Search
  • Follow NativePlanet
Share
» »கதவே இல்லாத கிராமம்! திருடினால் கண் பார்வை பறிபோகும்! இப்படியும் ஒரு அதிசய கிராமம்!

கதவே இல்லாத கிராமம்! திருடினால் கண் பார்வை பறிபோகும்! இப்படியும் ஒரு அதிசய கிராமம்!

கதவே இல்லாத கிராமம்! திருடினால் கண் பார்வை பறிபோகும்! இப்படியும் ஒரு அதிசய கிராமம்!

கதவே இல்லை! ஒரு வீட்டில் கூட கதவு இல்லை. இரவிலும்கூட வீடு திறந்தே இருக்கிறது. யாரும் இந்த கிராமத்தில் திருடுவதில்லை. இங்கு திருட்டு நிகழ்ந்ததாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இவ்வளவு ஏன் இந்த கிராமத்தில் ஒரு விலை மதிப்பு மிக்க பொருளை வைத்துவிட்டு சென்றாலும் கூட திரும்பி வரும்வரை அதை யாருமே தொடுவதுமில்லை. மீறி தொட்டால்....? கண் பார்வை பறிபோகும். ஆம்.. இப்படியும் ஒரு கிராமம். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு கிராமம் இப்படி இருக்கிறது. பெண்கள் மிகவும் உயர்வாக போற்றப்படுகிறார்கள். அதே நேரத்தில் இங்கு மேலாடை இன்றி இறைவனை வழிபடும் பாரம்பரியமும் இருக்கிறது. இப்படிப்பட்ட கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்கள் அல்லவா?

திறந்து கிடக்கும் பணப்பெட்டி

திறந்து கிடக்கும் பணப்பெட்டி

சிங்க்னாப்பூரின் வீடுகளில் இருக்கும் பணப்பெட்டி கூட தாழில்லாமல்தான் இருக்கிறது. அதைப் பூட்டி வைத்து என்ன செய்யப்போகிறோம் என்று கூறி நம்மை அதிரச் செய்கிறார்கள் கிராமத்தினர். அவர்களுக்கு பண ஆசை எல்லாம் இல்லை. கிராமத்தினர் எல்லாருமே நடுத்தர வர்க்கத்து குடும்பமாகவே இருக்கின்றனர். அன்றாடம் வேலை செய்து சம்பாரித்த பணத்தை இவர்கள் பூட்டி வைப்பதில்லை. இந்த கிராமத்துக்குள் வெளி ஆட்கள் நுழைவதே சற்று கடினமானதுதான். அதே நேரத்தில் இந்த கிராமத்தை சுற்றி நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

இல்லத்தை காக்கும் சனி தெய்வம்

இல்லத்தை காக்கும் சனி தெய்வம்

இவர்கள் நம்பிக்கை எல்லாமே சனி கடவுளின் மீதுதான். பொதுவாக இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் சனியின் மீது அச்சம் கொள்கிறார்கள். ஆனால் இந்த ஊர்க் காரர்கள் மட்டும் சனியை இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர். அவர்களின் பூசை அறைகளில் சனிக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

திண்ணைகளும் வெளியாட்களும்

திண்ணைகளும் வெளியாட்களும்

இந்த ஊருக்கு வரும் வெளி ஊர் காரர்கள் தங்குவதற்காக திண்ணை அமைப்பு எல்லா வீடுகளிலும் இருக்கிறது. அப்படி வெளி ஊர் காரர்கள் வந்தாலுமே இவர்களின் வீடுகள் திறந்த நிலையிலேயே இருக்கின்றன. வாயிற் கதவுகள் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் மிகவும் பார்வைக்கு சிறந்ததாக அமைந்துள்ளது.

எங்கே இருக்கிறது தெரியுமா?

எங்கே இருக்கிறது தெரியுமா?

இந்த மாதிரியான ஆச்சர்யம் அளிக்கும் விசயங்களைக் கொண்ட இந்த ஊர் எங்கே இருக்கிறது தெரியுமா?

மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். அதுதான் சனி சிங்க்னாப்பூர். கதவுகளே இல்லாத கிராமம். இன்றளவும் திருட்டே இல்லாத கிராமம்.

பேராசை இல்லா கிராமத்து மக்கள்

பேராசை இல்லா கிராமத்து மக்கள்

இவர்களின் முக்கியத் தொழில் கரும்பு விளைவித்தல் மற்றும் விவசாயம்தான். இவர்களுக்கு இந்த தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருவது இவர்கள் அந்த தொழில் மீது வைத்துள்ள மதிப்பை உணர்த்துகிறது. பேராசை இல்லாத இந்த கிராமத்தினர் தங்கள் பொருள்களை பாதுகாக்க அதிகம் மெனக்கெடுவதே இல்லை.

கனவில் வரும் சனி தெய்வம்

கனவில் வரும் சனி தெய்வம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே செவி வழி கதை ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அது சனி தெய்வம் இந்த மக்களுக்கு இட்ட கட்டளை என்று நம்பப்பட்டு வருகிறது. சனி தெய்வம் கனவில் வந்து இம்மக்களுக்கு உத்தரவிடுவதுதான் அந்த கதை.

சபதமிட்ட சனி பகவான்

சபதமிட்ட சனி பகவான்

அப்படி பல வருடங்களுக்கு முன்னர் பக்தர் ஒருவரின் கனவில் வந்த சனி தெய்வம் இந்த கிராமம் எனது கிராமம் என்றும் இதற்கு நானே காவல்காரன் என்றும் கூறியுள்ளார். அதற்காக நீங்கள் திருட்டு பயம் கொள்ள வேண்டாம். நம்பிக்கை இல்லை என்றால் எந்த வீடுகளுக்கும் கதவே இல்லாமல் உருவாக்குங்கள். நானே காவல்காக்கிறேன் என்று சபதமெடுத்தார் எனவும் கூறுகிறார்கள் பக்தர்கள்.

