Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் பீச்சிலேயே சுத்திட்டு இருந்தா அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா?

கோவாவில் பீச்சிலேயே சுத்திட்டு இருந்தா அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா?

கோவாவில் பீச்சிலேயே சுத்திட்டு இருந்தா அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா?

கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும். அதுவும் கோவாவை போன்ற நாட்டின் ஒரு சில இடங்களில் தான் நீங்கள் பீருடன் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், கேண்டலிம் நகர வீதிகளில் நீங்கள் காலாற நடந்தும் செல்லலாம், இல்லையேல் மோட்டார் சைக்கிள் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே நீங்கள் காலைச் சிற்றுண்டிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவோரக் கடைகளில் மலிவு விலைகளில் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம். இங்கு டீ-ஷர்ட்டிலிருந்து, சன் கிளாஸ்கள் வரை எதுவேண்டுமானாலும் கிடைக்கும்.

சரி இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு நிதானமாக சுற்ற கோவாவில் எங்கெல்லாம் செல்வது என்று காணலாம் வாருங்கள்.

 அரம்போள் பீச்

அரம்போள் பீச்


அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும்.

Aleksandr Zykov

மாண்ட்ரேம் பீச்

மாண்ட்ரேம் பீச்

வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், தேன்நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அற்புதமான இடமாகும். இது கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது. மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் நீங்கள் சென்று வரலாம்.

Haakon Wibe

 வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

Philanthropist 1

மோஜ்ரிம் பீச்

மோஜ்ரிம் பீச்

மோஜ்ரிம் கடற்கரையை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். எனினும் கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. இது தவிர ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நீங்கள் மோஜ்ரிம் பீச்சை அடைவது சிறப்பானது. அரபிக் கடலின் அற்புதக் காட்சியை மோஜ்ரிம் கடற்கரையிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவம் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும். அதோடு இந்தக் கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களும், இங்கு கிடைக்கும் கடல் உணவும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் மோஜ்ரிம் பீச்சில் நிலவும் அமைதியான இயற்கை சூழல் ஏகாந்தப் பிரியர்களுக்கு ஒப்பற்ற வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Nikhilb239

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

Ssr

பாகா பீச்

பாகா பீச்


நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும். பாகா பீச் அதன் பரப்பளவிலும் சரி, அது தரும் அனுபவங்களிலும் சரி எவரையும் பிரமிக்க வைத்து விடும். இங்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
McKay

கலங்கூட் பீச்

கலங்கூட் பீச்

வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்தக் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி மிகவும் விசாலமானது. இந்த பார்க்கிங் பகுதியை ஒட்டி வரிசையாக சில கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த கடைகளில் ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். அதோடு கோவா வந்ததின் நினைவாக நீங்கள் ஏதேனும் வாங்க நினைத்தால், அவற்றையும் இந்தக் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம்.

Praveen

கேண்டலிம் பீச்

கேண்டலிம் பீச்

கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். அதோடு இங்கு ஒரு சில குடில்களையும், உணவகங்களையும் நீங்கள் பார்க்கலாம். இருந்தாலும் அவைகளும் கூட கடற்கரையிலிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் தான் காண முடியும்.

FaizanAhmad21

சின்குவேரிம் பீச்

சின்குவேரிம் பீச்

சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது.

Gayatri Priyadarshini

மீராமர் பீச்

மீராமர் பீச்


மீராமரில் இருந்து தெரியும் அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எவரையும் எளிதில் சொக்க வைத்து விடும். அதன் காரணமாகவே இந்தக் கடற்கரைக்கு 'கடலின் அழகிய தோற்றம்' எனும் பொருள் படும்படி மீராமர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கடற்கரை மாண்டோவி நதி கடலில் கலக்கும் இடத்தில், பனாஜியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. மீராமர் பீச் 2 கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடப்பதால் மாலையில் அப்படியே கடற்கரையில் ஒரு சிறு உலா செல்வது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் நிலவொளியில் தகதகக்கும் மணற்பரப்பும், வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களிலிருந்து புறப்பட்டு வரும் இளந்தென்றலும் சேர்ந்து இந்திர லோகத்தில் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை உங்களுக்குள் ஏற்படுத்தி விடும்.

