Search
  • Follow NativePlanet
Share
» »மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் தென்மேற்கு எல்லையை அலங்கரிக்கும் வைரமான லட்சத்தீவு தீவுகள் இந்தியாவின் புகழ்பெற்ற கடற்கரை நகரமாகும். தூய்மையான கடற்கரைகளுக்கும், பவளப்பாறைகளுக்கும் பெயர் போன மாலத்தீவுகளை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஏன்? நம் நண்பர்கள் பலரும் அங்கு சென்று வந்து நம்மிடம் கதை கதையாக் கூறி இருப்பார்கள். ஆனால் அதன் பட்ஜெட் காரணமாக அனைவராலும் மாலத்தீவுகளுக்கு சென்று வர முடியாது இல்லையா! இருப்பினும் மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இடம் தான் இந்த லட்சத் தீவுகள்.

வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள், ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்கள் லட்சத்தீவுகளை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. கடல் நீரில் நிலவும் நிலையான வெப்பநிலை காரணமாக தீவுகள் வளமான கடல்வாழ் உயிரினங்களுக்குப் தாயகமாக உள்ளது. பல நீர் விளையாட்டுகள், டைவிங் நடவடிக்கைள் மற்றும் சாகச விளையாட்டுகளும் இங்கு பிரபலம். இந்தியாவில் உள்ள மிகச்சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள் பல தீவுகளின் தொகுப்பாகவும், உலகெங்கிலும் உள்ள பல கடற்கரைப் பிரியர்களுக்கு ஒரு கண்கவர் சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. 36 தீவுகளைக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்று வரும்போது, ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. லட்சத்தீவுகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக!

மினிகாய் தீவு

மினிகாய் தீவு

இந்தியாவின் மிகச் சிறந்த அழகிய ரகசியங்களில் ஒன்றாகக் கருதப்படும் மினிகாய் தீவு, அரேபியக் கடலின் பரந்த பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது. பல ஆடம்பர கடற்கரை ஓய்வு விடுதிகள் தனிமை தேடுபவர்களுக்கு ஒருவித அமைதியை வழங்கி பயணிகளை கவர்கிறது. லட்சத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள மினிகாய் தீவுகள் உள்ளூர் மக்களால் மாலிகாவ் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீவு மாலத்தீவு கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பிரபலமானது. தீவுக்கூட்டத்தின் தென்மேற்குப் பகுதி சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த இடம் அதன் கடற்கரைகள் மற்றும் 1885 இல் கட்டப்பட்ட ஒரு கலங்கரை விளக்கத்திற்கு பிரபலமானது.

அகட்டி தீவு

அகட்டி தீவு

ஸ்நோர்கெலிங் தொடங்கி கண்ணாடி படகு சவாரி செய்வது வரை அனைத்து வகையான நீர் நடவடிக்கைகளுக்கும் அகத்தி தீவு சிறந்த இடமாகும். விமான நிலையத்திலிருந்து லகூன் கடற்கரையை அடைய 20 நிமிடங்கள் ஆகிறது. அகட்டி தீவுகளுக்குச் செல்லும்போது உள்ளூர் உணவுகள் மற்றும் உலர்ந்த அல்லது புகையூட்டப்படும் டுனா மீனை சுவைப்பது மிகவும் பிரபலம். கடற்கரையில் நிலவொளியில் இரவு உணவு, சூரிய குளியல் மற்றும் உங்கள் அன்புக்குரியவரோடு படகு சவாரி செய்ய தவறாதீர்கள். கொச்சி விமான நிலையத்திலிருந்து வாராந்திர விமானங்களை வழங்கும் விமான நிலையம் இருப்பதால், இந்த தீவு பிராந்தியத்தில் மிகவும் அணுகக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

பங்காரம் தீவு

பங்காரம் தீவு

தேனிலவுக்கு ஏற்ற இடமாக கருதப்படும் இந்த தீவில் உள்ள உற்சாகமான நீர் விளையாட்டு நடவடிக்கைகள் தீவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகிறது. சுற்றுலாப்பயணிகளால் பெரும்பாலும் சொர்க்கம் என்றே அழைக்கப்படும் இந்த பங்காரம் தீவில் வெள்ளை மணல் மற்றும் ஆழமற்ற கடற்கரைகளுக்கு பெயர் போனது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்கள் ஆகிய இருவருக்குமான செயல்பாடுகளால் நிரம்பியிருப்பதால், லட்சத்தீவுகளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த தீவு கருதப்படுகிறது.

