Search
  • Follow NativePlanet
Share
» »சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஏராளமான சிறந்த நகரங்கள் பல அமைந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய நகரம் சட்னா ஆகும். சட்னா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் ஆகும். சமயம் சார்ந்த புராணங்களுக்கும் சட்னா ஒரு முக்கிய மையாமாக அமைந்திருக்கிறது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த சட்னா நகரம் கோயில்களுக்கும், சுற்றுலாத் தளங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. சட்னாவின் இன்னொரு சிறப்புப்பான காரியம் என்னவென்றால், சிமென்ட் உற்பத்தியில் சட்டனா ஒரு முக்கியமான மாவட்டமாக திகழ்ந்து வருவதாகும். சட்னாவைச் சுற்றிலும் பல சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இவை சட்னாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கைச் செய்து வருகின்றன.

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Shobhitsingh314

சட்னாவைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பண்டைய சமயம் மற்றும் பண்பாடு ஆகிய கலந்த கலவையை சட்னா மாவட்டம் வைத்திருக்கிறது. சித்ரகூட் தாம் மற்றும் மைஹர் ஆகிய ஆலயங்கள் சட்னாவின் மிக முக்கிய சமயத் தலங்கள் ஆகும். அதோடு தவாரியில் இருக்கும் சாய்பாபா மந்தீர், சாரதாதேவி ஆலயம் மற்றும் வெங்கடேஷ் ஆலயம் ஆகியவையும் சட்னாவில் இருக்கும் மிக முக்கிய சமயத் தலங்கள். சமயத் தலங்களைத் தவிர்த்து மதவகர் கோட்டை, கிதாகூட் மற்றும் ஜுகட்டேவ் டலப் போன்ற சுற்றுலாத் தளங்களும் சட்னாவின் மிக முக்கியமான அம்சங்களாகும். அவற்றோடு சேர்த்து போகா-ஜலேபி, லோட்டன் கி முங்காடி மற்றும் டகி வடா போன்ற உணவு வகைகளை சட்னா செல்லும் சுற்றுலா செல்லும் பயணிகள் கண்டிப்பாக சாப்பிட்டு வரவேண்டும்.

சட்னாவுக்குச் செல்ல தகுந்த காலம்

சட்னாவில் எல்லாவகையான பருவ காலங்களும் உள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில் சட்னாவில் மிகவும் இதமான வெப்பநிலை நிலவும். எனவே அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்களில் சட்னாவுக்கு சென்று வருவது சிறப்பாக இருக்கும்.

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Biswarup Ganguly

சட்னாவுக்குச் செல்ல போக்குவரத்து வசதி

சட்னாவுக்குச் செல்ல எல்லா வகையான போக்குவரத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக சட்னாவில் ஒரு மிகச் சிறிய விமான நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. அதோடு சட்னாவிற்கு அருகில் உள்ள ஜபல்பூரில் ஒரு பெரிய விமான நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. அங்கிருந்து பேருந்துகள் அல்லது டாக்ஸிகள் மூலம் சட்னா செல்ல முடியும். மேலும் தொடர்வண்டி மற்றும் பேருந்து வசதிகள் முதலியவை சட்னாவில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

பர்ஹூட் கலை அருங்காட்சியகம், பர்ஹூட் ஸ்துபாவின் பெருமையை விளக்கும் ஒரு முக்கியத் தளமாக அமைந்திருக்கிறது. பர்ஹூட் ஸ்துபா அழிந்து வரும் நிலையில் இந்த ஸ்துபாவின் பண்டைய சிறப்பை பர்ஹூட் கலை அருங்காட்சியகம் எடுத்து இயம்புகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய அரிதான புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

சட்னா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Jagat Singh

சட்னா பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் இருக்கும் இந்த கலை அருங்காட்சியம் பண்டைய வரலாறு மற்றும் கலைச் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்து இயம்பும் ஒரு சின்னமாக அமைந்திருக்கிறது. இந்த காட்சியகத்தில் இருக்கும் புகைப்படங்கள் பண்டைய மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை விளக்குகின்றன. இந்த காட்சியத்தில் இருக்கும் பிரசென்ஜிஸ் மற்றும் அஜத்சத்ரு போன்ற தூண்களில் வரலாற்று நிகழ்வுகள், பண்டைய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் பிரசித்தி பெற்ற புராண கதைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பண்டைய வரலாற்றுச் சிறப்பை எடுத்தோதும் மிக முக்கியத் தளமாக பர்ஹூட் கலை அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் சட்னா சென்றால் கண்டிப்பாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்து வரவேண்டும்.

துள்சி ஒரு அகல்வாராய்ச்சிக்கான அருங்காட்சியமாகும். சட்னாவில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் துள்சி விளங்கி வருகிறது. சட்னாவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ராம்வன் என்ற இடத்தில் துள்சி அருங்காட்சியகம் அமையப் பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகம் கிபி 1977ல் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் துள்சி சங்க்ராலயா என்றும் அழைக்கப்படுகிறது.

பண்டைய காலத்தில் தென்னை ஓலையில் செய்யப்பட்ட பொருள்கள், பிர்க் மற்றும் டெரகோட்டா ஆகிய மரங்களில் இருந்து செய்யப்பட்ட பொருள்கள், பண்டையை செப்பு நாணயங்கள், செப்பு பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி அணிகலன்கள் ஆகியவற்றை துள்சி அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும். திங்கள்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை இந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X