தில் இருந்து இவ்விரு தலங்களையும் ஒரு மணி நேரத்தில் தரிசித்து விட்டு திருச்சியை 9 முதல் 10 மணிக்குள் அடைந்துவிடலாம்.

Ssriram mt

திருச்சி - தஞ்சாவூர்

திருச்சி - தஞ்சாவூர்


திருச்சியில் இருந்து அடுத்த கோவில் நகரமான தஞ்சாவூர் 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆன்மீகத் தலம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாகவும் தஞ்சை திகழ்கிறது. ஒரு மணி நேரத்தில் தஞ்சையை அடைந்துவிட்டீர்கள் என்றால் தஞ்சையின் குறிப்பிடத்தக்க சில தலங்களுக்கு மட்டும் சென்று மேற்கொண்டு பயணத்தை தொடருங்கள்.

dixon

தஞ்சாவூர்

தஞ்சாவூர்


தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் என்னும், ராஜராஜ சோழரின் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகளவில் பிரசித்தமானது என்றால் மிகையல்ல. மனோரா கோட்டை, திருவையாறு ஐயாறப்பர் கோவில், ராயல் அரண்மனை அருங்காட்சியகம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

Jean-Pierre Dalbéra

தஞ்சாவூர் - கும்பகோணம்

தஞ்சாவூர் - கும்பகோணம்


தஞ்சாவூரில் இருந்து பகல் 12 மணியளவில் பயணத்தை தொடர்ந்தீர்கள் என்றால் அய்யம்பேட்டை வழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 40 கிலோ மீட்டர் கடந்து கும்பகோணத்தை அடைந்துவிடலாம். வடபகுதியில் காவிரியையும், தென்பகுதியில் அரசலாற்றைம் கொண்ட செழிப்பாக சிறிய நகரம் தான் இந்த கும்பகோணம். இந்நகரத்திலும் நகரத்தைச் சுற்றிலும், ஏராளமான கோவில்களும் மடங்களும் அமைந்துள்ளதால், பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் அதிகளவில் பயணிப்பது வழக்கம்.

Saminathan Suresh

கும்பகோணம் - மயிலாடுதுறை

கும்பகோணம் - மயிலாடுதுறை


கும்பகோணத்தில் சுற்றுப் பயணத்தையும், தரிசனத்தையும் முடித்தவிட்டு மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2.30 மணியளவில் பயணத்தை தொடர்ந்தால் திருவிடைமருதூர் வழியாகவோ, அல்லது கதிராமங்கலம் வழியாகவோ சுமார் 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலாடுதுறையை அடையலாம்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதசுவாமி கோவில் அதன் வரலாற்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில் இந்நகரத்தின் பெயரையும் தன்னுடனே இணைத்துள்ளது. காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் உள்ள எண்ணற்ற மற்றும் குறிப்பிடத்தக்க இந்து கோவில்கள் மயிலாடுதுறையை பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்க வைக்கின்றன.

Ssriram mt

மயிலாடுதுறை - சீர்காழி

மயிலாடுதுறை - சீர்காழி


மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில்தான் சீர்காழி உள்ளது. மாலை 4 மணியளவில் இப்பகுதியை அடைந்தால் கூட சீர்காழியில் பிரசித்தமான பிரம்ம தீர்த்தம், திருக்காழி ஸ்ரீராம விண்ணகரம், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சப்தபுரீஸ்வரர் உள்ளிட்ட திருத்தலங்களில் நேரத்திற்கு ஏற்ப சென்றுவிட்டு பயணத்தை தொடரலாம்.

சீர்காழி - சிதம்பரம்

சீர்காழி - சிதம்பரம்


சீர்காழியில் இருந்து 5.30 மணியளவில் பயணத்தை தொடர்ந்தால் கூட 6 மணியளவில் 20 கிலோ மீட்டர் கடந்து சிதம்பரத்தை அடைந்து விடலாம். பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி அமைதியான சூழலைக் கொண்டுள்ள கோவில் நகரம் தான் சிதம்பரம். சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோவில் 5 முக்கிய சிவ தலங்களில் ஒன்றாக புராண ரீதியாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சபூத தலங்களில் இதுவும் ஒன்றாகும். நடராஜர் கோவில் மட்டுமின்றி இளமையாக்கினார் கோவில், தில்லைக் காளியம்மன் கோவில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீகத் தலங்களாகும்.

wikimedia

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X