Search
  • Follow NativePlanet
Share
» »தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்! ஜொலி ஜொலிக்கும் பனிச்சிகரங்கள்!

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்! ஜொலி ஜொலிக்கும் பனிச்சிகரங்கள்!

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்! ஜொலி ஜொலிக்கும் பனிச்சிகரங்கள்!

மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த பூமியில் இந்த சம்சிங் நகரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள எல்லா நகரங்களுமே இமாலயத்தின் அடிவார மலைகளில் அமைந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு நிரம்பி வழிகின்றன.

Cover PC: Prateek Rungta

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள் மற்றும் தொலைவில் ஜொலிக்கும் பனிச்சிகரங்கள் என்று குதூகலிக்க வைக்கும் அம்சங்களுடன் இயற்கை ரசிகர்களை இந்த சம்சிங் பிரதேசம் வரவேற்கிறது. மேலும் இந்த மலைநகரத்தை ஒட்டி வளமான வனப்பகுதிகளும் காணப்படுகின்றன.

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்! ஜொலி ஜொலிக்கும் பனிச்சிகரங்கள்!

PC: Abhijit Kar Gupta

இவற்றில் பலவகை பறவைகள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் வசிக்கின்றன. நேவ்ரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா சம்சிங் நகரத்திலிருந்து 66 கி.மீ தூரத்தில் உள்ளது. சிலிகுரி மற்றும் டார்ஜிலிங் ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களுடன் நெருங்கிய தொடர்பை இந்த சம்சிங் நகரம் கொண்டுள்ளது. இந்த இரண்டு மலைநகரங்களுக்கு வருகை தரும் பயணிகள் அனைவரும் சம்சிங் நகரத்துக்கும் விஜயம் செய்யாமல் போவதில்லை. சம்சிங் நகரம் நேபாளத்துக்குரிய கலாச்சார அம்சங்களை தனது இசை, நடனம் மற்றும் மற்றும் நாட்டுப்புற கலைவடிவங்களில் கொண்டுள்ளது.

இங்கு கிடைக்கும் சுவையான மோமோ தின்பண்டங்களையும் பயணிகள் ருசி பார்க்க மறக்கக்கூடாது. சிலிகுரியிலிருந்து சம்சிங் வரும் வழியில் சல்சா என்ற மற்றொரு பிரசித்தமான சுற்றுலாத்தலத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். பருவநிலை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் மலையேற்றம் மற்றும் மலைப்பாதை நடைபயணம் போன்ற பொழுதுபோக்குகளுக்கு உகந்த பருவநிலையை சம்சிங் பிரதேசம் பெற்றிருக்கிறது.

தேயிலைத் தோட்டங்களின் பச்சை சரிவுகள்! ஜொலி ஜொலிக்கும் பனிச்சிகரங்கள்!

PC: wiki

இந்த பகுதியிலுள்ள நேவ்ரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மலையேற்றத்துக்கு மிகவும் ஏற்ற இடமாகும். உள்ளூர் கலாச்சார அடையாளம் சம்சிங் நகர மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். மேலும், இவர்கள் தங்களது நடனக்கலை வடிவங்களான சுட்கே மற்றும் மரூணி போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். மகே சங்க்ராந்தி எனும் நேபாள வருடப்பிறப்பு மற்றும் லோசார் எனும் திபெத்திய வருடப்பிறப்பு ஆகிய பண்டிகைகள் இம்மக்களால் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

Read more about: travel west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X