yamarhythm

போக்மாலு பீச்

போக்மாலு பீச்

போக்மாலு பீச் கோவா விமான நிலையத்துக்கும், வாஸ்கோடகாமா நகரத்துக்கும் வெகு அருகிலேயே இருப்பதால் சுலபமாக அடைந்து விடலாம். இங்கு நீங்கள் காலை நேரம் முழுக்க நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம். அதன் பின்னர் நேவல் மியூசியம் சென்று வரலாற்று காலத்தில் கொஞ்ச நேரம் பயணிக்கலாம். இல்லையென்றால் போக்மாலு பீச் ரிசார்ட்டில் அமர்ந்துகொண்டு சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் டோனா பௌலாவுக்கு ஃபெர்ரி அல்லது படகு மூலம் செல்லும் அனுபவம் அலாதியானது.அதோடு போக்மாலு பீச்சில் எண்ணற்ற குடில்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் ஸ்கூபா டைவிங் விளையாட்டு இந்தப் பகுதிகளில் மிகப்பிரபலம்.

அரோசிம் பீச்

அரோசிம் பீச்


தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரையான அரோசிம் பீச்சில் எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இந்தக் கடற்கரையில் குடில்களை அவ்வளவாக பார்க்க முடியாது. இருப்பினும் பீச்சில் இருக்கக்கூடிய ஒரு சில குடில்களில் சுவையான கோவான் உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம். மேலும் கடற்கரையை ஒட்டி நிறைய 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன. robinn

robinn

 உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களுக்கு மத்தியிலே, அதன் தங்க மணற்பரப்பில் படுத்துக்கொண்டு மதுவையும், கடல் உணவுகளையும் ருசிக்கும் அற்புதமான அனுபவத்தை வாத்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடற்கரையின் பேரமைதியின் காரணமாக இங்கு இயற்கை காதலர்களும், நடைபயணம் செல்ல விரும்புவர்களும், தனிமை விரும்பிகளும் அதிக அளவில் கூடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல இங்கு இடைத் தரகர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

கோல்வா பீச்

கோல்வா பீச்

தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் கோல்வா பீச், வடக்கு கோவாவில் உள்ள மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் மிகவும் அமைதியானது. அதுமட்டுமல்லாமல் 24 கிலோமீட்டர் நீளம் பறந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. மேலும் ஒருபுறம் தெற்கு கோவா கேளிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இங்குள்ள ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது. அதோடு புகழ்பெற்ற கோல்வா தேவாலயத்துக்கு அக்டோபர் மாதத்திற்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

வர்கா பீச்

வர்கா பீச்

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா பீச் போன்ற பெரிய கடற்கரைகளுக்கு மத்தியில் சிறிய கடற்கரையாக இருந்தாலும் வர்கா பீச் அவற்றுக்கு எந்த வகையிலும் தரத்தில் குறைந்ததில்லை. இந்த கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களும், சூரிய கதிர்களில் மின்னிடும் வெண் மணலும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதக் காட்சிகள். மேலும் இந்த விருந்தோடு சேர்த்து உங்களுக்காக கோவான் உணவும், காக்டெயில்களும் வர்கா பீச்சில் காத்துக்கொண்டிருக்கின்றன.

பீட்டல் பீச்

பீட்டல் பீச்

பீட்டல் பீச்சில் நீங்கள் சில அற்புதமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு பீட்டல் பீச் மிகவும் சுத்தமாக இருப்பதால் கடல் நீரில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீந்தித் திளைக்கலாம். இதுதவிர பீட்டல் பீச்சில் கிடைக்கும் கோவான் உணவு வகைகள் பயணிகளிடையே வேகுப்பிரசித்தம். கோல்வா பீச்சுக்கு அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் கார் ஓட்டுனர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவைகள் என்பதால் அந்த இடத்துக்கு உங்களை விரைவாக கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

Pranay.rocking

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அரம்போள் பீச்


அரம்போள் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய மாண்ட்ரோம் பீச்


மாண்ட்ரோம் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய மாண்ட்ரோம் பீச்


மாண்ட்ரோம் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய மாண்ட்ரோம் பீச்


மாண்ட்ரோம் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய மாண்ட்ரோம் பீச்


மாண்ட்ரோம் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய மாண்ட்ரோம் பீச்


மாண்ட்ரோம் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய வாகத்தோர் பீச்

வாகத்தோர் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய வாகத்தோர் பீச்

வாகத்தோர் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய வாகத்தோர் பீச்

வாகத்தோர் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய வாகத்தோர் பீச்

வாகத்தோர் கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

அழகிய அஞ்சுனா பீச்

அஞ்சுனா கடற்கரையில் என்னென்ன செய்யலாம்

Read more about: travel beach goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X