Search
  • Follow NativePlanet
Share
» »சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சாத்தால் நகரம் இமாலயத்தின் அடிவார மலைப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1370மீ உயரத்தில் அமைந்துள்ளது. சாத்தால் எனும் பெயருக்கு (ஸாத்-தால்) ஏழு ஏரி என்பது பொருளாகும். ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அமைந்திருக்கும் ஏழு அழகிய ஏரிகளை இங்கு கண்டு ரசிக்கலாம். இவை கருட் தால், பூர்ணா தால், சீதா தால், ராம் தால், லட்சுமண் தால், நளதமயந்தி தால் மற்றும் சுகா தால் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இந்த சாத்தால் நகரமானது மெஹ்ராகாவ்ன் பள்ளத்தாக்குப்பகுதியில் ஓக் மரங்களால் சூழப்பட்டு அமைந்திருக்கிறது.

சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Himanshu Gupta

ஆங்கிலேயர் ஆட்சியின்போது இங்கிருந்த தேயிலைத்தோட்டங்களுக்கு இது பிரசித்தமாக அறியப்பட்டிருக்கிறது. இந்த ஏழு ஏரிகளின் தொகுப்பில் காணப்படும் நீரில் பல்வேறு நுண்சத்துக்கள் நிரம்பியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்பகுதியில் பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்களையும் பார்க்கலாம். இங்கு 500 வசிப்பிட மற்றும் புகலிட பறவையினங்களும், 525 வண்ணத்துப்பூச்சி வகைகளும், 20 வகையான பாலூட்டி இனங்களும் மற்றும் 1100 பூச்சியின வகைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

சிவப்பு மூக்கு கொண்ட நீல நிற மாக்-பை பறவைகள், மீன்கொத்திகள், நீலத்தொண்டை பார்பெட், பழுப்புத்தலை பார்பெட், இந்தியன் டிரீ பை, விசிலடிப்பான் குருவி போன்ற பறவைகளை இங்கு காண முடியும். இவை தவிர ஹிமாலயன் கிரிஃபான் பறவைகள், கொண்டைப்பருந்து, சீயர் காக்கை, கல்ஜி காக்கை, கோக்லா காக்கை, டாலர்பேர்ட், லீஃப்பேர்ட் மற்றும் ஃப்ளவர்பெக்கர் போன்ற பறவைகளும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. ரெட் பேஸ் ஜேஸிபெல், ரெட் ஹெலன் மற்றும் சில்வர் ஸ்ட்ரைப்ஸ் போன்ற வண்ணத்துப்பூச்சி வகைகள் சாத்தால் காடுகளில் காணப்படுகின்றன.

சாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Sumita Roy Dutta

பல அருகி வரும் தாவர வகைகளும் இப்பகுதியில் ஏராளம் நிரம்பியுள்ளன. பலவகையான கொடிகள், மூலிகைகள், ஆர்க்கிட் தாவரங்களை இங்கு பயணிகள் பார்க்கலாம். இதுபோன்ற இயற்கை எழில் அம்சங்கள் தவிர சாத்தால் மிஷன் எஸ்டேட் மற்றும் மெத்தோடிஸ்ட் ஆஷ்ரம், பட்டர்ஃப்ளை மியூசியம் மற்றும் சுபாஷ் தாரா ஆகியவையும் இந்த நகரத்தின் சுவாரசியமான அம்சங்களாக அமைந்திருக்கின்றன. சாகசப்பிரியர்களுக்கு ஏற்ற சொர்க்கபூமியாகவும் இந்த சாத்தால் நகரம் திகழ்கிறது. இங்கு கேம்ப்பிங், டிரெக்கிங், போட்டிங் மற்ரும் மலைச்சைக்கிள் சவாரி போன்ற பொழுதுபோக்குகளுக்கான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. மேலும், மிதவைப்படகுச்சவாரி மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு பிரசித்தமாக உள்ளன.

சாத்தால் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் விமான நிலையமாகும். கத்கோடம் ரயில்நிலையம் அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையமாகும். அருகிலுள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சாத்தால் நகருக்கு பேருந்து போக்குவரத்து வசதிகளும் அதிகம் உள்ளன.

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X