Search
  • Follow NativePlanet
Share
» »சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?

சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?

சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?

சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருப்பது தெரியுமா?

மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன் தம்பிக்குள் தகராறாகி, கோபித்துக்கொண்ட முருகன் மலை மீது ஏறி நின்ற கதைகள் பல கேட்டிருப்போம். அப்படி பட்ட முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் பல சுவாரசியங்களும், இன்ப அதிர்ச்சிகளும் நிறைந்தது இந்த சூரசம்ஹாரம். இதையே பெரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். அதுவும் திருச்செந்தூரில். சிக்கலில் வேல் வாங்கி வந்த முகம், செந்தூரில் சூரனை வதம் செய்த முகம் என்று முருகப் பெருமானின் பெருமைகளை பாடுவார்கள். இந்த சூரசம்ஹாரத்தின் வரலாறு பற்றியும், அதன் பின் இருக்கு சில சுவாரசியமான தகவல்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

நிர்வாண வழிபாடு செய்யும் பெண்கள் - கர்நாடகத்தில் இப்படியும் ஓர் விசித்திர கோவில்!நிர்வாண வழிபாடு செய்யும் பெண்கள் - கர்நாடகத்தில் இப்படியும் ஓர் விசித்திர கோவில்!

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்

திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்

திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் இன்று மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு படையெடுக்கிறார்கள். எப்படி செல்வது எது சிறந்த வழி என்பதையும், சூர சம்ஹார நிகழ்வுகளின் பின்னணி சுவாரசியங்கள் குறித்தும் இந்த பதிவில் தொடர்ந்து நாம் காணவிருக்கிறோம்.

முருகனின் படை வீடுகள்

முருகனின் படை வீடுகள்

தமிழகத்தில் திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை என ஆறு இடங்களில் முருகனின் படை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரே தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தலமாகும். இங்குதான் சூரசம்ஹாரப் பெருவிழா நடந்து வருகிறது.

தொன்நம்பிக்கை

தொன்நம்பிக்கை

தொன்னம்பிக்கை கதையாக பெரியவர்கள் சிலவற்றைக் கூறுகின்றனர். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்துவந்த கொடிய அரக்கனான சூரபத்மனை முருகப்பெருமான் போரிட்டு அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காத்தார். சூரபத்மனை அழிந்து தேவர்களை காத்த முருகப்பெருமானின் பக்தி திருவிளையாடல் நிகழ்வானது திருச்செந்தூர் கடற்கரையிலேயே நிகழ்ந்தது. இதனால் மற்ற திருத்தலங்களில் இல்லாத அளவிற்கு ஆன்மிக உலககில் புகழ் பெற்ற சிறப்புடன் சூரசம்ஹார திருவிழா பாரம்பரியத்துடன் பக்தர்களால் ஆண்டுதோறும் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அழிக்க முடியாத சூரன்

அழிக்க முடியாத சூரன்


சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரத்தை பெறுகிறான் சூர பத்மன். அது தன்னை யாரும் அழிக்க முடியாது எனும் வரம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பொறுக்க முடியாத தொல்லைகள் பலவற்றைக் கொடுத்து தன் அழிவைத் தேடிக்கொண்டான். சூர பத்மனை சிவனால் அழிக்க முடியாது. இதனாலேயே தன் மகனை வைத்து அழித்தார் என்றும் கதை கூறுகிறது.

வேல் வாங்கும் நிகழ்வு

வேல் வாங்கும் நிகழ்வு

தந்தை இட்ட கட்டளையை ஏற்ற முருக பெருமான், தாயிடம் வேல்வாங்கி சூரனை அழிக்க திருச்செந்தூர் நோக்கி வருகிறார். இந்த வேல் வாங்கும் நிகழ்வு சிக்கல் பகுதியில் மிக கோலாகலமாக நடைபெறும்.

சூரபத்மன் மட்டுமல்ல! மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்! இந்த கதை தெரியுமா?சூரபத்மன் மட்டுமல்ல! மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்! இந்த கதை தெரியுமா?

சிக்கல் எங்கே உள்ளது

சிக்கல் எங்கே உள்ளது

வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும் சிக்கல், எனும் ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேளாங்கன்னிக்கும், நாகூருக்கும் இடையில், நாகப்பட்டினத்துக்கு அருகிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. இங்கிருந்து கிட்டத்தட்ட 400 கிமீ தூரம் பயணித்து திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்வதாக நம்பிக்கை.

அடைத்திருக்கும் தலை வாசல்

அடைத்திருக்கும் தலை வாசல்

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். இதுவும் சுவாரசியமான கதைகளோடு பின்னப்பட்டதுதான். முருகப் பெருமான் அன்றைய தினத்தில் இந்த வாசல் வழியாக உள்நுழைவார் என்றும் நம்பப்படுகிறது. வள்ளி தெய்வானையுடன் காணப்படும் முருகன், அந்த நாளில் மட்டுமே, தன் முதல் மனைவியோடு திருக்கோவில் புகுவாராம். இப்படி பல்வேறாக தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.

திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?

 விழாவும் நிகழ்ச்சிகளும்

விழாவும் நிகழ்ச்சிகளும்

சூரசம்ஹார விழா நாளில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடை பெறும், மேலும் அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் முருகப் பெருமானின் தரிசனம் காண்கின்றனர். காலை 9 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு சமயங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். மதியம் 2 மணிக்கெல்லாம் மக்கள் கடற்கரையில் கூடத் தொடங்குகின்றனர்.மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்

சுவாரசியமான தகவல்கள்

சுவாரசியமான தகவல்கள்

திருச்செந்தூரில் சுப்ரமணியர், சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்ரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். இவர்கள் அனைவருமே முருகப் பெருமானின் ரூபங்கள்தான் என்பது சுவாரசியமான தகவல் ஆகும்.

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்

 வியர்வை துளிர்விடும் முருகன் சிலை

வியர்வை துளிர்விடும் முருகன் சிலை


சிக்கலில்தான் முருகப் பெருமான் வேல் வாங்கி வருவார். இங்கு வேல் வாங்கும் போது முருகரின் சிலையில் நிசமான வியர்வைத் துளிகள் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

வியர்த்து ஊத்திய முருகன் சிலை! பதைபதைத்த பக்தர்கள்! ஆச்சர்யமான தருணங்கள்வியர்த்து ஊத்திய முருகன் சிலை! பதைபதைத்த பக்தர்கள்! ஆச்சர்யமான தருணங்கள்

மாலை நடைபெறும் சூரசம்ஹாரம்

மாலை நடைபெறும் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடற்கரையில் நடக்கும். அன்று பகல் யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தபசு மண்டபத்தில் நடத்தப்படும் வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப்பெருமானான ஜெயந்திநாதர் தனது படை பரிவாரங்களுடன் மாலையில் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டு செல்வார். அங்கு நடக்கும் போரில் ஆறுமுகப்பெருமான் சூரபத்மனை அழித்து வெற்றியை நிலைநாட்டுவார்.

ஆறு நாட்கள் கடுமையான விரதம்

ஆறு நாட்கள் கடுமையான விரதம்

கந்தசஷ்டி திருவிழாவின் ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் குழந்தைவரம், திருமணவரம் உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். திருச்செந்தூரில் நடக்கும் கந்தசஷ்டி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்துவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் தங்கியிருந்து ஆறு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வர்.

Read more about: travel tiruchendur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X