Search
  • Follow NativePlanet
Share
» »டிஜிட்டல் இந்தியாவில் இத்தனை ஆயிரம் சேரிக்களா?

டிஜிட்டல் இந்தியாவில் இத்தனை ஆயிரம் சேரிக்களா?

காலா - கறுப்பு நிற சேரிக்களும், அது சொல்லும் கதைகளும் என்றுதான் இந்த கட்டுரைக்கு பெயரிடலாம் என்று நினைத்திருந்தோம். எப்போதும் பசுமையையும், பயணத்தையும் விரும்பி அலைந்து திரியும் நமக்கு, கறுப்பு எனும் ந

By Udhaya

காலா - கறுப்பு நிற சேரிக்களும், அது சொல்லும் கதைகளும் என்றுதான் இந்த கட்டுரைக்கு பெயரிடலாம் என்று நினைத்திருந்தோம். எப்போதும் பசுமையையும், பயணத்தையும் விரும்பி அலைந்து திரியும் நமக்கு, கறுப்பு எனும் நிறம் கொஞ்சம் அலர்ஜிதான் இல்லையா. ஒரு முறை நினைத்துப் பாருங்கள் சேரிக்களை. அதன் அருகினில் எத்தனை எத்தனையோ சுற்றுலா அம்சங்கள். அங்கெல்லாம் சென்றிருக்கிறோம். ஆனால் இந்த சேரிக்களை எட்டி கூட பாத்தது இல்லை. சரி. இந்தியாவில் ஆயிரம் சேரிக்கள் இருக்குமா என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் அதற்கு மேலும் இருக்கலாம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைய ஊர்களில் சேரிக்கள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனி இடம் இருக்கிறது. சென்னை, கோவை மாநகரங்களில் வாழ்ந்து நகர வாழ்வை சுமையென கருதி திரியும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறோம் சேரி மக்களின் நிலை. என்ன அரசியல் பாதையில் செல்கிறது என்று கருத வேண்டாம். சுற்றுலா செல்லும் இடத்தைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் உண்டு உறங்கி வாழ்ந்து வரும் சேரிக்களைப் பற்றி எப்போதாவது கவலைப் பட்டிருக்கிறோமா.

இந்தியாவிலுள்ள ஆயிரம் சேரிக்களுள் மிக முக்கிய பத்து சேரிக்களை வரிசை படுத்துகிறோம். அதற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்தும் பார்க்கலாம். இனி ஒரு முறை இந்த சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும்போது இப்படிப்பட்ட சேரிக்களையும் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 சுத்தமான இந்தியா சுகாதாரமான இந்தியா

சுத்தமான இந்தியா சுகாதாரமான இந்தியா

மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், சுத்தம் சுகாதாரம் என்று கொள்கை முடிவுகளை அறிவிக்காமல் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்து செயல்படுத்தி சென்றபின்னரும் அடுத்ததும் வேறொரு அரசாங்கம் வந்து அதையே திரும்ப செய்யும். இப்படி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சுகாதாரமும் சுத்தமும் கேள்விக்குறிதான்.

இந்தியா இத்தனை மக்கள் தொகை கொண்டது. இங்கு சொகுசாக வாழ மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்தம் செய்வதற்கும் மக்கள் இருக்கிறார்கள். அரசு வேலை என்றாலும் அவர்களின் பணி சுத்தம் செய்வது. தெருவை கூட்டுவது, அரசு பொது இடங்களை சுத்தம் செய்வது, துணி துவைப்பது என ஒரு பகுதியினர் ஊரின் ஒரு புறமாக இருப்பார்கள். அந்த இடத்துக்கு ஸ்லம் என்று ஆங்கிலத்திலும். சேரி என்று தமிழிலும் பெயர். அப்படி இந்தியாவில் இருக்கும் டாப் 10 மிக அதிக மக்கள் வாழும் சேரிக்கள் இதுதான்.

Leonora Enking

 தாராவி

தாராவி


மும்பை மாநகரத்திலே அமைந்துள்ள தாராவி ஆசியாவிலேயே இரண்டாவது சேரி பகுதியாகும். இது தோல்தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வாழும் மக்கள் தொகை ஒரு கோடியைத் தாண்டும். இங்கு அதிகம் வாழ்வது தமிழர்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இங்கிருந்து அருகிலுள்ள ரயில் நிலையம் - மாஹிம் மற்றும் சயான் ரயில்நிலையம்

மும்பையின் மேற்கு கடற்கரையிலிருக்கும் வாசி, மற்றும் தானா ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து எளிதில் செல்லமுடியும்.

