Search
  • Follow NativePlanet
Share
» »ஏழரைச் சனி மரணபயத்தை காட்டுகிறதா? கவலை வேண்டாம் இங்கு போங்க!

ஏழரைச் சனி மரணபயத்தை காட்டுகிறதா? கவலை வேண்டாம் இங்கு போங்க!

ஏழரைச் சனி மரணபயத்தை காட்டுகிறதா? கவலை வேண்டாம் இங்கு போங்க!

ஏழரைச் சனி உங்களை ஆட்டுவிக்கும்போது, சிறிய கஷ்டம் வந்தாலும் அதை நீங்கள் மலையாக எண்ணி சோர்ந்துவிடுவீர்கள். ஆனால் அப்படி இல்லாமல் இந்த கோயில்களுக்கு சென்று, மனதை திடப்படுத்திக்கொண்டு, ஏழரைச் சனியை வென்றிடுங்கள்.

திருப்பெரும்புதூர் ஆதிகேசவபெருமான் கோயில்

திருப்பெரும்புதூர் ஆதிகேசவபெருமான் கோயில்

500 முதல் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த கோயில் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் அமைந்துள்ளது.

மாசி பூரம், பங்குனி உத்திரம், சித்திரை கடைசி வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஆதிகேசவர், ராஜநாதவல்லி, ஆண்டாள், ராமானுஜர் ஆகியோருக்கு அபிசேகம் நடைபெறும்.

மைசூர் மகாராஜா இந்த கோயிலுக்கு தங்க மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளார் என்பது சிறப்பு.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னை பெருங்களத்தூரிலிருந்து 25கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு தாம்பரம் - முடிச்சூர் வழியாகவும் செல்லமுடியும்.

மணிமங்கலம் வழியாகவும் செல்ல சாத்தியப்படும் இந்த கோயில் 45 நிமிடங்களுக்குள் செல்லும்படியாக அமைந்துள்ளது.

நாமபுரீஸ்வரர் கோயில்

நாமபுரீஸ்வரர் கோயில்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோயில். இங்கு, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.

நந்தி பகவானுக்கு நெற்றியில் திருநீறுக்கு பதில் நாமம் அணுவிக்கப்பட்டிருக்கும். இங்குள்ள தட்சனாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவார்கள். இங்கு புதன் தோஷம் சிறப்பு வாய்ந்ததாகும்.

Vaikoovery

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கும்பகோணத்திலிருந்து 18கிமீ தூரத்தில் அமைந்துள்ளது ஆலங்குடி. மாநில நெடுஞ்சாலை எண் 66ல் பயணித்தால் அரை மணி நேரத்தில் சென்றடையலாம்.

ஸ்ரீசுயம்பு பெருமாள் கோயில்

ஸ்ரீசுயம்பு பெருமாள் கோயில்


கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது, இருளர்பதி எனும் ஊர். இங்குள்ள ஸ்ரீசுயம்பு பெருமாள் கோயிலுக்கு, சனிக்கிழமையில் சென்று துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். அவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கி வாழ்வில் நலம் கிட்டும் என்றும் கூறுகிறார்கள்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

காரமடை அருகே கண்டியூர் இருளர்பதி பெருமாள் கோயிலுக்கு கோயம்புத்தூரிலிருந்து அதிகபட்சம் ஒருமணி நேரத்தில் செல்லலாம்.

பொங்கு சனீஸ்வரர் கோயில்

பொங்கு சனீஸ்வரர் கோயில்


திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவது மிகச்சிறந்ததாகும். முடிந்தால் சனிப்பெயர்ச்சியன்று இந்த கோயிலுக்குச் செல்வது மிக நன்று.

இம்மாதம் 19ம் தேதி சிறப்பு பரிகாரங்கள் நடைபெறும் என்றும் தெரிகிறது.

rajaraman sundaram

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


மன்னார்குடியிலிருந்து 40நிமிட பயணத் தொலைவில் சென்றடைய முடியும். 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். இங்கு செல்லும் வழியில் இருள்நீக்கி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அகத்தீஸ்வரர் மக்களின் வாழ்வில் இருள்நீங்கச் செய்து வளம் பெறச்செய்வார் என்பது நம்பிக்கை.

ஸ்ரீயோக நரசிம்மர் கோயில்

ஸ்ரீயோக நரசிம்மர் கோயில்


திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது சோகத்தூர். இங்கு அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சகலமும் நன்மையில் முடியும் என்று நம்பப்படுகிறது.

 எப்படி செல்வது

எப்படி செல்வது


மேல்மருவத்தூரிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் எளிதாக செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோயில்.

ஸ்ரீநாகேஸ்வரர் கோயில்

ஸ்ரீநாகேஸ்வரர் கோயில்


நாமக்கல் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீநாகேஸ்வரர் கோயில்.

திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

நாமக்கல்லில் இருந்து அரை மணி நேரத்தில் சென்றுவிடும்படி, 25கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். அருகருகில் எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளன. மாரியம்மன், சென்னாத்தா, ராமசாமி, கருப்பநார் சாமி என எக்கச்சக்க கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன.

ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் கோயில்

ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது ஐதீகம்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

பெரம்பலூரிலிருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். இதை அடையும் முன்பு 10 நிமிடத்தில் ரஞ்சன்குடி கோட்டை ஒன்று உள்ளது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு 2000 வருடங்கள் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இங்கு அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கினால், நலம் பெறலாம்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சீர்காழியிலிருந்து அரை மணி நேரத்தில் சென்றடையும் தொலைவில் அமைந்துள்ளது திருக்கடையூர். மாநில நெடுஞ்சாலை எண் 32ஐ பின்தொடர்ந்து சென்றால் 23வது கிமீ தொலைவில் கோயிலை அடையலாம்.

குச்சனூர் சனி பகவான்

குச்சனூர் சனி பகவான்

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கினால் சகலப் பிரச்சனைகளும் நீங்கும்.

குச்சனூர் பற்றிய மேலும் தகவல்களுக்கு https://tamil.nativeplanet.com/travel-guide/shani-bhavan-temple-at-kuchchanur-near-theni-001776.html

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் 23கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.

 ஸ்ரீவாலீஸ்வரர் கோயில்

ஸ்ரீவாலீஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோலியனூர். இங்கு ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் தென்முகமாக அமைந்துள்ள சனீஸ்வர பகவானை வணங்கினால் ஏழரைச் சனி தாக்கம் குறையும்.

மேலும் செவ்வாய் தோசத்துக்காகவும் இங்கு பக்தர்கள் வருகைத் தருகின்றனர்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 9கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோலியனூர் கோயில்.

ஸ்ரீஆதிவராகப்பெருமாள்

ஸ்ரீஆதிவராகப்பெருமாள்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீஆதிவராகப்பெருமாள், ஸ்ரீபூமாதேவி கோயில். ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் இது சனிப்பெயர்ச்சிக்காகவும் பெயர் பெற்ற கோயிலாக உள்ளது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திருநெல்வேலியிலிருந்து 1மணி நேரத்தில் செல்லமுடியும். கிட்டத்தட்ட 50கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

 திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயில்


ஏழரைச் சனி தாக்கத்தை குறைக்க முக்கியமாக திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபடவேண்டும். திருச்செந்தூர் பற்றிய மேலும் தகவல்களுக்கு

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X