Search
  • Follow NativePlanet
Share
» »ஹனிமூனுக்கு செல்லும் தம்பதிகளின் கவனத்திற்கு – இந்த அழகான பட்ஜெட் ஃபிரண்ட்லி இடங்களை மிஸ் பண்ணி விடாதீர்கள்!

ஹனிமூனுக்கு செல்லும் தம்பதிகளின் கவனத்திற்கு – இந்த அழகான பட்ஜெட் ஃபிரண்ட்லி இடங்களை மிஸ் பண்ணி விடாதீர்கள்!

இந்த ஆவணி மாதத்தில் தான் எத்தனை திருமணங்கள், அடடா! திருமணமான கையோடு அனைத்து தம்பதிகளும் ஒரு ஹனிமூன் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள்.

லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்தவர்களோ அல்லது மிகவும் சிம்பிளாக திருமணம் செய்தவர்களோ, எவராக இருந்தாலும் அனைவரும் ஒரு ஹனிமூன் சென்று வருவது புதிதாக திருமணம் ஆன தம்பதியர்களுக்குள் ஒரு புரிதலை உண்டாக்கும்.

ஆனால், ஹனிமூன் செல்வது சற்றே கூடுதலான செலவுகளை இழுத்து விடும் என்று நம் வீட்டு பெரியர்வகள் யோசனை கூறுவார்கள். அவர்களை எல்லாம் நீங்கள் ஒரு வழியாக சமாளித்தாலும், பட்ஜெட் ஃபிரண்ட்லியான இடங்களை தேர்வு செய்து அங்கு சென்று வருவது தான் ரைட் சாய்ஸ்.

கட்டிடக்கலை அதியசங்கள், இயற்கை எழில் கொஞ்சம் மலைப்பிரதேசங்கள், பனி மூடிய சிகரங்கள், மழைக்காடுகள் என இந்தியாவில் எண்ணற்ற ஹனிமூன் ஸ்பாட்டுகள் உள்ளன. நீங்கள் இன்னும் உங்களது இலக்கை தேர்வு செய்யவில்லை என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

கோவா

கோவா

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. மலிவான ஹனிமூன் ஸ்பாட்டுகள் பட்டியலில் கோவா முதலிடம் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா! ஆம், கோவா நீங்கள் நினைப்பது போல காஸ்ட்லியான டெஸ்டினேஷன் கிடையாது.பட்ஜெட் பிரண்ட்லியாக நீங்கள் அழகாக திட்டமிடலாம். சென்னையில் இருந்து ரயிலில் கோவாவிற்கு செல்லலாம், 16 மணி நேரத்தில் கோவாவை அடைந்து விடலாம். முன்கூட்டியே OYO மூலம் ரூம் புக் செய்து கொள்ளுங்கள், ரூ. 1௦௦௦ இல்இருந்தே மலிவு விலை ரூம்கள் கிடைக்கின்றன.

பாகா, கேண்டலிம், கேலேங்குட் போன்ற பல கடற்கரைகள், இரவு விருந்துகள், பார்ட்டிகள், நடன நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற துத்சாகர் நீர்வீழ்ச்சி, மசாலா தோட்டம், ட்ரெக்கிங், ஸ்கைடைவிங், ஸ்கூபாடைவிங் போன்ற சாகச விளையாட்டுகள், பண்டையக் கால தேவாலயங்கள், கோட்டைகள் என உங்கள் துணையுடன் நீங்கள் உலாவி மகிழலாம்.ஒரு நபருக்கு 4 முதல் 5 நாட்களுக்கு உணவு, ஷாப்பிங், டிக்கெட் உட்பட ரூ. 15,000 செலவாகிறது.

மூணார்

மூணார்

கேரளாவின் வசீகரமான மலை வாசஸ்தலம் மற்றும் தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்களில் ஒன்றான மூணாரில் நீங்கள் 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து உங்கள் தேனிலவை மறக்க முடியாத இனிமையான நினைவுகளை உருவாக்கலாம்.

தேயிலைத் தோட்டங்கள், மலைத்தொடர்கள், படகு சவாரிகள் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு ஆனைமுடி மலைகளின் வளைந்த சாலைகள் வழியாக காதலருடன் கை கோர்த்து உலா வாருங்கள்.

மூணாறுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் வாயிலாகவும், அல்லது கொச்சினில் இருந்தும் செல்லலாம். நீங்கள் பஸ் அல்லது ரயிலை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். அங்கே வீடெடுத்து அல்லது OYO வில் ரூம் புக் செய்து தங்கிக் கொள்ளுங்கள். ஒரு நபருக்கு ரூ. 10,000 முதல் 12, 000 வரை செலவாகிறது.

