Search
  • Follow NativePlanet
Share
» »தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள் இதோ!

தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள் இதோ!

தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்.... சிந்துநதி நாகரிகத்தை தூக்கிச் சாப்பிடும் ஆதாரங்கள்!

By IamUD

தமிழர்கள் மிகவும் பழமையான பண்பாடு கொண்டவர்கள். அவர்களே உலகின் முதல் மனிதர்கள் என்று கூறினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. உலகின் முதல் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட தமிழின் பெருமைகள் புதைக்கப்பட்டு வருகின்றன. புதைந்துபோன தமிழர்களின் பெருமைகளை மீட்டெடுக்க விடாமல் அரசு தடுக்கிறது என்றும் சிலர் குற்றம்சாட்டும் நிலையில், பத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த பொக்கிஷம் திருவைகுண்டம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கிடைத்துள்ளது .

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த திருவைகுண்டம். இது இந்த பகுதியின் சுற்றுலாப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பத்தாயிரவருட பொக்கிஷம்

பத்தாயிரவருட பொக்கிஷம்

திருவைகுண்டம் பகுதிக்கு அருகிலுள்ள சிவகளை எனும் கிராமத்தில் தொல்லியல் பணிகள் நடைபெற்ற போது சில பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. இதை அங்குள்ள வரலாற்று ஆசிரியர் ஒருவர் முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Paramatamil

தரிசுகுளமும் தம்ளார் மூக்கும்

தரிசுகுளமும் தம்ளார் மூக்கும்

தரிசு குளம் மற்றும் தம்ளார் மூக்கு ஆகிய பகுதிகள் சிவகளை அருகிலுள்ள மற்ற பகுதிகள் ஆகும். இவை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இடங்கள். இவற்றில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில்தான் அந்த பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டு தற்போது அதன் மதிப்பு தெரியவந்துள்ளது.

இடைக் கற்கால மனிதர்கள்

இடைக் கற்கால மனிதர்கள்

இடைக் கற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய, நூற்றுக்கும் மேற்பட்ட கற்கருவிகளை கண்டறிந்துள்ளனர். இதில் தொல்லியல் ஆய்வாளர் உதவியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

wiki

கற்கருவிகள் செய்யப்பட்ட கற்கள்

கற்கருவிகள் செய்யப்பட்ட கற்கள்

கற்கள் பல வகைப்படுகின்றன. அதிலும் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருவிகள் அகேட், சர்ட், ஜஸ்பர் போன்ற வகையை சார்ந்தவையாகும். இவற்றில் முக்கோண வடிவ கருவிகள், சுரண்டும் கருவிகள், பிறை வடிவ கருவிகளும் அடக்கம்.

wiki

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு

ஆதி மனிதர்களின் பொழுது போக்கும் உணவுக்காகவும் வேட்டையாடுதல் முக்கியமாக இருந்துள்ளது நாம் அறிந்ததே. இவர்களும் இந்த கருவிகளைக் கொண்டு வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்த கருவிகள் கூர்மையாக இருந்துள்ளன இவை மாமிசங்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

wiki

 தொழில்கள்

தொழில்கள்

இவர்களின் தொழில்களாக வேட்டையாடுதல், மீன்பிடித்தல் ஆகியவை இருந்துள்ளன. பிராணிகள் வளர்த்து பயிரிட்டு, வேளாண் செய்து வந்துள்ளதும் தெரிகிறது. தமிழ் பண்பாட்டு நிலப் பிரிவுகளின் படி, நான்கு திணைகளையும் கொண்ட திருநெல்வேலிப் பகுதியில்தான் இந்த இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Santoshsellathurai

ஆற்றங்கரையில் குடும்பம்

ஆற்றங்கரையில் குடும்பம்

பொதுவாக எந்த ஒரு நாகரிகமும் ஆற்றங்கரையிலேயே தொடங்கும். பத்தாயிரம் வருட பழமையான இது நிச்சயம் ஆற்றங்கரைக்கு அருகிலேயே இருந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதியில் நிச்சயம் தாமிரபரணி நதி ஓடியிருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் அதற்கான சான்றுகளாக சில விசயங்களும் கிடைத்துள்ளன.

