Search
  • Follow NativePlanet
Share
» »சோன்பத்ராவும் குகை ஓவியத் தலங்களும்

சோன்பத்ராவும் குகை ஓவியத் தலங்களும்

சோன்பத்ராவும் குகை ஓவியத் தலங்களும்

முக்கா நீர்வீழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்திலும், ஷிவ்துவார் கோயிலிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச்-கோராவால்-முக்கா தரி சாலையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது தேவி மந்திர் அல்லது கரியா தால் எனும் ஏரிக்கு அருகில் பேலன் ஆற்றில் அமைந்திருக்கிறது. இது சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். மழைக்காலத்தில் பிரமிக்க வைக்கும் எழிலோடு இது காட்சியளிக்கிறது.

சோன்பத்ராவும் குகை ஓவியத் தலங்களும்

Omveer Singh Jadon

ரிஹாந்த் அணை

ரிஹாந்த் அணை உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ரேணுகு-சக்திநகர் சாலையில் பிப்பாரி எனும் இடத்தில் அமைந்துள்ளது. ரேணுகுட் பகுதியிலிருந்து 5 மைல் தூரத்திலும், சோன் ஆறு ரிஹாந்த் ஆற்றுடன் இணையும் இடத்திலிருந்து 46 கி.மி தூரத்திலும் இந்த அணை உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் சுர்குஜா மாவட்டத்தின் தெற்கு பீடபூமிப்பகுதியை ஒட்டி இந்த அணை அமைந்திருக்கிறது.

கோவிந்த் பல்லப் பந்த் சாகர் ஏரி

சோன் ஆற்றின் துணை ஆறான ரிஹாந்த் ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் இந்த அணை கோவிந்த் பல்லப் பந்த் சாகர் ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரி 450 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 1954ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணைக்கட்டுமானம் 1962ம் ஆண்டில் முடிக்கப்பட்டிருக்கிறது. 91.4 மீ உயரம் மற்றும் 934.21 மீ நீளம் உடையதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. 300 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு நீர் மின் நிலையத்தையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில மின்சாரத்துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த அணையில் 61 தனித்தனி இணைப்பு மதகுகள் உள்ளன. அணையின் நீரானது ரிஹாந்த் ஆற்றின் வழியாக மாநிலத்தின் விவசாயத்தேவைகளுக்கு வருடம் முழுவதும் திறந்துவிடப்படுகிறது

சோன்பத்ராவும் குகை ஓவியத் தலங்களும்

Nandanupadhyay

குகை ஓவிய தலங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டம் பல புராதனமான குகை ஓவிய ஸ்தலங்களை கொண்டுள்ளது. இவை வரலாற்றுக்காலத்திற்கும் முந்தைய யுகத்தை சேர்ந்தவையாகும். விந்திய மற்றும் கைமூர் மலைத்தொடர்களில் இந்த குகை ஓவிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன. மெஸோலிதிக் மற்றும் ஹீலியோலிதிக் யுகங்களை சேர்ந்தவையாக இந்த ஓவியங்கள் கருதப்படுகின்றன. பஞ்ச்முகி குகைகள் மற்றும் லக்கானியா குகைகள் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து முறையே 8 கி.மீ மற்றும் 22 கி.மீ தூரத்திலும், கவ்வா கோஹ் மற்றும் லக்மா குகைகள் முறையே சுர்க் மற்றும் மாவ் கலான் கிராமத்திலும் அமைந்துள்ளன. இந்த ஸ்தலங்களில் கோத்வா பஹார் எனும் இடத்திலுள்ள கவ்வா கோஹ் பாறைக்குகை அமைப்பில் ஏராளமான பாறைச்சித்திரங்கள் காணப்படுகின்றன. அந்நாளைய மனித நாகரிகம் குறித்த பல தகவல்களை இந்த பாறைச்சித்திரங்கள் அளிக்கின்றன.

Read more about: caves uttar pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X