Maskaravivek

சரி திருட்டு நடந்தால் ?

சரி திருட்டு நடந்தால் ?

இந்த கிராமத்தின் நிலை குறித்து கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இங்கு சென்று இதே சந்தேகத்தை தீர்க்க முடிவு செய்து இந்த கேள்வியைக் கேட்டுள்ளார். அப்படித்தான் நமக்கு சந்தேகம் வரும் என்று சிலரை கூப்பிட்டு நம் முன் நிறுத்தி அதிரச் செய்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். சிலருக்கு கண்பார்வை இல்லாமல் இருந்ததைக் கண்டு முதலில் யாரும் பெரிய அளவில் அதிர்ச்சியுறவில்லைதான் என்றாலும், அவர்கள் கூறிய கதை ஒரு நிமிடம் நம்மை அதிரச் செய்தது.

Junosoon

பரம்பரை பரம்பரையாக

பரம்பரை பரம்பரையாக

திருட்டில் ஈடுபட்ட ஒருவரது பரம்பரையே முழுக்க முழுக்க பார்வை இழந்துவிட்டதாம். அவருக்கு பிறக்கும் குழந்தைகள், பேரன் பேத்திகளுக்கும் இதே நிலைமைதான். இப்படி சொன்னவுடன் ஒரு நிமிடம் நமக்கே உள்ளுக்குள் பயம் ஏற்படுகிறது அல்லவா?

ஆனாலும் அறிவியல் பூர்வமாக அவர்களுக்கு ஏதோ நோய் காரணமாக கண் பார்வை போனதாக கூறப்படுகிறது. எனினும் இது அந்த கிராமத்தினரின் நம்பிக்கை சார்ந்த விசயம்.

Yogesa

 ஆண்களுக்கு மட்டுமே

ஆண்களுக்கு மட்டுமே

திருட்டில் ஈடுபடும் மனிதருக்கு ஷனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்று இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் ஷனி கடவுளின் விக்கிரகம் கருங்கல்லால் வடிக்கப்பட்டு மிகப்பெரிதாய் காட்சியளிக்கிறது. ஆண் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று இந்த தெய்வத்தை தரிசித்து தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இது சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றப்பட்டு பெண்களும் செல்கின்றனர்.

Vaikoovery

 அதிசய கிராமமும் அழகிய சுற்றுலாவும்

அதிசய கிராமமும் அழகிய சுற்றுலாவும்

இந்த கிராமம் இப்படி அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது ஒருபுறம் என்றாலும், இது பொதுமக்களின் சுற்றுலாப் பசிக்கும் தீனி இடுகிறது. வாருங்கள் அதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

Khariharan

அப்துல் பாபா

அப்துல் பாபா


சாயி பாபாவின் தீவிர மான பக்தர்களில் ஒருவரான அப்துல் பாபா வசித்த இந்த நினைவகம் ஷிர்டிக்கு வரும் பக்தர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்த குடிலில் பாப வாழ்ந்த காலத்தின் ஞாபகார்த்தமாக பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறம் பூசப் பட்டுள்ள இந்த சிறிய குடில் ஷிர்டி சாவடி நேர் எதிரே அமைந்துள்ளது.

Udaykumar PR

உபாசனி மஹாராஜ்

உபாசனி மஹாராஜ்

இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த உபாசனி மஹாராஜ் என்ற குருவிற்காக இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் சாயி பாபாவின் தீவிர சீடராவார். உபாசனி மஹாரஜ் ஒரு மிக சிறந்த குருவாக அவரது சீடர்களால் கருதப்படுகின்றார்.

Yayush142

கோடீஸ்வரர்

கோடீஸ்வரர்


ஷிர்டியில் உள்ள மற்றொரு ஐதீக ஸ்தலம் இந்த சமாதி மந்திர் ஆகும். இதன் பின்னணியில் ஒரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அதாவது முற்காலத்தில் இந்த சமாதி மந்திர் ஒரு கோடிஸ்வரருக்கு சொந்தமான கோயிலாக இருந்ததாகவும், சாய் பாபாவின் தீவிர பக்தராக இருந்த அந்த கோடீஸ்வரர் இந்த கோயிலில் ஒரு முரளிதர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பியபோது சாய் பாபாவே முரளிதராக மாறி இந்த கோயிலில் குடி கொண்டதாகவும் அதன் பின்னரே அது இன்றைய சமாதி மந்திர் எனும் கோயிலாக மாறியதாகவும் அந்த கதை சொல்கிறது.

Shikhaverma117

லெண்டி பாக்

லெண்டி பாக்


ஷிர்டி - மன்மாத் சாலையில் மிக அழகாக காணப்படும் ஒரு பூங்கா இந்த லெண்டி பாக் ஆகும். இந்த பூங்காவில் சாயி பாபா பெரும்பாலான நேரத்தை கழித்ததாக கூறப்படுகிறது. இந்த பூங்காவில் ஒரு கல் இருந்ததாகவும் அது இங்கிருந்த கிராமவாசிகளால் துணி துவைப்பதற்கு பயன்படுத்த பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு நாள் அந்த கல்லின் மீது பாபா அமர்ந்திருந்ததை கண்ட மக்கள் அதன் பின்னர் அந்த கல்லை துவார்காமாய் மசூதிக்கு கொண்டு வந்து புனிதப்பொருளாக வைத்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.

Udaykumar PR

Read more about: travel maharastra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X