Search
  • Follow NativePlanet
Share
» »அம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை! தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்

அம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை! தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்

செவ்வாய் தோஷம் உட்பட பல தோஷங்கள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி குறைந்து, சோகமயமாக காட்சியளிக்கும். திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழாமல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்க

By Udhaya

செவ்வாய் தோஷம் உட்பட பல தோஷங்கள் இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி குறைந்து, சோகமயமாக காட்சியளிக்கும். திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழாமல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு குருவின் பார்வை இருந்தாலாவது தொழில் தொடர்பான பிரச்னைகள் அகன்று ஓரளவுக்கு நன்மை பயக்கும். ஆனால் அதுவும் இல்லையென்றால் அவர் பாடு அதோகதிதான். ஆனால் இப்படியெல்லாம் மக்கள் படும் பாட்டை தீர்க்க அம்பிகை அவதரித்துள்ளார். அதுவும் சிவன் கோயிலில். வாருங்கள் அந்த கோயிலுக்கு போய்ட்டு வரலாம்.

எங்குள்ளது

எங்குள்ளது

சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். இந்த கோயிலின் மூலவர் அகத்தீஸ்வரர். உற்சவர் சோமாக்கந்தர். தாயார் சுவர்ணாம்பிகை ஆவார். இந்த கோயிலின் தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத்தை ஒட்டி 10 நாட்கள் சிறப்பு பூசை நடைபெறுகிறு. கார்த்திகை மாதம் நடைபெறும் 1008 சங்கு அபிசேகமும், பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாணமும் சிறப்பாகும்.

Gopalakrishnan A.P

 நடைதிறப்பும் தலச் சிறப்பும்

நடைதிறப்பும் தலச் சிறப்பும்

குருபகவான் அம்பிகையின் நேரடி பார்வையில் இருக்கும் இந்த கோயிலில், காலை 6 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருப்பதால் அவரை வழிபட்டாலே, குருவின் பார்வை கிடைத்து வீட்டில் தோஷங்கள் நீங்கி நல்ல வழி பிறக்கும். இப்படி ஒரு அமைப்பை காண்பது அரிது.

KARTY JazZ

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்கின்றனர். அதன் பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருமணத் தடை, பயப்படும் குணம் கொண்டவர்கள் அதிகம் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதலை நிறைவேற்றினால் அகத்தீசுவரர் மற்றும் அம்மனுக்கு சந்தனக் காப்பிட்டு, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Ssriram mt

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

தாம்பரத்திலிருந்து வில்லிவாக்கம்

தாம்பரத்திலிருந்து வில்லிவாக்கத்துக்கு மூன்று வழித்தடங்களில் வருகை தரலாம்.

வழித்தடம் 1

கிழக்கு தாம்பரத்திலிருந்து இரும்பொலியூர், கன்னடாபாளையம், அனகாபுத்தூர் வழியாக அய்யப்பன்தாங்கலை அடைந்து, அங்கிருந்து பாடி வழியாக அகத்தீஸ்வரர் கோயிலை அடையலாம். 32 கிமீ தொலைவை சராசரியாக 40 நிமிடத்தில் அடையலாம்

வழித்தடம் 2

தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை, மீனம்பாக்கம், ஆம்பல்நகர், உதயம் திரையரங்கு, வடபழனி வழியாக அகத்தீஸ்வரர் கோயிலை அடையலாம்.

வழித்தடம் 3

மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம் வழியாக நுங்கம்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து லயோலா காலேஜ் வரை சென்று ஷேர் ஆட்டோ, அல்லது பேருந்துகள் மூலமாக இந்த கோயிலை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X