Search
  • Follow NativePlanet
Share
» »சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து சங்கம் பகுதிக்கு செல்வதற்கான இரண்டு மணி நேரப்பயண அனுபவமே சுற்றுலாப்பயணிகளுக்கு ஆனந்தமான அனுபவமாக இருக்கும். பல வளைவுகளைக் கொண்டுள்ள இந்த பாதையில் தென்படும் இயற்கைக்காட்சிகளும், ஆற்றின் தோற்றமும் மகிழ்வூட்டக்கூடியவை. சங்கம் ஸ்தலத்தில் ஆற்றின் ஆழம் குறைவாகவே இருப்பதால் பயணிகள் ஆற்றுக்குளியல் அனுபவத்தையும் பெறலாம்.

சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Ashwin Kumar

இதர பொழுதுபோக்கு அம்சங்கள்

சங்கம் பகுதிக்கு அருகில் மலையேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கும் வாய்ப்பிருப்பதோடு, நீச்சல் மற்றும் காவேரி காட்டுயிர் சரணாலயத்தில் மீன்பிடிப்பில் ஈடுபடுதல் போன்றவையும் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, காவேரி ஆறு ஒரு ஆழமான பாறைப்பள்ளத்தாக்கு வழியாக ஓடும் இடமான மேகேதாடு என்ற இடத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். மேகே என்றால் ஆடு என்பது பொருள்.

ஒரு புலியிடமிருந்து தப்பிக்க ஓடிய வெள்ளாடு ஒன்று இந்த பாறைப்பள்ளத்தாக்கை ஒரே தாவில் தாண்டியதாகவும், தெய்வீக அம்சங்களே அப்படி தாண்டுவதற்கு உதவியிருக்கக்கூடும் என்று பூர்வகுடிகள் நம்பியதால் இன்றும் அந்த இடம் 'மேகேதாடு' என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த இது 'ஆடு தாண்டும் காவிரி' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. மழைக்காலம் முடியும் காலத்தில் இந்த மேகேதாடுவுக்கு விஜயம் செய்வது நல்லது. அச்சமயம் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு நுரை ததும்ப இந்த பாறைப்பள்ளத்தாக்கு வழியே சீறிப்பாயும் அற்புதக்காட்சியை கண்டு ரசிக்கலாம். மேகேதாடு பகுதிக்கு செல்வதற்கு அதன் அருகிலுள்ள கனகபுரா பகுதிவரை பெங்களூரிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன.

சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Philanthropist 1

கர்நாடக அரசுப்பேருந்துக்கழக பேருந்துகள் கனகபுராவிலிருந்து சங்கம் பகுதிக்கு நிறைய பேருந்துகளை இயக்குகின்றன. அங்கிருந்து மேகேதாடு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அரசுப்பேருந்துகள் குறித்த நேரத்தில் பிரயாணத்துக்கு வசதியாக கிடைக்கின்றன.

சங்கம் - மேகேதாடு சுற்றுலாஸ்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 118 கி.மீ தூரத்தில் பெங்களூர் ரயில் நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, புனே மற்றும் கல்கத்தா போன்ற எல்லா முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து மேகேதாடு ஸ்தலத்துக்கு டாக்ஸி வசதிகள் உள்ளன.

சங்கம் மற்றும் மேகேதாடு சுற்றுலாஸ்தலத்துக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 136 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் பல்வேறு சர்வதேச நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு நிறைய விமான சேவைகளை கொண்டுள்ளது.

Read more about: karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X