Search
  • Follow NativePlanet
Share
» »"2004" அடர்ந்த காட்டுக்குள் ஆர்ப்பரித்த 25 அடி சிவலிங்கம்! திடீரென கேட்ட சத்தத்தால் அதிர்ந்த பூமி!

"2004" அடர்ந்த காட்டுக்குள் ஆர்ப்பரித்த 25 அடி சிவலிங்கம்! திடீரென கேட்ட சத்தத்தால் அதிர்ந்த பூமி!

ஆசியாவின் மிக உயரமான சிவலிங்கம் எங்கே இருக்கிறது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் சித்த லிங்கேஸ்வரர் லிங்கத்தைத்தான் சொல்வேன். ஏனென்றால் அது மிகவும் உயரமானது என்பதுடன் இது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு மிகவும் சுவாரசியமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதை ஆகும். அதே நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. சரி வாருங்கள் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் நிகழ்ந்த ஆர்ப்பரிப்பும், அதனால் வெளிவந்த சிவலிங்கத்தைப் பற்றியும் காண்போம். இது வெளியில் தெரிந்த ஆண்டு 2004...

எங்குள்ளது

எங்குள்ளது

அருணாச்சல பிரதேச மாநிலம் ஜிரோ பகுதியில் அமைந்துள்ள கார்டோ எனும் காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது 2004ம் ஆண்டு இது வெளி வரும்போது ஏற்படுத்திய விளைவுகளைப் பார்த்தாலே தெரியும்.

arunachaltravelguide

அமைப்பு

அமைப்பு

ஜிரோவின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இந்த கோவில் மற்ற இந்தியா கோவில்களைப் போல அழகிய கட்டுமானங்கள் கொண்டு இருக்கவில்லை. அது பூமியிலிருந்து பிளந்து வந்த சிலையைப் போல காணப்படுகிறது.

இதைச் சுற்றிலும் நிறைய சூலங்கள் வைக்கப்பட்டுள்ளன. குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியவை கலந்து இந்த சிலை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது.

arunachaltravelguide

எப்போது வெளிவந்தது

எப்போது வெளிவந்தது

இது சாதாரண கோவிலைப் போல இல்லாமல் மண்ணை பிளந்து வெளிவந்த சிலையைப் போல இருப்பதாலும், இது மிக பிரபலமாக பார்க்கப்படுகிறது.

இது வெளிவரத் தொடங்கியது 2004ம் ஆண்டு. அந்த ஆண்டில் சுனாமி உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்கள் வந்த நினைவு இருக்கலாம். அதே சமயத்தில் இந்தியா உட்பட பல பிரதேசங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது என்று கூறப்படுகிறது.

லிங்கத்தின் உயரம்

லிங்கத்தின் உயரம்

ஒரு லிங்கம் பெரியது என்பதை அதன் உயரம் மற்றும் அகலத்தை வைத்தே தீர்மானிப்பார்கள். அந்த வகையில் இந்த லிங்கம் 25 அடி உயரம் கொண்டதாகும். சரி இதன் அகலம் என்னவென்று உங்களால் யோசனை செய்ய முடிகிறதா.. 22 அடி அகலம். இந்த லிங்கத்தின் பெயர் சித்தேஸ்வரநாத் கோவில்.

Ashwani Kumar

கோவிலுக்கு வரும் லட்சம் பக்தர்கள்

கோவிலுக்கு வரும் லட்சம் பக்தர்கள்

லட்சம் பேர் வருவதற்கு இந்த கோவிலில் என்ன இருக்கிறது என்பது உங்களுடைய சந்தேகமாக இருக்கலாம். இதே சந்தேகம் எங்களுக்கும் வந்ததைத் தொடர்ந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை கூறி நம்மை வியக்க வைக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

Satyamon1993

பக்தர்களின் வேண்டுதல்

எப்படி திருச்செந்தூர் கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு பயணிகள் அதிகம் பேர் வருகிறார்களோ அதேமாதிரியே இந்த கோவிலுக்கும் வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகிறார்கள்.

இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் உடனே பலிக்கிறதாம். நீங்களும் சென்று வாருங்களேன்..

சரி.. கொஞ்சம் காத்திருங்க.. சிரோ வரைக்கும் போயிட்டு இந்த கோவிலுக்கு மட்டுமா போகனும்.. இன்னும் நிறைய பகுதிகள் இருக்கு உங்களுக்கு அதையும் பாத்துட்டு வாங்களேன்.

ஜிரோ மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். அப்பகுதி மக்கள் இங்கு பல திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்.

மார்ச் மாதம் கொண்டாடப்படும் மியோகோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப்படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாடப்படும் ட்ரீ திருவிழா போன்றவைகள் மிகவும் பிரசித்தியானவைகள்.

ஜிரோவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவம்

திருவிழா நேரத்தில் ஜிரோவிற்கு சுற்றுலா வந்தால் அருணாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற கலையை கண்டு கழிக்க வாய்ப்பு கிடைப்பதால் இக்காலத்தில் இங்கு வருவதே சிறந்த காலமாகும்.

டால்லி பள்ளத்தாக்கு

ஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற்கொள்ள புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட்என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

ஜிரோவின் அழகிய புகைப்படங்கள்

Read more about: arunachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X