தென்காசி சுப்பிரமணியன்

சிந்து நதி நாகரிகம்

சிந்து நதி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகமே உலகின் பழமையான நாகரிகங்களுள் முதன்மையானது என்று கருத்து பேசப்பட்டு வருகிறது. அப்போதுள்ள காலத்தில் என்னென்ன வசதிகள், திட்டங்கள், கட்டிடக்கலைகள் கொண்டிருந்தனர் என பிரம்மிப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக கீழடியில் நடைபெற்ற ஆய்வுகள், அதை விட பழமையானது தமிழரின் மதுரைக்கு தெற்கே இருக்கும் நாகரிகம் என்பது நம்பப்பட்டுவருகிறது.

Junhi Han

 கீழடி

கீழடி

கீழடியில் காணப்படும் இடங்களும், பொருள்களும் நல்ல வசதியான, அல்லது கட்டமைக்கப்பட்ட இடங்களை அறிய முடிகிறது. அப்படியானால், இந்த நாகரிகம் எங்கு தோன்றியது என்ற ஒரு கேள்வி இங்கு எழுகிறது. .

Paramatamil

 சிந்துசமவெளி

சிந்துசமவெளி

சிந்துசமவெளியும் சரி, கீழடியும் சரி கிட்டத்தட்ட தமிழர்களின் தென்னிந்தியர்களின் நாகரிகம் என ஓரளவுக்கு அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டால், நம் இலக்கு, மீண்டும் தாமிரபரணி நதிக்கரையை நோக்கி நகரவேண்டும். ஏனென்றால் சிந்து சமவெளியை விட பழமையான தாமிர பரணி நாகரிகம் நிச்சயம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

Rahuljeswin

தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்

தாமிரபரணி நதிக்கரை நாகரிகம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள் பலவற்றில் குறிப்பாக , மெஞ்ஞானபுரம், கூட்டாம்புளி, கூத்தன்குழி, சாயர்புரம், கட்டாலங்குளம், குளத்தூர், புத்தன்தருவை, சூரங்குடி, நாசரேத், மானாடி, காயாமொழி போன்ற ஊர்களிலும் இதுபோன்ற இடைக்கால கற்கருவிகள் கிடைத்துள்ளன.

Karthikeyan.pandian

 நாகரிகம் துவங்கிய இடம்

நாகரிகம் துவங்கிய இடம்

தாமிரபரணி நதிக்கரையில் இந்த நாகரிகம் துவங்கி படிப்படியாக இவர்கள் பரந்து சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டால், உலகின் முதல் மனிதன் எங்கு தோன்றினான் என ஆதாரத்துடன் நிரூபிக்கக்கூடிய அளவுக்கு நம் ஆராய்ச்சிகள் மேம்படும் எனலாம். ஆனால், தமிழர்களின் பெருமைகளை குழிதோண்டி புதைக்க நினைப்பவர்களின் கைகளில் அதிகாரம் இருக்கும் வரை கேள்விக்குறிதான். குறைந்தபட்சம் நம் தமிழர்களின் பெருமைகளை நாம் கொண்டு சேர்ப்போம். பகிர்ந்து பரப்புவோம்.

Kuzhali.india

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

இந்த ஊரில் நிறைய கோவில்களும் சுற்றுலாத் தளங்களும் இருக்கின்றன.

திருவைகுண்டம் பெருமாள் கோவில் அதிக பக்தர்கள் வருகை தரும் இடமாகும்.

மேலும் இங்கு கைலாசநாதர் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது.

பத்திரகாளியம்மன் கோவிலும் இங்கு சிறப்பு வாய்ந்தது. கோவில் கொடைவிழாவின் போது அதிக பக்தர்கள் வருகிறார்கள்.

sowrirajan s

 எப்படி செல்வது

எப்படி செல்வது

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலிருந்து இங்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தனியார் வாகனங்களும் இங்கு செல்லும் வாய்ப்பை வழங்குகின்றன.

Read more about: travel tirunelveli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X