Search
  • Follow NativePlanet
Share
» »அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!

அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!

அலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது!

'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது. இந்த பெயரை தற்போது மாற்றி மீண்டும் பழைய பெயரையே வைக்க முடிவு செய்துள்ளது பாஜக அரசு. சரி சியாமளா பற்றியும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

ரிட்ஜில் ஜில் ஜில் காட்சி

ரிட்ஜில் ஜில் ஜில் காட்சி

காட்சிபூர்வமான இந்த மலைத்தொடர் பல சுற்றுலாத்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. லக்கார் பஜார் மற்றும் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் மலைத்தொடர்களின் திறந்தவெளி சிகரமான ரிட்ஜிலிரிந்து காணக்கிடைக்கும் காட்சியானது பார்வையாளர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

Biswarup Ganguly

போக்குவரத்து

போக்குவரத்து

சிம்லா, ஆகாய,சாலை மற்றும் ரயில் போன்ற முக்கிய போக்குவரத்து வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் விளங்குகிறது.

Abhineet Khorana

சிம்லாவில் காணவேண்டிய முக்கியமான இடங்கள்

சிம்லாவில் காணவேண்டிய முக்கியமான இடங்கள்

குர்க்கா கேட், கிறிஸ்ட் சர்ச், அன்னன்டேல், அரசு அருங்காட்சியகம், பசுமைப் பள்ளத்தாக்கு, மலையேற்றப்பாதை, உட்வில்லி பேலஸ், க்லென், ஸ்காண்டல் பாய்ண்ட், மவுண்டன் பைக்கிங், காம்னா தேவி கோவில் உள்ளிட்ட எக்கச்சக்கமான இடங்கள் இங்கு இருக்கின்றன.

Abhijeet Singh

கிறிஸ்ட் சர்ச்

கிறிஸ்ட் சர்ச்


வட இந்தியாவின் இரண்டாவது பழமையான தேவாலயமாக சிம்லாவின் கிறிஸ்ட் சர்ச் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது 1846-1857 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது. ரிட்ஜிலிருந்து இந்த தேவாலயத்தைப்பார்க்கும் போது பித்தளையில் பெயர்கள் பொறிக்கப்பட்ட மற்றும் நிறமேற்றப்பட்ட கண்ணாடி சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான தேவாலயமாகத் தெரிகிறது

PranjalMehta11997

 அன்னன்டேல்

அன்னன்டேல்

அன்னன்டேல் பசுமையான தேவதாரு மர காடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான சுற்றுலாத்தலமாகும். இந்த திறந்த வெளி பிரிட்டிஷ் மக்களை மகிழ்விக்க, ஓட்டப்பந்தயம், போலோ மற்றும் கிரிக்கெட் போன்றவற்றின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.

Scothill

 ஸ்காண்டல் பாயிண்ட்

ஸ்காண்டல் பாயிண்ட்

ஸ்காண்டல் பாயிண்ட், மால் ரோட்டிற்கும், ரிட்ஜ் செல்லும் ரோட்டிற்கும் இடையே அமைந்துள்ளது. ஸ்காட்லாந்து தேவாலயம், ஓல்ட் அல்பா உணவகம் மற்றும் மனதை கொள்ளை கொள்ளும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் இங்கு கண்டு களிக்க முடியும்.

Biswarup Ganguly

மவுண்டன் பைக்கிங்

மவுண்டன் பைக்கிங்

சிம்லாவில் மவுண்டன் பைக்கிங்கை ஒரு பிரபலமான விளையாட்டாக சுற்றுலாப்பயணிகள் அனுபவிக்க முடியும். இந்த விளையாட்டின் மூலம் அருகிலுள்ள நல்தேரா மற்றும் சலோக்ரா போன்றவற்றின் கண்ணுக்கினிய காட்சிகளை நாம் காண முடியும். வாடகைக்கு இங்கு மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கும்.

Offroadfinnmark

இமாலயப் பறவைகள் சரணாலயம்

இமாலயப் பறவைகள் சரணாலயம்

இமாலயப் பறவைகள் சரணாலயம் ஒரு அழகிய பூங்காவாகும். இங்கே அரிய வகை பறவையினங்களை பெருமளவில் காண முடியும். இந்த சரணாலயம் இமாலயப் பறவைகள் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. சிம்லாவின் இந்த புகழ் பெற்ற இடம் 2213 மீட்டர் உயரத்தில் அரசுப்பிரதிநிதி மாளிகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மயில் போன்ற ஒரு வகை கோழி இனத்தையும் , மோனல் என்ற பறவையினத்தையும், பல்வேறு அரிதான மற்றும் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களையும் காணலாம்.

ரிட்ஜ்

ரிட்ஜ்

சிம்லா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ரிட்ஜ், மலைத்தொடர்களின் மனதை மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. இது மேற்கில் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் ஒரு பெரிய திறந்தவெளியாக உள்ளது. ரிட்ஜின் கிழக்குப்பகுதி லக்கார் பஜாருக்கு அழைத்துச்செல்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு மர கைவினைப்பொருட்களை வாங்கலாம்

ShashankSharma2511

பொம்மை ரயில் பயணம்

பொம்மை ரயில் பயணம்

ஒரு பிரபலமான பயணமாக இருக்கும் பொம்மை ரயில் (Toy Train) பயணம் லார்ட் கர்சன் பிரபுவால் 1903-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பிரபலமான பழமைமிக்க பயணமானது ஐக்கிய நாடுகள் கல்வி மற்றும் கலாசார அமைப்பின்(Unesco) மூலம் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பயணம் கால்கா-சிம்லா இடையேயான 96 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடப்பதாக உள்ளது. இந்த பயணம் 103 சுரங்கங்கள், 800 பாலங்கள், நதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக்கடந்து மலைக்க வைக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

wiki

Read more about: travel shimla
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X