Search
  • Follow NativePlanet
Share
» »முருகன் சிவபெருமானுக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்த இடம் எது?

முருகன் சிவபெருமானுக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்த இடம் எது?

By Naveen

சிவபெருமானின் நெற்றிக்கண் நெருப்பில் உதித்த முருகன் தமிழர் கடவுளாக போற்றி வணங்கப்படுகிறார். முருகனுக்கு கோயில் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லுமளவிற்கு சாதி, மொழி பேதங்களை கடந்து தமிழ் நிலத்தில் வாழும் அனைவரும் வழிபடும் கடவுளாக முருகன் இருக்கிறார்.

ஆறுமுகங்கள் கொண்ட முருகப்பெருமானுக்கு பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆறு கோயில்கள் அறுபடை வீடுகள் என்றழைக்கப்படும் பிராதான வழிபாட்டு ஸ்தலங்களாக திகழ்கின்றன.

அவற்றுள் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலை பற்றி அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

சுவாமிமலை:

சுவாமிமலை:

கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய கும்பகோணத்தில் இருந்து 8.5கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ஆம் படைவீடான சுவாமிமலை திருக்கோயில்.

Ancient Temples in Tamilnadu

தகப்பன்சாமி !

தகப்பன்சாமி !

சுவாமிமலை பாலகனான முருகப்பெருமான் தனது தந்தைக்கு போதனை செய்திருக்கிறார். இதனாலேயே இவ்விடம் குருமலை, கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

அழகு அலங்காரம்!

அழகு அலங்காரம்!

மற்ற அறுபடை வீடுகளைக்காட்டிலும் சுவாமிமலையில் முருகப்பெருமான் அற்புதமான அலங்காரத்துடன் காட்சி தருகிறார். விபூதி அபிஷேகத்தின் போது முற்றும் அறிந்த ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தின் போது பாலசுப்பிரமணியமாகவும் அழகின் ரூபமாக முருகன் காட்சி தருவார்.

குன்றுதோறும் இருப்பான் முருகன் !

குன்றுதோறும் இருப்பான் முருகன் !

மலைகளே இல்லாத தஞ்சை பகுதியில் இருக்கும் சுவாமிமலையின் மேல் முருகன் வீற்றிருப்பது சிறப்பாகும். இந்த மலையின் மேலுள்ள கோயிலை அடைய 60 படிகளை ஏறி கடக்க வேண்டும்.

இந்த படிகள் சபரிமலையில் இருக்கும் 18 படிகளை போன்று புனிதமானதாக கருதப்படுகின்றன.

Ancient Temples in Tamilnadu

படிகளின் சிறப்பு !

படிகளின் சிறப்பு !

அந்த படிகள் புனிதமானதாக கருதப்பட காரணம் அந்த 60 படிகளும் அறுபது தமிழ் வருடங்களை குறிப்பதாகவும், அவ்வருடங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளாக இங்கு வந்து முருகனை வழிபட்டு இங்கே படிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

திருப்படி பூசை !

திருப்படி பூசை !

தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்புகளின் போது இந்த படிகளுக்கு கடவுள் சிலைகளுக்கு செய்வதை போன்றே வஸ்திரம் அணிவித்து தேங்காய், பழம் போன்றவை படைக்கப்பட்டு பூசைகள் செய்யப்படுகிறது.

இதற்கு 'திருப்படி பூசை' என்று பெயராகும்.

Ancient Temples in Tamilnadu

பாலமுருகன் !!

பாலமுருகன் !!

இக்கோயிலின் மூலவரான முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் வலது கையில் தண்டாயுதத்துடனும், இடது கையை தொடையில் வைத்தபடி குருவாக நின்று அருள்பாலிக்கிறார். முருகனின் தமையனான விநாயகருக்கும் இங்கே தனி சந்நிதி உள்ளது.

Ancient Temples in Tamilnadu

வஜ்ரவேல் !

வஜ்ரவேல் !

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் ஒருங்கே பெற்ற தனது தாய் பார்வதியால் அருளப்பட்ட வஜ்ரவேலுடன் முருகன் வீற்றிருப்பதை காண கண்கள் கோடி வேண்டும்.

இவர் கையில் உள்ள வேல் உருவாக்கிய சுனையே இக்கோயிலுக்கு கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உருவாக்கியதாகும் நம்பப்படுகிறது.

Ancient Temples in Tamilnadu

தல விருட்சம் !

தல விருட்சம் !

பார்வதி தேவியின் சாபத்திற்கு ஆளாகிய பூமாதேவி இக்கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாகவும், அதன் பிறகு இவ்விடம் விட்டு விலக மனமின்றி நெல்லி மரமாக இங்கேயே தங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த நெல்லி மரமே இங்கு தலவிருட்சமாக உள்ளது.

Ancient Temples in Tamilnadu

புகழ் பாடியோர் !

புகழ் பாடியோர் !

"அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே"

என்று அருணகிரிநாதர் தனது திருப்புகழ் நூலில் சுவாமிமலையை பற்றி பாடல்கள் இயற்றியுள்ளார்.

அதோடு நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில் சுவாமிமலை முருகனின் சிறப்புகளை ஏராளமாக பாடியுள்ளார்.

Ancient Temples in Tamilnadu

தல புராணம்:

தல புராணம்:

பாலகனான முருகன் பிரம்மனிடம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் என்று வினவியதாகவும். அதற்கு பதில் தெரியாததால் அவரை தலையில் குட்டி சிறைவைத்தாரம் முருகன்.

திருமாலின் கோரிக்கைக்கு இணங்க சிவன் முருகனிடம் பிரம்ம தேவரை விடுவிக்கும்படி வேண்டியுள்ளார். தந்தையின் கோரிக்கைக்கு பிரம்மாவை விடுவித்திருக்கிறார் முருகன்.

Ancient Temples in Tamilnadu

தல புராணம்:

தல புராணம்:

பின்னர் அண்ட சராசரமுமான தனது தந்தை சிவபெருமானுக்கே பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்த இடம் தான் இந்த சுவாமி மலை ஆகும்.

வைகாசி விசாகம்,கார்த்திகை,கந்தசஷ்டி,பங்குனி உத்திரம்இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் ஒருமுறையேனும் இக்கோயிலுக்கு வந்து முருகனின் அருளை பெற்றிடுங்கள்.

பா.ஜம்புலிங்கம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X