இது 2.1 கிமீ அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் உலகின் மூன்றாவது, ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய சேரி பகுதி ஆகும்.


A.Savin

 உங்களுக்கு தெரியாதவை

உங்களுக்கு தெரியாதவை

மாகிம் ரயில் நிலையத்திலிருந்து சயான் நிலையம் வரை பரந்து விரிந்திருக்கும் இந்த தாராவி பகுதி கொஞ்சம் காலத்துக்கு முன்பு வரை வாய்க்கால் பகுதியாக இருந்தது.

மும்பையின் அருகாமை மக்கள் இங்கு வந்து வாழத் தொடங்கிய நிலையில் வாய்க்காலை கொஞ்சம் கொஞ்சமாக மூடி, குடியிருப்பு பகுதிகளை அமைத்தனர். ஆரம்பத்தில் வட மாநிலத்தவர்களின் கை ஓங்கியிருந்த நிலையில், தற்போது தமிழர்களின் இடம் இது என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.

தோல்பதனிடும் தொழிற்சாலைகள் 17, நூற்றுக்கணக்கான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், குடிசை தொழில்கள் பல என நிறைய தொழில்கள் இயங்குகின்றன. சொல்லப்போனால் மும்பையின் குடிசை தொழில்கள் எல்லாமே இங்குதான் நடைபெறுகின்றன.

ரைட்மார், ஆம்பிசன், குமார்ஸ், பீட்டர் இங்கிலான்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான ஆடைகள் இங்கிருந்துதான் தயாராகி செல்கிறது.

M M

பால்ஸ்வா

பால்ஸ்வா

பால்ஸ்வா எனும் இடம் நம் நாட்டின் தலைநகரான டெல்லியின் குடிசை வாழ் பகுதியாகும். டெல்லி மாநகரின் புறநகர் பகுதியில் இருக்கும் இந்த சேரிப்பகுதியில்தான் டெல்லியின் 20 சதவிகித மக்கள் தொகை இருக்கிறது.

இங்குதான் குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் என புகார் உள்ளது. யமுனா நதிக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடமும் தொழில்களுக்கு புகழ் பெற்றது.

குழந்தைகளை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்பகுதி மக்கள் மேல் இருந்தாலும் அவர்களின் வறுமையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லியில் இதுமாதிரி சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் வறுமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை.

 நொச்சிக்குப்பம்

நொச்சிக்குப்பம்

நொச்சிக்குப்பம்.. அடடே நல்லா கேள்விப்பட்ட பேரா இருக்கேனு ரொம்ப சந்தோசப்பட்டுக்க வேண்டாம். நாம் அன்றாடம் போய் வர்ர இடங்கள்ல கூட கண்ணெதிரே நிறைய சேரிக்கள் இருக்கின்றன. அப்படி ஒன்று தான் இது.

1500க்கும் அதிகமான குடிசைகளும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களும் வாழும் ஒரு பகுதி இந்த நொச்சிக்குப்பம். இங்கிருக்கும் மக்களுள் பலருக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட அரிதாக இருக்கிறது. நல்ல உணவு என்பது குறைவு. ஆனாலும் இப்பகுதி மக்களில் சிலர் ஓரளவுக்கு படித்து வேலைக்கு செல்கிறார்கள். இவர்களின் நலனில் அரசு கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோள் ஆகும்.

சென்னையில் 20 லட்சம் மக்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்

தமிழகம் முழுவதும் இது 1 கோடியைத் தாண்டும்.

Milei.vencel

பசந்தி

பசந்தி


டெல்லி, மும்பை, சென்னை வரிசையில் அடுத்து இருப்பது கொல்கத்தாதானே. அந்த ஊரில் இருக்கும் பசந்தி எனும் பகுதிதான் கொல்கத்தா சேரி ஆகும்.

கொல்கத்தாவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை இங்குதான் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. 3500 குடிசைகளுக்கு மேல் இங்கு இருப்பதாக தெரிகிறது. இப்படிப்பட்ட கொல்கத்தாவின் சேரிகளுக்கு அருகில் நிறைய சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன.