கத்மட் தீவு

கத்மட் தீவு

பெரிய லகுன் மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களின் தாயகமான கட்மட் தீவு அதன் அழகிய ஆழமற்ற வெள்ளி கடற்கரைகளுக்கு பெயர் போனது. லட்சத்தீவுகளில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கத்மட் தீவு, ஒரு பவளப்பாறையில் மேல் அமைந்துள்ளது. இந்தத் தீவில் நீங்கள் பரந்த அளவிலான நீர் விளையாட்டுகளையும், தனிமையான நேரங்களையும் அனுபவிக்க முடியும். தீவில் அரிதாகவே மக்கள் நடமாட்டம் உள்ளதால் இது மிகவும் அமைதியான இடமாக உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளதால், இங்கு முதன்மையான வருமானம் மீன்பிடித்தலே. இந்த தீவில் ஸ்நோர்கெலிங் மற்றும் ஆழ்கடல் டைவிங்கிற்கு செல்வது விசேஷமானது.

 கவரட்டி தீவு

கவரட்டி தீவு

இயற்கை எழில் கொஞ்சும் மசூதிகள் தவிர, கவரட்டி தீவு பல சுற்றுலா தலங்களையும் கொண்டுள்ளது. கடல் அருங்காட்சியகம் முதல் உப்புநீக்கும் ஆலை வரை, தீவில் அனைத்தையும் கொண்டுள்ளது. வெள்ளை மணல், தெளிவான நீல நிற நீர், ஒதுங்கிய தடாகங்கள் மற்றும் அழகான சூரிய அஸ்தமனம் ஆகியவை, இந்த தீவை லட்சத்தீகவுளில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக ஆக்குகிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமான கவரட்டி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. நீர் விளையாட்டுகள் மற்றும் நீச்சல் போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடலாம்.

மேலும் ஆண்ட்ரெட்டி தீவு, கல்பேனி தீவு மற்றும் அமின்டிவி தீவு ஆகியவையும் இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

FAQ's
  • லட்சத்தீவுகளை எப்படி அடைவது?

    கொச்சியில் இருந்து அகட்டியில் உள்ள விமான நிலையத்திற்கு வழக்கமாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. அகட்டியில் இருந்து, இங்குள்ள முக்கியமான நகரமான கவரட்டிக்கும், மழைக்காலங்களில் பங்காரம் தீவுக்கும் ஆண்டு முழுவதும் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் கடல் வழியாக லட்சத்தீவுகளுக்கு கப்பலில் பயணம் செய்வதும் மிகவும் அருமையாக இருக்கும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு சில பயணிகள் கப்பல���கள் இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் மற்றும் சாலை மார்க்கமாக லட்சச்தீவுகளை அடைய இயலாது.

  • லட்சத்தீவுகளுக்கு எப்போது செல்ல வேண்டும்?

    உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதால் இது ஒரு ஆக்டிவான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. செப்டம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் லட்சத்தீவுகளுக்கு சென்று வருவதற்கு ஏற்ற நேரமாக கூறப்படுகிறது. அந்நேரத்தில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. மேலும் சர்ஃபிங், நீச்சல், கேனோயிங், ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங், வாட்டர் ஸ்கீயிங், கயாக்கிங் மற்றும் பல சாகசங்களில் நீங்கள் பங்கேற்கலாம்.
    கோடைக்குப் பிறகு, அதாவது பருவமழை தொடங்கி முடிந்தப் பிறகு, அந்த இடம் முழுக்க மிகவும் பசுமையாக மாறுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X