Search
  • Follow NativePlanet
Share
» »வைகுண்ட ஏகாதசிக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அப்படி என்ன தொடர்பு? சொர்க்கவாசல் திறப்பது ஏன்?

வைகுண்ட ஏகாதசிக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அப்படி என்ன தொடர்பு? சொர்க்கவாசல் திறப்பது ஏன்?

இன்று மாலை 4.30க்குள் ஸ்ரீரங்கம் சென்றால் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறும்!

By Staff

108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், 1000 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.இந்த பிறவியே போதும் இனி ஒரு பிறவி வேண்டாம் இறைவனின் பாதங்களில் சரணடைந்து விடுவோம் என்ற எண்ணம்தான் பலருக்கும் வருகிறது. அவ்வாறு சொர்க்கத்திற்கு போக நினைப்பவர்கள் வைகுண்டத்திற்கு செல்வதா கைலாயத்திற்கு செல்வதா என்ற குழப்பத்திலும் இருப்பவர்கள். சைவர்கள் சிவன் வசிக்கும் கைலாயத்திற்கும் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7 தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 8ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். தினசரியும் அரையர் சேவையும் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30க்குள் இந்த கோவிலுக்கு சென்றால் நடக்கும் அற்புதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வரலாறு

வரலாறு

சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளே கோயிலில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். அதுமட்டுமல்லாமல் அரசுகள் மாறினாலும், ஒவ்வொருவரும் கோயிலைப் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர்.

படம் : Prabhu B Doss

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரம் இந்தியாவின் 2-வது உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில், கர்நாடகாவிலுள்ள முருதேஸ்வர் கோயிலுக்கு பிறகு ஆசியாவிலேயே 3-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.

படம் : Giridhar Appaji Nag Y

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று ஆகிய 7 திருச்சுற்றுகள் அமையப்பெற்றுள்ளன. இந்த 7 திருச்சுற்றுகளுக்குள்ளே தென்திசை நோக்கி கருவறையில் பள்ளி கொண்டுள்ளார் ரங்கநாதர்.

ராமானுஜர் சன்னதி

ராமானுஜர் சன்னதி

சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், தன்னுடைய திருமேனியை அகளங்கன் திருச்சுற்றில் உள்ள தன்னுடைய மண்டபத்தில் வைத்து இறுதி காரியங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதுவே தற்போது உடையவர் சன்னதியாக அறியப்படுகிறது.

படம் : Todayindian

சக்கரத்தாழ்வார் சன்னதி

சக்கரத்தாழ்வார் சன்னதி

மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மனின் திருவுருவத்தைக் காணலாம். அதோடு எட்டுத் திருக்கைகள், சங்கு, சக்கரம் மற்றும் அங்குசங்குகளுடன் காட்சியளிக்கும் சுதர்சன ஆழ்வாராக பெருமாள் தோற்றமளிக்கிறார்.

படம் : Ryan

கருடாழ்வார் சன்னதி

கருடாழ்வார் சன்னதி

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் 4-வது திருச்சுற்றாக விளங்கும் ஆலிநாடான் திருச்சுற்றில் கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. இங்கு 14 அடி உயரத்தில் கருடாழ்வார், நேர் எதிரில் கருவறையில் அமர்ந்திருக்கும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார்.

படம் : Jean-Pierre Dalbéra

சந்திர புஷ்கரணி

சந்திர புஷ்கரணி

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்திர புஷ்கரணி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் ஆகிய எட்டுத் தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ளன. சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே அமைந்துள்ளன.

படம் : Ryan

அம்மா மண்டபம்

அம்மா மண்டபம்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள அம்மா மண்டபத்தில், இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் அதிகம் நடைபெறுகின்றன.

படம் : Jean-Pierre Dalbéra

கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் 9-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொய்சள மற்றும் விஜயநகர பேரரசுகளின் காலத்தை சேர்ந்தவையாகும். இவற்றில் 105 கல்வெட்டுகள் சோழர்கள் காலத்தை சார்ந்தவை என்று நம்பப்படுகின்றன.

படம் : Jean-Pierre Dalbéra

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

படம் : ramesh Iyanswamy

மலைக்கோட்டையிலிருந்து...

மலைக்கோட்டையிலிருந்து...

திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் தோற்றம்.

படம் : Raj

தரிசனம்

தரிசனம்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்தி தரிசனம் செய்யும் குடும்பம்.

படம் : Ryan

தூண்களும், குதிரைகளும்!

தூண்களும், குதிரைகளும்!

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள குதிரைச் சிற்பங்கள்.

படம் : Nagarjun Kandukuru

கருட பகவானும், விஷ்ணு பகவானும்!

கருட பகவானும், விஷ்ணு பகவானும்!

கருட பகவானின் தோள்கள் மீது விஷ்ணு பகவான் அமர்ந்திருப்பது போன்ற இந்தச் சிலை அம்மா மண்டபத்துக்கு அருகே அமைந்துள்ளது.

படம் : Jean-Pierre Dalbéra

பௌர்ணமி

பௌர்ணமி

ஒரு பௌர்ணமி தினத்தன்று!

படம் : Jayashree B

முடி காணிக்கை

முடி காணிக்கை

கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் இடம்.

படம் : Nagarjun Kandukuru

1000 தூண் மண்டபம்

1000 தூண் மண்டபம்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 1000 தூண் மண்டபம்.

படம் : Giridhar Appaji Nag Y

தேர்த் திருவிழா

தேர்த் திருவிழா

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேர்.

படம் : sowrirajan s

சீனச் சிப்பாய்

சீனச் சிப்பாய்

ஸ்ரீரங்கம் பகுதி விஜயநகர பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தபோது சீன நாட்டுடன் வணிகத் தொடர்பு இருந்தது. அந்த வரலாற்றை குறிக்கும் விதமாக இந்த சீனச் சிப்பாயின் சிலை கோயிலில் நிறுவப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


படம்: Nagarjun Kandukuru

ராஜஸ்தானிய யாத்ரீகர்கள்

ராஜஸ்தானிய யாத்ரீகர்கள்

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வெகு தூரத்திலிருந்து வந்திருக்கும் ராஜஸ்தானிய யாத்ரீகர்கள்.

படம் : Nagarjun Kandukuru

கொடிமரம்

கொடிமரம்

கொடிமரத்தை வழிபடும் பக்தர்கள்.

படம் : Jean-Pierre Dalbéra

ஷாப்பிங்

ஷாப்பிங்

கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள கடைகள்.

சபரிமலைக்கு செல்லும் வழியில்...

சபரிமலைக்கு செல்லும் வழியில்...

சபரிமலைக்கு செல்லும் முன்பாக ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருக்கும் பக்தர்கள்.

படம் : Nagarjun Kandukuru

இரவு நேரத் தோற்றம்

இரவு நேரத் தோற்றம்

ரங்கநாதசுவாமி கோயிலின் இரவு நேரத் தோற்றம்.

படம் : ramesh Iyanswamy

கோயில் தேர்

கோயில் தேர்

கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் தேர்.

படம் : Nagarjun Kandukuru

ஸ்ரீரங்கம் பாலம்

ஸ்ரீரங்கம் பாலம்

திருச்சியுடன் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் ஒரே பாலமான ஸ்ரீரங்கம் பாலம்.

படம் : Ramanathan Kathiresan

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலை எப்போது, எப்படி அடையலாம்?

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலை எப்போது, எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம் :

எப்போது பயணிக்கலாம் :

படம் : Ryan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X