ஊட்டி

ஊட்டி

கோயம்பத்தூரில் அமைந்துள்ள மலைகளின் ராணியான ஊட்டி தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தேயிலை தோட்டங்கள், அமைதியான நீர்வீழ்ச்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலை ஆகியவற்றால் நிறைந்திருக்கும் ஊட்டி தேனிலவு தம்பதிகளுக்கு ஒரு சரியான தேர்வாகும்.

கோயம்பத்தூரில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது மனதிற்கும் கண்களுக்கும் இனிமையாக இருக்கும். ஊட்டியில் மலிவான விலையில் நிறைய ரிசார்ட்டுகள் உள்ளன. நான்கு நாட்கள் தங்கியிருந்து இனிமையான வானிலையை அனுபவித்து மகிழ்ந்து நீங்கள் ட்ரிப்பை முடிக்கலாம்.

எமரால்டு ஏரி, ரோஸ் கார்டன், ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், காமராஜ் சாகர் அணை. முதுமலை தேசிய பூங்கா, ஸ்டோன் ஹவுஸ், பைக்காரா நீர்வீழ்ச்சிகள், தொட்டபெட்டா சிகரம், செயின்ட் ஸ்டீபன் தேவாலயம், தேயிலை தொழிற்சாலை மற்றும் தேயிலை அருங்காட்சியகம், ஸ்டோன் ஹவுஸ் இவை யாவும் ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஒரு நபருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை செலவாகிறது.

குடகு

குடகு

கர்நாடக மாநிலத்தின் ரத்தினமாக, ஏழைகளின் ஸ்காட்லாந்து என்று செல்லப்பெயர் பெற்ற குடகு மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும்.இங்கே தேனிலவு தம்பதிகள் அதிக அளவு குவிகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

குடகிற்கு செல்ல சிறந்த வழி பெங்களூரில் இருந்து பேருந்தில் செல்வது தான். போகும் வழியெல்லாம் நீங்கள் இயற்கையே ரசித்துக்கொண்டே ஆனந்தமாக பிரயாணிக்கலாம். குடகில் ஹோம்ஸ்டே செய்வது மிகவும் விசேஷமாகும்.

ராஜா சீட், லோக்கல் ஷாப்பிங், தலை காவிரி, நீர்வீழ்ச்சிகள், மடாலயங்கள், பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை ரசித்தப்படியே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசி மகிழ்ந்து புரிந்துக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரை செலவாகிறது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

வசீகரம் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை சாரலில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலத்தைப் நீங்கள் பார்வையிடும் போது, நீங்கள் கற்பனை செய்த ஒவ்வொரு துளியும் நிஜமாக இருப்பதைக் காணலாம்.

கொடைக்கானல் என்பது தினசரி நகர வாழ்க்கையின் கடுமையிலிருந்து ஓய்வு எடுக்க நீங்கள் செல்லக்கூடிய ஒரு இடமாகும், மேலும் இந்த மலைப்பகுதியில் நீங்கள் பைக்கிங் அல்லது ட்ரெக்கிங் பாதைகளில் செல்லும்போதோ அல்லது சுற்றியுள்ள பரந்த காடுகளின் வழியாக உலா செல்லும்போது இயற்கையோடு நீங்கள் இனைந்து இருப்பதை நிச்சயம் உணருவீர்கள்.

கொடைக்கானல் ஏரி, சில்வர் கேஸ்கேட் ஃபால்ஸ், பிரையன்ட் பார்க், டால்பின் நோஸ், கிரீன் வேலி வியூ, கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி, தலையார் நீர்வீழ்ச்சி, பேரிஜாம் ஏரி, கேனோபி ஹில், பாம்பர் ஃபால்ஸ், கோக்கர்ஸ் வாக் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

கொடைக்கானலில் பல பட்ஜெட் ஃபிரண்ட்லி ஹோட்டல்களும் ஹோம் ஸ்டேகளும் உள்ளன. உங்கள் வசதிற்கு ஏற்றார்போல் ஒன்றை தேர்ந்தேடுத்து தங்கி அழகாக பொழுதைப் போக்குங்கள். ஒரு நபருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை செலவாகிறது.

மேலும் வயநாடு, ஏற்காடு, தேக்கடி, ஆலப்புழா, பாண்டிச்சேரி ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டாயம் ஹனிமூனுக்கு சென்று வாருங்கள்!

Read more about: goa munnar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X