Search
  • Follow NativePlanet
Share
» »சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நீங்கள் இயற்கை விரும்பியா? அப்படியானால் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான சேனாபதிக்கு வாருங்கள். இதன் பெயரில் மாநகராட்சி தலைமைப் பணியிடம் ஒன்றும் உள்ளது. வட கிழக்கு பகுதிகளில் உள்ள பல இடங்களைப் போல இந்த இடத்திலும் இயற்கை அழகு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலை சார்ந்த இயற்கை நிலக்காட்சிகள், பாம்பினைப் போன்ற வளைந்த ஓடைகள், தெளிவான நீருடைய நதிகள் மற்றும் கரடு முரடான மலைகள் போன்றவற்றை ரசிக்கலாம். உங்கள் சுற்றுலாவில் தீரச் செயல்கள் புரிய விரும்பினால் இந்த இடம் அந்த வசதிகள் அனைத்தையும் உங்களுக்கு தரும்.

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Houruoha

சேனாபதி சுற்றுலாத் தலங்கள்

சேனாபதியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கண்டு கழிக்க பல இடங்கள் உள்ளன. மரம் குள்லேன், யாங்குள்லேன், மோ, லியை, மக்கேல், புருல், கௌப்ரு மலை மற்றும் ஹௌடு கொய்டே பிஷோ போன்ற இடங்கள் அவற்றில் முக்கியமானவை. ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்தும் உலகத்தின் மற்ற இடங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு உள்ள ஈர்புகளை கண்டு அதிசயித்து தான் போகிறார்கள்.

சேனாபதியில் உள்ள தாவர வளமும் விலங்கின வளமும்

சேனாபதி மாநகராட்சியின் 80 சதவீதம் காடுகளாக உள்ளதால் சில அறிய வகை தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் இங்கு வரும் வேளையில் காண நேரிடலாம். அடியண்டம் ப்லாபெல்லுலாடம் லின், ஆப்ரஸ் ப்ரிகாடோரியஸ் லின் மற்றும் எல்ஷோல்ட்ஜியா சிலியேட் போன்ற மூலிகை செடிகளும் இங்கு உள்ளன. இவை நாட்டு மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குளிர் காலத்தில் பல பறவைகள் இடம் பெயர்ந்து இங்கே வருவதையும் பயணிகள் கண்டு களிக்கலாம்.

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Ritezh Thoudam

சேனாபதியில் வாழும் மக்கள்

சேனாபதி மாநகராட்சியில் பல சமுதாய மக்கள்வாழ்ந்து வருகிறார்கள். மோ, டங்குல், மரம், குக்கி, ஜேமை, வைபெய், சிறு, சோதே மற்றும் மீடேய் தான் அவற்றில் சில. ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை, உடை பழக்கம் மற்றும் அருஞ்சுவைப் பொருட்கள் என்று தனிப்பட்டு விளங்குகிறது. கிறிஸ்துவ மதமே இங்கு முதன்மையான மதமாக இருக்கிறது. இது போக ஹிந்து மதத்தின் பாரம்பரியத்தை ஒத்த மதத்தை பின்பற்றும் சில மக்களும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் சில மக்களும் இங்கே ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இங்கு பேசும் மொழிகளானது ஐமோல், அசினோ -திபெத்தியன் மற்றும் மெய்டை போன்றவை ஆகும்.

சேனாபதியின் வரலாறு

மணிப்பூர் மாநிலத்தின் வடக்கு திசையில் உள்ள சேனாபதி, கிழக்கு எல்லையில் உக்ருள் மாநகராட்சியாலும், மேற்கு எல்லையில் தமெங்லாங் மாநகராட்சியாலும் சூழ்ந்துள்ளது. இடன் வடக்கு திசையில் நாகலாந்தின் பெக் மாநகராட்சியும் தெற்கு திசையில் மேற்கு இம்பால் மாநகராட்சியும் அமைந்துள்ளது. 1969 ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தை வடக்கு மணிப்பூர் மாநகராட்சி என்றும் அழைப்பர்.

சேனாபதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Boychou

முன்னாட்களில் இந்த இடம் மணிப்பூர் அரசாட்சியின் கட்டுப்பாடுக்குள் இருந்தது. இந்தியாவில் அதிக நாள் நிலைத்து நின்ற அரசாட்சிகளில் இதுவும் ஒன்று. இங்கு காணப்படும் மரபும் பாரம்பரியமும் அந்தக் காலத்தில் உருவானதே. இந்த இடத்திற்கு மணிப்பூரின் அரச குடும்பத்தை சேர்ந்த சேனாபதி திக்கெந்ரஜித்தின் பெயரையே சூட்டியுள்ளனர். வரலாற்றின் படி இந்த இடத்தில் தான் சேனாபதி திக்கெந்ரஜித் ஆங்கிலேய அரிசியல் தரகரான, மேஜர் ஜெனரல் சர் ஜேம்ஸ் மணிப்பூருக்குள் காலடி எடுத்து வைத்த போது வரவேற்றார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆங்கிலேயர்கள் மணிப்பூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்த போது இந்த இளம் இளவரசர் அவர்களை எதிர்த்து 1891 ஆம் ஆண்டு போரிட்டார். போரில் தோல்வி கண்ட இளவரசர் மரணப் படுக்கையில் வீழ்ந்தார். இந்த சம்பவம் மணிப்பூர் வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தை தொடக்கியது. மேலும் இந்த கிழக்கு பகுதிகளை கட்டுப்பாட்டில் வைக்க இந்த இடத்தை தான் தலைமை இடமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர்.

சேனாபதி வருவதற்கான சிந்த நேரம்

அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்திலும், கோடைக்காலத்திலும் சேனாபதி வருவதற்கான சிறந்த நேரமாகும்.

Read more about: manipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X