ராஜேந்திரநகர்

ராஜேந்திரநகர்

பெங்களூரு மாநகரின் ஒரு பகுதியான ராஜேந்திர நகர் 570 சேரிக்கள் இருப்பதாக ஒரு ஆய்வு நம்மை பகீரடையச் செய்கிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் 2000 சேரிகள் வரை இருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

இதில் மோசமான விசயம் என்னவென்றால் இந்த சேரிக்களில் அதிகம் வசிப்பது தமிழர்கள் என்பதுதான்.

20 சதவிகித பெங்களூரு நகர மக்கள் சேரிக்களில் வசிக்கின்றனர். ஆனாலும் ராஜேந்திர பாலாஜி நகர மக்கள் சேரிக்களில் வசிக்கவில்லை அவர்கள் எப்போதோ நகர்ப்புறங்களுக்கு குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்கிறார்கள் சிலர்.

இந்திரம்மா நகர்

இந்திரம்மா நகர்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த சேரி பகுதியில் 7 லட்சம் மக்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். மிகக் குறைவான இடத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள். மொத்தமுள்ள 128 பகுதிகளில் 104 மட்டுமே அடையாளம் காணப்பட்ட அல்லது அதிகார்வபூர்வமான சேரிப்பகுதிகள். மற்றவை படிப்படியாக சேரியாகி இப்போது இருப்பவை ஆகும்.

 சரோஜ்நகர்

சரோஜ்நகர்


நாக்பூரில் இருக்கும் சேரிப்பகுதிகளில் முக்கியமான பகுதி இந்த சரோஜ்நகர். இங்கு அதிகாரப்பூர்வமாக 424 சேரிகள் இயங்குகின்றன. அதில் ஒன்றுதான் இந்த சரோஜ் நகர். நாக்பூரின் 40 சதவிகித மக்கள் தொகை சேரியில் வாழ்பவர்களாவர். 1.5 லட்சம் மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 1600 ஹெக்டேர் நிலம் சேரியாக உள்ளது. தாராவிக்கு அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய சேரிப்பகுதி இதுதான்.

 மெஹ்புல்லாப்பூர்

மெஹ்புல்லாப்பூர்

நவாப்களின் பூமி என்று அழைக்கப்படும் லக்னோவிலும் சேரிக்கள் இருக்கின்றன. இங்கு அதிக அளவில் வசிக்கும் ஏழைகள் அதிக உழைப்பையும் குறைந்த சம்பளத்தையுமே பெறுகிறார்கள். லக்னோவில் இருக்கும் 22 பெரிய சேரிக்களில் முக்கியமானது இந்த மெகப்புல்லாபூர் சேரிதான்.

இங்குள்ள மக்கள் எளிதில் நகரத்துக்குள் சென்று வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்புவதற்கு ஏதுவாகவே இந்த சேரிக்கள் அப்பகுதி மக்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

சத்நமி நகர்

சத்நமி நகர்


போபாலின் அருகிலுள்ள சேரிப்பகுதிகளின் சத்நமி நகர் மிக முக்கியமானதாகும். நகரத்துக்குள் இருக்கும் பெரிய நிறுவனங்களின் சிறிய பொருள்கள் தயாரிப்பு முழுவதும் இங்குதான் செய்யப்பட்டு வருகின்றன. ருகால் நகர், சாந்தி நகர் ஆகியவை இங்குள்ள சேரிக்களுள் குறிப்பிடத்தக்கவை. வீடில்லாமல் உணவில்லாமல் தெரு ஓரமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த சேரிக்கள்தான் புகலிடமாக இருக்கிறது.
wiki

பரிவர்தன் நகர்

பரிவர்தன் நகர்

அகமதாபாத்தில் இருக்கும் இந்த பிரிவர்தன் நகரில் 4.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆற்றுப்படுகைகளில் வாழும் ஏழை மக்கள் பலருக்கு, இந்த சேரிக்கள்தான் வாழ்விடம். ஆற்றங்கரைகளை ஒட்டி வாழ்ந்து வரும் இம்மக்கள், கிட்டத்தட்ட 45 வருடங்களாகவே இந்த சேரியில் வாழ்ந்து வருகிறார்கள்.
wiki

Read more about: travel mumbai chennai kolkata delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X