Search
  • Follow NativePlanet
Share
» »சிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா

சிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா

மேற்கு வங்காள மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் மகாநந்தா நதியின் கரையில் அமைந்திருக்கும் பேரழகு வாய்ந்த நாகரம் தான் சிலிகுரி ஆகும். சமீப காலமாக தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளில் தன்னிறைவு பெற்ற நகரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த நகரத்தில் இஸ்கான் கோயில், மகாநந்தா விலங்குகள் சரணாலயம், கோரோனசன் பாலம், சலகுரா மடாலயம் போன்றவை முக்கிய சுற்றுலாத்தலங்கலாக இருக்கின்றன.

கோரோனசன் பாலம் :

சிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா

பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இந்தியா இருந்த போது அப்போதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜின் வருகையை கௌரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தின் முக்கிய நதிகளான டீஸ்டா மற்றும் ரன்கீத் ஆகியவை இணையும் இடத்தில் இந்த கோரோனசன் பாலம். 1930ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் மீது பயணிக்கையில் காணக்கிடைக்கும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப்பயணிகளை மெய் மறக்கச் செய்யும்.

காளி மந்திர்:

டீஸ்டா நதிக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த காலி மந்திர் என்ற புகழ் பெற்ற பத்ரகாளி கோயில். இந்த கோயிலின் மூலவரான காளி அம்மனின் விகாரத்தை சுற்றுலாப்பயணிகள் நிச்சயம் தரிசிக்க வேண்டும். அந்த மிகவும் தத்ரூபமான அம்மன் சிலையின் கண்களும், அம்மனுக்கு அணிவிக்கப்படும் பட்டொளி வீசும் அணிகலன்களும் நம் கண்களை பறிக்கும்.

மகாநந்தா வனவிலங்கு சரணாலயம் :

சிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா

Photo: flowcomm

டீஸ்டா மற்றும் மகாநந்தா நதிகளின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த மகாநந்தா வனவிலங்கு சரணாலயம் ஒரு புகைப்பட பிரியருக்கு சொர்க்க பூமியாகும். இமய மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால் பலவகைப்பட்ட தாவரங்களும், மிருகங்களும் வசிக்கின்றன. வங்காளப் புலி, இந்திய காட்டு யானைகள், கரடிகள் போன்ற மிருகங்கள் இந்த சரணாலயத்தினுள் வசிக்கின்றன. வனத்துறையிடம் அனுமதி பெற்று இரவு பாதுகாப்பான இடத்தில் 'டென்ட்' அமைத்து தங்கலாம்.

சலகுரா மடாலயம்:

சிலிகுரி நகரின் மிக முக்கியமான ஆன்மீகத்தலமாக விளங்குகிறது இந்த சலகுரா புத்த மடாலயம். மிகப்பழமையான திபெத்திய மரபை கடைபிடிக்கும் இந்த சலகுரா மடாலத்திற்கு செல்வது வாழ்வை மாற்றியமைக்கும் ஓரனுபவமாக இருக்கும். திபெத்திய தியான முறைகள் மிகவும் ஷக்தி வாய்ந்தவை மட்டும் இல்லாது பல உடல் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் வல்லமை உடையவையாகும்.

சிலிகுரியை எப்படி அடைவது?

சிலிகுரி நகரில் ஒரு சிறிய சுற்றுலா

Photo: Sayantani

விமானம் மூலமாக: சிலிகுரி உள்நாட்டு விமான நிலையம் சிலிகுரியில் இருந்து 12 கி.மீ தொலைவில் பக்தொக்ரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.

ரயில் மூலமாக : ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 4 கி.மீ தொலைவிலேயே இந்த சிலிகுரி நாகரம் அமைந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து ஜல்பைகுரி வந்து பின்னர் சிலிகுரியை அடையலாம்.

Read more about: siliguri darjeeling west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X