Search
  • Follow NativePlanet
Share
» »சங்க்ரூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சங்க்ரூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சங்க்ரூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சங்க்ரூர் என்பது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய நகரமாகும். பஞ்சாப் மாநிலத்தின் ஜட் இனத்தை சேர்ந்த சங்கு என்பவரின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது. இந்நகரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாட்களில் இருந்த ஜிந்த் மாநிலத்தின் தலைநகரமாக விளங்கிய சங்க்ரூர், பட்டியாலாவில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 20 குருத்வாராக்கள் உள்ளதால், இந்நகரம் 'குருத்வாராக்களின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே இந்நகரத்தின் சுற்றுலாவிற்கு பெரிதும் புகழ் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தனித்துவம் பெற்ற பண்பாட்டின் நறுமணம் உலகத்தில் இருந்து பல சுற்றுலாப் பயணிகளை இங்கே கொண்டு வருகிறது.

சங்க்ரூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Kathuriarector

சங்க்ரூர் ஈர்ப்புகள்

ஷீஷ் மஹால், பனாசர் தோட்டம், குருத்வாரா ஜனம் அஸ்தன், குருத்வாரா நானக் ஜீரா சாஹிப் மற்றும் குருத்வாரா அகோய் சாஹிப் ஆகிய இடங்கள் சங்க்ரூர் சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சீக்கிய குருக்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது இந்த குருத்வாராக்கள். பல பகுதிகளை சேர்ந்த மக்களை கவரும் வண்ணம் இங்கே பல திருவிழாக்களும், விழா சந்தைகளும் நடைபெறும். ஜன்மாஷ்டமி திருவிழா இங்கே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் குக நவமி என்ற விழா சந்தை, உலகத்தில் இருந்து பல சுற்றுலாப் பயணிகளை அதில் பங்கு பெறச் செய்யும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளதாக விளங்குகிறது.

சங்க்ரூர் சுற்றுலாவின் அதிர வைக்கும் முகத்தை காண வேண்டுமானால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இங்கு நடைபெறும் குகா விழா சந்தையில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஜம்மா மஸ்ஜித் (மலெர்கோட்லா), கிலா முபாரக் (பதிண்டா), சூரிய அஸ்தமன புள்ளி (கசௌலி) மற்றும் காளி கோவில் (பாட்டியாலா) என சங்க்ரூருக்கு அருகில் இன்னும் சில சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

சங்க்ரூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ਮਨਜੀਤ ਸਿੰਘ

தங்கு தடையின்றி சங்க்ரூருக்கு பயணிக்க!

சாலை வழியாக இந்நகரம் பஞ்சாபில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைப்பில் உள்ளதால் இதனை சுலபமாக அடைந்து விடலாம். ஜபல்பூர் எக்ஸ்பிரஸ், அம்ரித்சர் எக்ஸ்பிரஸ் மற்றும் பஞ்சாப் மெயில் பாசென்ஜெர் போன்ற இரயில்கள் சங்க்ரூர் இரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. ஆட்டோ போன்ற பொது போக்குவரத்தும் நகரத்தின் அனைத்து பகுதிகளில் எந்நேரம் வேண்டுமானாலும் கிடைக்கும். இந்நகரத்துக்கு அருகில் சண்டிகரில் இருக்கும் விமான நிலையம் மூலமாகவும் இங்கே வரலாம். பின் விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக சங்க்ரூரை வந்தடையலாம்.

சங்க்ரூரின் வானிலை

சங்க்ரூரில் கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் வறண்டு காணப்படும். இருப்பினும் குளிர் காலத்தின் போது இனிமையான வானிலை நிலவும். இங்கே பருவக்காலம் குறைந்த காலத்திற்கே நீடிக்கும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கே வானிலை இனிமையாக விளங்குவதால் இங்கே சுற்றுலா வருவதற்கு இதுவே உகந்த காலமாகும். மேலும் இந்நேரத்தில் தான் பல விழா சந்தைகளும் நடைபெறும்.

Read more about: punjab
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X