Search
  • Follow NativePlanet
Share
» »சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார் எனும் மாகாணத்துக்கு தலைநகரமாக விளங்கி வந்தது. அப்போது இந்த நகரம் 'பீர் பான் கா பாஸ்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. மேலும் தற்போது ராஜஸ்தானில் பிங்க் சிட்டி ஜெய்ப்பூருக்கு பிறகு மிகவும் வளர்ச்சியடைந்த நகரமாக சிகார் நகரமே கருதப்படுகிறது.

சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Balramahir

அதுமட்டுமல்லாமல் சிகார் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் சிகார் நகரம் இருந்து வருகிறது. அதோடு இந்த நகரம் ஜூன்ஜூனு மாவட்டம், சுரு மாவட்டம், நாகவ்ர் மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூர் மாட்டங்களுடன் தன்னுடைய எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. சிகார் நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது லக்ஷ்மன் சிங் மகாராஜாவால் 1862-ஆம் கட்டப்பட்ட லக்ஷ்மன்கர் கோட்டையே ஆகும்.

இந்தக் கோட்டையில் காணப்படும் சுவரோவியங்களும், கோட்டையின் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலை பாணியும் உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இதுதவிர சாவந்த் ராம் சோக்காணி ஹவேலி, பன்ஸிதர் ரதி ஹவேலி, சங்கனேரியா ஹவேலி, மிரிஜாமால் கியாலா ஹவேலி, சார் சௌக் ஹவேலி, கெதியா ஹவேலி போன்ற மாடமாளிகைகள் சிகார் நகரம் முழுக்க நிறைந்து கிடக்கும் சுற்றுலா மையங்களாகும். சிகார் நகருக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பதேப்பூர் நகருக்கும் சென்று வர வேண்டும். இது நவாப் பதே கான் எனும் கயாம்கானி இஸ்லாமியரால் கண்டறியப்பட்டது.

சிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Vaishali001

இந்த நகரம் அரசர் காலத்து கோட்டைகள், ஹவேலிகள், கோயில்கள், நவாபி பாவ்ரிகள், குளங்கள், மசூதிகள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. மேலும் சிகார் நகரில் உள்ள கதுஷ்யாம்ஜி எனும் புகழ்பெற்ற கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கதுஷ்யாம்ஜி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது இந்தப் பகுதிகளின் கலாச்சாரம் சார்ந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும்.

இவைதவிர உங்களுக்கு நேரம் இருந்தால் கணேஷ்வர், ஜீன்மாதா, ஹரஸ்நாத், ராம்கர், மாதோ நிவாஸ் கோட்டி போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம். சிகார் நகருக்கு அருகில் உள்ள விமான நிலையமாக ஜெய்ப்பூர் விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து அஹமதாபாத், பெங்களூர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சிகார் நகரிலேயே ரயில் நிலையம் இருக்கிறது.

இந்த ரயில் நிலையம் ஜெய்ப்பூர், டெல்லி, கங்காநகர், பிக்கனேர், சுரு உள்ளிட்ட நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பிக்கனேர் போன்ற அருகாமை நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் சிகார் நகருக்கு தினசரி இயக்கப்படுகின்றன. சிகார் நகரில் வருடத்தின் பெரும்பாலான காலங்களில் சூடான மற்றும் வறண்ட வானிலையே நிலவும். எனினும் பனிக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை சிகார் நகரை சுற்றிப் பார்க்க ஏற்றதாக இருக்கும்.

Read more about: rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X