Search
  • Follow NativePlanet
Share
» »தஞ்சை பெரிய கோயில் - தன்னிகரற்ற தமிழர் கட்டிடக்கலையின் மணிமகுடம்

தஞ்சை பெரிய கோயில் - தன்னிகரற்ற தமிழர் கட்டிடக்கலையின் மணிமகுடம்

By Super Admin

தமிழராய் பிறந்த நாம் எல்லோரும் பிறப்பால் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இன்று உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மிகப்பழமையான மொழி. தோராயமாக பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றினை கொண்டிருக்கும் மொழி. இன்றிருக்கும் மொழிகள் தோன்றும் முன்பே 'தொல்காப்பியம்' போன்ற மொழிக்கு செறிவூட்டும் இலக்கண நூல்களை கொண்டிருந்த மொழி. இன்று தன் கடவுளே சிறந்தவர், தான் சார்த்த மதமே முக்திக்கான மார்க்கம் என்று மூடர்கள் பிதற்றிக்கொண்டிருக்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் அனைவருக்கும் பொருந்தும் தமிழ் மறையாம் வள்ளுவம் கொண்ட மொழி நம் தமிழ் மொழி.

இப்படியொரு புகழ் தமிழுக்கு கிடைக்க காரணம் அகத்தூய்மையும், அகண்ட அறியும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் தான். வெறும் சொல்லிலும், எழுத்திலும் மட்டுமில்லாது நவீன யுகத்தின் அறிவியலுக்கும் புதிராக இருக்கும் கட்டிடங்களையும் எழுப்பியிருக்கின்றனர் நம் மூதாதையர்.

அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலாகும். தமிழர் கட்டிடக்கலையின் மனிமகுடமான இக்கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர்.

இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Sujith

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் மேல் இருக்கும் விமான கோபுரமானது 216அடி உயரம் உடையதாகும். உலகிலிருக்கும் மிக உயரமான விமான கோபுரங்களில் ஒன்றான இதன் மேல் 80டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட கலச பீடம் இருக்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

Sujith

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.

இதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயிலின் தலைமை கட்டுமான பொறியாளராக 'குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன்' என்பவர் இருந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் 2000 ஆண்டுகள் பழமையானதான சிந்து சமவெளி நாகரீகத்தில் நகரங்களை அமைக்க அவர்கள் பயன்படுத்திய கணித அளவீடுகளே இக்கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Sujith

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, சூரிய பகவான், சந்திர பகவான், வருண பகவான், குபேரர் ஆகியோரது சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் எல்லோரது சிலையும் ஒரு வளர்ந்த மனிதனின் சராசரி உயரமான 6 அடிக்கு இருக்கின்றன. இந்த உயரத்திற்கு கடவுளர்களின் சிலைகளை காண்பது அரிதானதாகும்.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

பெரிய கோயிலின் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.

குறிப்பிட்ட சில கோணங்களில் சூரியன் இருக்கும் போது இதன் நிழல் கீழே விழாதே தவிர மற்ற நேரங்களில் எல்லா கட்டிடங்களையும் போல இதன் நிழல் கீழே விழுவதை நாம் காண முடியும்.

Sissssou2

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

1010ஆம் ஆண்டு இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்ட போது இக்கோயிலில் மட்டும் அர்ச்சகர்கள், நடன மங்கைகள், இசை வாத்திய கலைஞர்கள், கணக்கர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர்.

இவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புகள் இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காண முடியும்.

fraboof

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் கற்சிற்பம். இக்கோயிலில் நாம் மிக மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட சிற்பங்களை காண முடியும். கையில் உள்ள நுண்ணிய நரம்புகள் கூட சிலைகளில் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும்.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

பிரகதீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஆள் உயர கற் சிற்பங்கள்.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனுள் ராஜ ராஜன் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பணிவாக நிற்பது போன்ற சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோழர்கள் சிற்பம் வடிப்பதில் மட்டுமில்லாமல் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும்.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை கோயிலில் காணப்படும் மட்டுமொரு ஓவியம்.

இவையெல்லாம் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டிருகின்றன. இதனாலேயே தான் இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருகின்றன.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்றும், பௌர்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

மஹா சிவராத்திரியும் இங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோயில்!!

தஞ்சை பெரிய கோயில்!!

தமிழகத்தில் இல்லாமல் வெளிநாடுகளில் வசிப்பவராக இருந்து இதுவரையிலும் நீங்கள் தஞ்சாவூருக்கு வந்ததில்லை என்றால் நிச்சயம் ஒருமுறையேனும் குடும்பத்தினருடன் வரப்பாருங்கள். தமிழரின் உச்சபட்ச பெருமையின் பிரமாண்டத்தை காண தவறிவிடாதீர்கள்.

தஞ்சை பெரிய கோயிலை பற்றிய மேலும் அதிக விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X